இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. இனியது என்பது இனிமையானது. வாழ்க்கையில் செய்யத்தக்க நற்பண்புகளை இனியது என ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இவர் கூறும் நற்பண்புகளை வாழ்க்கையில் கடைபிடித்தல் இனிது.
பிச்சைபுக்
காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில்
கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர்
முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும்
மேலாயார்ச் சேர்வு. - 1
பிச்சையெடுத்தாவது கற்பது
இனிது.
அப்படி கற்ற கல்வி நல்ல
சபையில் உதவுவது மிக இனிது.
முத்தையொக்கும் மகளிரது
வாய்ச்சொல் இனிது.
அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.