வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 10 செப்டம்பர், 2009

நீங்கள் வாழ்வது நாடா? - UPSC EXAM TAMIL - புறநானூறு - 187

மக்கள் வாழ்வது நாடு!
மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)

மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!

மாக்கள் வாழ்வது நாடாகுமா..?

சரி நாடு எது என்ற கேள்வியை வள்ளுவரைக் கேட்போம்...

வள்ளுவப் பெருந்தகையே!

நாடு என்பது எது........?
வள்ளுவர்..

சுருக்கமாகச் சொன்னால்,

உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்
சேராதியல்வது நாடு (குறள்-734.)

அதாவது மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாததே நாடு.
வள்ளுவர் கருத்துப்படி நம் நாட்டை நோக்கும்போது,

பசி – தலை விரித்தாடுகிறது.
பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்டுகிறது.
பகை – இனக்குழு சமூகம் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையிலான பகை ஓய்ந்தபாடில்லை.

( மாவீரன் அலெக்சாண்டரின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்
உலகமே போதாது என்றவனுக்கு இந்தக் கல்லறை போதுமானதாக இருந்தது.)
சரி ஔவையாரை இதே கேள்வியைக் கேட்போம்..

ஔவையாரே நாடு என்பது எது..?

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

(புறநானூறு-187. ஆண்கள் உலகம்!
பாடியவர்: ஔவையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.)

ஔவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..
ஏ! நிலமே..!
நீ ஒன்றில் நாடாகவும்!
ஒன்றில் காடாகவும்!
ஒன்றில் பள்ளமாகவும்!
ஒன்றில் மேடாகவும்!
எப்படி இருந்தாலும்,
ஆடவர் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறாரகளோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்
.

வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் ஆடவரைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட ஆடவர் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.

நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
தீயோர் இருப்பின் அது தீய நிலம்.
“ தன்னிடத்து வாழ்வோரின் இயல்பல்லது
தனக்கென ஓர் இயல்பும் இல்லாதது நிலம்“

என்கிறார் ஔவையார்.

சங்க காலம் மன்னனையும், ஆண்களையும் முதன்மையாகக் கொண்டு இயங்கியதால் ஆடவர் என்று ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் (ஒவ்வொரு ஆணும் பெண்ணும்) மக்கள் யாவரையும் குறிப்பதாகவே இக்கூற்று அமைகிறது.

வள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் கருத்தின்படி நாட்டிற்கான தகுதிகள்.

1. பசியின்றி இருத்தல்
2.நோயின்றி இருத்தல்
3.பகையின்றி இருத்தல்
4.தனி மனித ஒழுக்கத்துடன் இருத்தல்.

1. பசியின்றி இருத்தல்

பசி என்னும் நோய் இல்லாத நாடும். இல்லாத நாளும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது
சங்க இலக்கியங்கள் கலைஞர்களின் பசி என்னும் நோய் தீர்த்த மன்னனை ' பசிப்பிணி மருத்துவன்'என்று போற்றுகின்றன.

பசியை முழுவதும் ஒழிக்க முடியுமா..?
பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதை விட அந்த மீனை எப்படி பிடிப்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள்.
என்பது சீனப்பழமொழி..

எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் உலகில் உள்ள பசிப்பிணியை முழுவதும் நீக்குவது என்பது இயலாது. பசியோடு இருப்போர் எல்லாம் வாழத் தெரியாதவர்கள். அவர்களுக்கு எப்படி வாழ்வது என்ற சொல்லிக்கொடுப்பதே பெரிய தீர்வாக அமையும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் சென்று தனித்தனியாகப் பாடம் நடத்திச் சொல்லிக்கொடுக்க முடியாது.
இன்றைய சூழலில் நிறைய ஊடகங்கள் வந்துவிட்டன.
வாழ் நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்……?

2.நோயின்றி இருத்தல்...

நல்ல சுற்றம், நல்ல மனநிலை, அளவான உணவு, உடற்பயிற்சி ஆகியனவே நோயற்ற வாழ்வின் அடிப்படைகள்..

3.பகையின்றி இருத்தல்
தீதும் நன்றும் பிறர் தர வாராது என்று எண்ண வேண்டும்...

‘வேர்களை அறுத்தோடும்
நதியின் மீதும் கலகலவென்று பூச்சொரியும்
கரையோரத்துக் கிளைகள்...
அறுத்ததற்குக் கோபமில்லையாம்
நனைத்ததற்கு நன்றியாம்
மரம் சொன்னது :
''இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்''

என்பார் வைரமுத்து..

ஒரு கண்ணத்தில் அறைந்தால் இன்னொரு கண்ணத்தைக் காட்டு என்றாறாம் இயேசுநாதர்...

எனக்கு வந்த குறுந்தகவல்..

'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால்
நீ அவன் மீது பூவை எறி
அவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால்
நீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'

இது நகைச்சுவை மட்டுமல்ல
நிகழ்கால உண்மையும் கூட அதுதான்..
எனக்கு ஒரு கண்போனால் என் எதிரிக்கு இரண்டுகண்களும் போக வேண்டும் என்றே எண்ணுகிறோம்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'-அதனால் முடிந்தவரை பகையின்றி வாழ முயற்சிப்போம்.

4.தனி மனித ஒழுக்கத்துடன் இருத்தல்.

தனி மனித ஒழுக்கம் என்பது ஒரு நாட்டின் நிலையை உயர்த்திக் காட்ட வல்லது.

சான்றாக ஒரு சிறிய கதை,

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவன் தன் மக்களிடம் நாளை நம் ஊரிலுள்ள கோயிலில் பாலாபிடேகம் செய்யப் போகிறோம் அதனால் ஒவ்வொருவரும் நம் அரண்மனை முன் உள்ள தொட்டியில் ஒவ்வொரு லிட்டர் பாலை பொழுது விடிவதற்கு முன்னர் ஊற்றி விட வேண்டும் என்றானாம்
அந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நாம் ஒருவர் மட்டும் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றினால் என்ன தெரியவா போகிறது என்று ஒவ்வொருவரும் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றினார்களாம். பொழுது விடிந்து தொட்டியைப் பார்த்தால் ஒரு சொட்டுக்கூட அதில் பால் இல்லையாம்.

இந்தக் கதை வாயிலாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது....
ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்தது தான் சமூகம்..
ஒவ்வொரு தனிமனிதத் தவறுகளும் அவர் வாழும் சமூகத்தைப் பாதிக்கும் என்பதே!வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினாராம் வள்ளலார்..
இது பிற உயிரையும் தன்னுயிர் போல எண்ணியதால் வந்த விளைவு..
ஓரறிவிலிருந்து உயிர்கள் உள்ளன..
பிற உயிர்களையும் தன்னுயிர் போல எண்ண முயற்சி செய்வோம்.

மாக்களாக வாழாது மக்களாக வாழ முயல்வோம்
நாம் வாழும் நிலத்தை நல்ல நாடாக்க முயல்வோம்

26 கருத்துகள்:

 1. வேர்களை தேடி வந்தேன், அங்கே விழுதான பதிவுகளை பற்றி நின்றேன்.
  வாழ்த்துகள் .குணா.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு........
  புகைப்படங்கள் மிக அருமை (வாவ்) ............
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. மக்கள் வாழ்வது நாடு!
  மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)

  மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!

  மாக்கள் வாழ்வது நாடாகுமா..?
  மக்கள் வாழ்வது நாடு!
  மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)

  மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!

  மாக்கள் வாழ்வது நாடாகுமா..?

  wowwwwwwwwwwww super guna....

  பதிலளிநீக்கு
 4. பசி – தலை விரித்தாடுகிறது.
  பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்டுகிறது.
  பகை – இனக்குழு சமூகம் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையிலான பகை ஓய்ந்தபாடில்லை.

  ஆம் அந்த நம்பிக்கையும் இனியில்லை....

  பதிலளிநீக்கு
 5. ( மாவீரன் அலெக்சாண்டரின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்
  உலகமே போதாது என்றவனுக்கு இந்தக் கல்லறை போதுமானதாக இருந்தது)

  அந்த மாவீரன் மாளும் முன் அறியவில்லை இதை....

  பதிலளிநீக்கு
 6. ஔவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..
  ஏ! நிலமே..!
  நீ ஒன்றில் நாடாகவும்!
  ஒன்றில் காடாகவும்!
  ஒன்றில் பள்ளமாகவும்!
  ஒன்றில் மேடாகவும்!
  எப்படி இருந்தாலும்,
  ஆடவர் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறாரகளோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்.

  வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் ஆடவரைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட ஆடவர் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.

  அவ்வை மொழி அற்புதம்...

  பதிலளிநீக்கு
 7. எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் உலகில் உள்ள பசிப்பிணியை முழுவதும் நீக்குவது என்பது இயலாது. பசியோடு இருப்போர் எல்லாம் வாழத் தெரியாதவர்கள். அவர்களுக்கு எப்படி வாழ்வது என்ற சொல்லிக்கொடுப்பதே பெரிய தீர்வாக அமையும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் சென்று தனித்தனியாகப் பாடம் நடத்திச் சொல்லிக்கொடுக்க முடியாது.
  இன்றைய சூழலில் நிறைய ஊடகங்கள் வந்துவிட்டன.
  வாழ் நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்……?

  உண்மை தான் குணா....பசியை முழுமையாக ஒழிக்க முடியாது தான்...

  பதிலளிநீக்கு
 8. ஒரு கண்ணத்தில் அறைந்தால் இன்னொரு கண்ணத்தைக் காட்டு என்றாறாம் இயேசுநாதர்...

  எனக்கு வந்த குறுந்தகவல்..

  'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால்
  நீ அவன் மீது பூவை எறி
  அவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால்
  நீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'

  இது நகைச்சுவை மட்டுமல்ல
  நிகழ்கால உண்மையும் கூட அதுதான்..

