வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 19 செப்டம்பர், 2009

அசையும் படங்களை (GIF)வலைப்பதிவில் பொதிய...

funn

இணைய தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. வலைப்பதிவு நுட்பங்களும் வலைப்பதிவுகளை இணையதளத்துக்கு இணையானதாக ஆக்க முயற்சித்து வருகின்றன. வலைப்பதிவு நுட்பங்கள் கூறும் பதிவுகள் பல இருப்பினும் நான் நீண்ட காலம் தேடியும் கிடைக்கதா தொழில்நுட்பத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
பிளாக்கர் டிரிக் உள்ளிட்ட பல இணையதளங்கள் தொழில்நுட்பத் தகவல்களை ஆங்கிலத்தில் அளிப்பதால் தமிழில் தேடும் போது பல நுட்பங்கள் அறிந்து கொள்ள இயலாது போகிறது.

வலைப்பதிவுகளில் அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்வது எப்படி?

வலைப்பதிவுகளில் (jpeg) படங்களைப் பதிவேற்றம் செய்வது போல (gif) அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. மாறாக அசையும் படங்களை சாதாரணமாகப் பதிவுற்றம் செய்தால், அவை அசைவில்லாப் படங்களாகவே காட்சியளிக்கும்.

படிநிலை -1.

இத்தளத்தில் ஒரு இலவசமான பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின் அங்கு பதிவேற்றப் பகுதிக்குச் சென்று நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்பினை பதிவேற்றினால். அவர்கள் ஒரு நிரல்த்துண்டு (ஜாவா ஸ்கிரிப்ட்) தருவார்கள். அதனைக் காப்பி செய்து...









படிநிலை-2.

நம் வலைப்பதிவுக்குச் சென்று நாம் இடுகைப் பகுதியில் படம் எங்கு வரவேண்டுமோ அங்கு நிரலை ஒட்ட வேண்டும்.



இப்போது இடுகையை வெளியிட்டுப் பாருங்கள்...
உங்கள் படம் அசையும் படமாகக் காட்சியளிக்கும்.

16 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு,[சமிபத்திய இடுகைகள் நிறம் மாற்றவும்,தெரியவில்லை.]

    பதிலளிநீக்கு
  2. தலைவா! சூப்பர்!
    அப்படி வாங்க, நம்ம வழிக்கு..,
    வாழ்த்துக்கள்..,

    பதிலளிநீக்கு
  3. இந்த ஒளிரும் பச்சையை மாற்றுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் தேவையான பதிவு.

    நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  5. ஜெரி ஈசானந்தா. 19 September 2009 04:21

    பயனுள்ள பதிவு,[சமிபத்திய இடுகைகள் நிறம் மாற்றவும்,தெரியவில்லை.]

    கருத்துரைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. சூர்யா ௧ண்ணன் said...

    தலைவா! சூப்பர்!
    அப்படி வாங்க, நம்ம வழிக்கு..,
    வாழ்த்துக்கள்..,/

    இலக்கியப் பதிவுகளுக்கிடையே சிறு புத்துணர்வுக்காகவும். என்னைப் போன்றோரும் இதுபோன்ற சில தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் தான் இதுபோன்ற தொழில்நுட்பப் பதிவுகளை இடுகிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. தேவன் மாயம் said...

    இந்த ஒளிரும் பச்சையை மாற்றுங்கள்!/

    நல்லது மருத்துவரே மாற்றிவிட்டேன்..

    பதிலளிநீக்கு
  8. நட்புடன் ஜமால் said...

    மிகவும் தேவையான பதிவு.

    நன்றி முனைவரே/

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. பிரியமுடன்...வசந்த் said...

    useful tips thank you for this pos/

    கருத்துரைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  10. தகவலுக்கு நன்றி ..அப்படியே bloggertricks தள அறிமுகத்திற்கும்

    பதிலளிநீக்கு
  11. வெறும் புத்தாடையில் இருந்த என் தேவதை உங்கள் பதிவை படித்த சில நொடிகளில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாள்.. நன்றி குணா...

    பதிலளிநீக்கு
  12. கிரி said...
    தகவலுக்கு நன்றி ..அப்படியே bloggertricks தள அறிமுகத்திற்கும்/

    மகிழ்ச்சி நண்பரே...

    பதிலளிநீக்கு
  13. தமிழரசி said...
    வெறும் புத்தாடையில் இருந்த என் தேவதை உங்கள் பதிவை படித்த சில நொடிகளில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாள்.. நன்றி குணா...


    மகிழ்ச்சி தமிழ்....

    பதிலளிநீக்கு
  14. மிகவும் பய்னான இடுகை முனைவர் ஐயா.

    என் அடுத்த பதிவு அசையும் படத்தோடு வரும்..!!

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு