வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 மே, 2009

ஆற்றுப்படை




கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் ஆட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்


தொல்காப்பியம்-1037
என்பது தொல்காப்பிய நூற்பா இதில் ஆற்றப்படையின் இலக்கணம் கூறப்படுகிறது.ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்துதல் என்பதைக் குறிப்Gதாகும். சங்க காலத்திலேயே தனிப்பெரும் இலக்கியமாக ஆற்றுப்படை வளர்ச்சி பெற்றிருந்தது.

கூத்தர் ( கூத்தாடக் கூடிய கலைஞர்கள்)
பாணர் (யாழ்கொண்டு பண் இசைக்கக் கூடியவர்கள்
சிறு யாழை வாசித்தால் சிறுபாணர் என்றும்,
பேரியாழை வாசித்தால் பெரும் பாணர் என்றும் பெயர் பெறுவர்.)
பொருநர் ( ஏர்களம்இபாடுநர்,போரக்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகைப்பட்ட பொருநர்கள் இருந்தனர்)
விறலி (விறல் பட – மெய்பாடு தோன்ற – உணர்வுகளை வெளிப்படுத்தி திறம்பட ஆடும் ஆடல்மகள்))

கூத்தர், பாணர், பொருநர்,விறலி ஆகியோரை சங்க காலத்தில் வாழ்ந்த
கலைஞர்களாக அறிய முடிகிறது. இவர்கள் பாடல் இசைத்தல்,கூத்தாடுதல், ஆடுதல் எனப் பல்வேறு திறன்களையும் பெற்றிருந்தனர்.

வறுமை காரணமாக அரசனைப் பார்த்து தம் திறன்களை வெளிப்படுத்தி பரிசில் பெற்று வருவதற்காக நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்வர்.
அப்போது தம்மைப் போல் வறுமை காரணமாக அரசனை நாடிப் பரிசில் பெற்றுத் திரும்பி வரும் கலைஞர்களைக் காண்பர்.

அவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர் பெறவிருக்கும் கலைஞரை ஆற்றுப்படுத்துத் ஆற்றுப்படையாகும்.

அந்த அரசனிடம் எவ்வாறு செல்வது,அவன் என்னென்ன பரிசில் தருவான் எனப் பல்வேறு செய்திகளை பரிசில் பெற்ற கலைஞர் சொல்வதுண்டு.

சிறுபாணன் -சிறு பாணனை ஆற்றுப்படுத்தினால் அது சிறுபாணாற்றுப்படை எனப்படும்.
பெரும்பாணன்- பெரும்பாணனை ஆற்றுப்படுத்தினால் அது பெரும்பாணாற்றப்படை எனப்படும்.
கூத்தர்- கூத்தரை ஆற்றுப்படுத்தினால் அது கூத்தராற்றுப்படை எனப்படும்.
விறலி – விறலியை ஆற்றுப்படுத்தினால் அது விறலியாற்றுப்படை எனப்படும்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படைகள் உள்ளன.


திருமுருகாற்றுப்படை
( முருகனிடம் வீடு பேறு பெற்ற பக்தன் வீடு பேறு
பெறவிருக்கும் ஒருவனை ஆற்றுப்படுத்துதல்)
சிறுபாணாற்றுப்படை (சிறுபாணர்- சிறுபாணர்)
பெரும்பாணாற்றப்படை (பெரும்பாணர்- பெரும்பாணர்)
பொருநராற்றுப் படை( பொருநர் – பொருநர்)
கூத்தராற்றுப்படை (கூத்தன் – கூத்தன்)

இந்த ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக சங்க காலத்தில் அரசனுக்கும் கலைஞர்களுக்கும் இருந்த உறவு நிலைகளை அறிய முடிகிறது.சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும்
ஆற்றுப்படைத் துறை அமைந்த சிறுசிறு பாடல்கள் இருப்பதைக்
காண முடிகிறது.

11 கருத்துகள்:

  1. நான் தமிழ் மற்றும் இலக்கிய அறிவை உய்த்து உணர்வதற்கு அரியதோர் வாய்ப்பு.
    மிக்க நன்றி .. தொடருங்கள் தங்கள் பணியை. ;)

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா22 மே, 2009 அன்று AM 9:08

    மிகச் சிறந்த பதிவு இது மிக எளிமையான நடையில் சொல்லியிருக்கீங்க விளக்கத்தை... சிறுபாணாற்றுப்படை
    பெரும்பாணாற்றப்படை
    பொருநராற்றுப் படை
    கூத்தராற்றுப்படை இதைப்பற்றி வெறும் கேள்வி ஞானமே இருந்த நான் இன்று மிகத் தெளிவாக அறித்தேன்...ஒவ்வொரு பதிவிலும் இப்படி நல்ல பயனுள்ள தகவல்கள்...தமிழ் தகவல் வங்கின்னு உங்களுக்கு பட்டமே தரளாம்.. நன்றி குணா

    பதிலளிநீக்கு
  3. திருமுருகாற்றுப்படை என்பது சரியான பெயர் தானா? மற்ற் ஆற்றுப்படை நூல்கள் எல்லாம் யார் ஆற்றுப்படுத்தப்படுகிறார்களோ அவர்களின் பெயரில் இருக்கிறது - சிறுபாணர் ஆற்றுப்படுத்தப்பட்டால் அந்நூல் சிறுபாணாற்றுப்படை; அப்படியே மற்ற நூல்களும். ஆனால் திருமுருகனிடம் ஒருவரை ஆற்றுப்படுத்தும் நூலுக்கு பொருளும் அருளும் தரும் திருமுருகன் பெயரை வைத்தே திருமுருகாற்றுப்படை என்று பெயரா? வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான் நண்பரே...
    பிற ஆற்றுப்படைகளிலிருந்து திருமுருகாற்றுப்படை முற்றிலும் மாறுபட்டது.

    பிற ஆற்றுப்படைகளில் பரிசில் பெற்றவர் பெற இருப்பவனை ஆற்றுப்படுத்துவான். அப்போது தான் பரிசில் பெற்ற அரசனில் அருமை பெருமைகளைக் கூறி பரிசில் பெற ஆற்றுப்படுத்துவான். ஆனால் திருமுருகாற்றுப்படையில் முருகனிடம் வீடுபெறு பெற்ற புலவர் பெறவிருக்கும் புலவரை ஆற்றுப்படுத்துவது போல அமைவது இந்நூலின் சிறப்பாக அமைகிறது..

    இந்நூலுக்கு புலவராற்றுப்படை என்று ஒரு பெயரும் உண்டு என்பதைத் தாங்கள் அறிவீரகள் என நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. இந்நூலுக்குப் புலவராற்றுப்படை என்ற பெயர் உண்டென்று இன்று தான் அறிந்தேன் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆற்றுப்படைகளை பற்றியும் நான் நன்கு அறிந்துக் கொண்டேன் ஐயா. மிக அருமையான பதிவு. தமிழ் பேசும் நல உலகம் தங்களின் இனத்தினைப் பற்றியும், தங்கள் மொழியின் பெருமையினைப் பற்றியும் அறிந்துக் கொள்ள உங்கள் பதிவு நல்லதொருக் கருவியாக உள்ளது....!!!

    பதிலளிநீக்கு
  7. அய்யா வணக்கம் , ஆற்றுப்படை எழுதுவோர் ஆசிரியப் பாவில் தான் எழுதவேண்டுமா ? வேறு பாவினத்திலும் எழுதக்கூடாதா ? அறிய விரும்புகின்றேன்.சோ.வீ.தமிழ்மறையான்- சிங்கப்பூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஆற்றுப்படைகள் யாவும் ஆசிரியப்பாவிலேயே எழுதப்பட்டிருக்கின்றன..

      என்பதால் இப்பாவகை பெரிதும் விரும்பி பின்பற்றப்பட்டு வருகிறது அன்பரே.

      ஆற்றுப்படை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் உடையது. விறலியர், பாணர், கூத்தர், பொருனர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் மேற்கூறிய நால்வகைப் பிரிவினருள் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும். அகவற்பாக்களாக அமையும் இப் பாடல்கள் தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும்..

      பாட்டியல் நூல்களும் இப்பாவகையையே இதற்கெனச் சொல்லிச் செல்கின்றன.

      நீக்கு