  ஆமாம் குணா இந்த பதிவு ஏனோ பெரிதாய் ஈர்க்கிறது.எல்லா கருத்தும் மிகவும் சிறப்புள்ளதாக இருக்கிறது....
  இதில் உங்கள் நடை மேலும் ரசிக்க வைக்கிறது..அழகிய எடுத்துக்காட்டோடு மிகச் சிறப்பா சொல்லியிருக்கீங்க..இனியும் இப்படி வித்தியாசமா எழுதுங்க...

  பதிலளிநீக்கு
 9. படங்களும் ஒரு அழகான கதையை கருத்தை சொல்கிறது...

  பதிலளிநீக்கு
 10. வேர்களை தேடி வந்தேன், அங்கே விழுதான பதிவுகளை பற்றி நின்றேன்.
  வாழ்த்துகள் .குணா./(ஈசானந்தா)

  நன்றி ஈசானந்தா......

  பதிலளிநீக்கு
 11. அருமையான பதிவு........
  புகைப்படங்கள் மிக அருமை (வாவ்) ............
  வாழ்த்துக்கள/(உலவு)

  ஒரு இணையதளத்தாரே பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

  பதிலளிநீக்கு
 12. மக்கள் வாழ்வது நாடு!
  மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)

  மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!

  மாக்கள் வாழ்வது நாடாகுமா..?
  மக்கள் வாழ்வது நாடு!
  மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)

  மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!

  மாக்கள் வாழ்வது நாடாகுமா..?

  wowwwwwwwwwwww super guna..../(தமிழரசி)

  நன்றி தமிழ்!

  பதிலளிநீக்கு
 13. பசி – தலை விரித்தாடுகிறது.
  பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்டுகிறது.
  பகை – இனக்குழு சமூகம் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையிலான பகை ஓய்ந்தபாடில்லை.

  ஆம் அந்த நம்பிக்கையும் இனியில்லை....

  (தமிழரசி)

  வாழும் வரை போராடு!
  வழி உண்டு என்நே வாழு!!!!!!!

  பதிலளிநீக்கு
 14. ( மாவீரன் அலெக்சாண்டரின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்
  உலகமே போதாது என்றவனுக்கு இந்தக் கல்லறை போதுமானதாக இருந்தது)

  அந்த மாவீரன் மாளும் முன் அறியவில்லை இதை....
  (தமிழரசி)

  ஆம் உண்மைதான்!!!!!

  பதிலளிநீக்கு
 15. ஔவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..
  ஏ! நிலமே..!
  நீ ஒன்றில் நாடாகவும்!
  ஒன்றில் காடாகவும்!
  ஒன்றில் பள்ளமாகவும்!
  ஒன்றில் மேடாகவும்!
  எப்படி இருந்தாலும்,
  ஆடவர் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறாரகளோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்.

  வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் ஆடவரைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட ஆடவர் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.

  அவ்வை மொழி அற்புதம்...

  (தமிழரசி)

  கருத்துரைக்கு நன்றி!!!!!!

  பதிலளிநீக்கு
 16. விளக்கங்களுடன் பதிவு அருமை.படமும் துணை நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 17. விளக்கங்களுடன் பதிவு அருமை.படமும் துணை நிற்கிறது/

  கருத்துரைக்கு நன்றி மாதவி!

  பதிலளிநீக்கு
 18. தமிழரசி said...
  ஒரு கண்ணத்தில் அறைந்தால் இன்னொரு கண்ணத்தைக் காட்டு என்றாறாம் இயேசுநாதர்...

  எனக்கு வந்த குறுந்தகவல்..

  'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால்
  நீ அவன் மீது பூவை எறி
  அவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால்
  நீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'

  இது நகைச்சுவை மட்டுமல்ல
  நிகழ்கால உண்மையும் கூட அதுதான்..

  ஆமாம் குணா இந்த பதிவு ஏனோ பெரிதாய் ஈர்க்கிறது.எல்லா கருத்தும் மிகவும் சிறப்புள்ளதாக இருக்கிறது....
  இதில் உங்கள் நடை மேலும் ரசிக்க வைக்கிறது..அழகிய எடுத்துக்காட்டோடு மிகச் சிறப்பா சொல்லியிருக்கீங்க..இனியும் இப்படி வித்தியாசமா எழுதுங்க(தமிழரசி)

  தங்களள் கருத்துரைகளுக்கு நன்றி தமிழ்!!!!!!!

  பதிலளிநீக்கு
 19. சீரிய புகைப்படம் மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
 20. அருமையான இடுகை குணசீலன்.
  வாழ்த்துக்கள்!

  //
  ஒரு கண்ணத்தில் அறைந்தால் இன்னொரு கண்ணத்தைக் காட்டு என்றாறாம் இயேசுநாதர்...
  //
  -->
  ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டு என்றாராம் இயேசுநாதர்...

  பதிலளிநீக்கு
 21. வேர்கள் நன்கு ஊன்றட்டும்...

  பதிலளிநீக்கு
 22. புகைப்படம் என்னை ஏதோ செய்கிறது!
  சொல்ல வார்த்தையில்லை..
  பகிர்வுக்கு நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 23. இலக்கியச் சுவை சொட்டும்
  இனிய பதிவு இது!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு