Sunday, November 1, 2009

தீண்டாய் மெய் தீண்டாய்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்சுவாசக் காற்றே என்று ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதில் தீண்டாய் மெய் தீண்டாய் என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடலின் தொடக்கத்தில்……….

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீ்ம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

(குறுந்தொகை-27)

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

(தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள் என்று வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது)

என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடல் சங்கஇலக்கியத்தில் இடம்பெற்ற குறுந்தொகை என்பது பலருக்குத் தெரியாது.

இந்தப்பாடலின் பொருள்…

தலைவனின் பிரிவைத் தலைவி ஆற்றாள் என்று வருந்தினாள் தோழி. தலைவியோ நான் ஆற்றியிருந்தாலும் என் அழகு எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாது பசலையால் அழிந்து போகிறதே என்று வருந்துகிறாள்.

நல்ல பசுவின் இனிய பால், அப்பசுவின் கன்றும் உண்ணாது, பசுவுக்குச் உரிமையாளர்களுக்கும் பயன்பாடாமல் மண்ணில் சிந்தி அழிந்தது போல, என் அழகு எனக்கும் பயன்படாது என் தலைவக்கும் பயன்படாது பசலையால் விரும்பி உண்ணப்படுகிறதே என்று வருந்துகிறாள் தலைவி.“


இதுவே பாடலின் பொருள்..

இவ்வினிய பாடலே ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருமாறியது.

தமிழ்த்திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் நீண்ட நெடிய நாட்களாகவே இருக்கிறது. கண்ணதாசன், வைரமுத்து, தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று…..

வேர் எது?
விழுது எது?

என்ற தெளிவு
!

திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..
என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..
அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…..

வேர் சங்க இலக்கியம்
விழுது இன்றைய கவிதைகள்


என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது…

24 comments:

 1. ஆஹா.. மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். என்ன கொடுமை சார் இது? இப்படியும் பலர் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்தப் பதிவின் விளக்கம் அருமைன். நன்றி


  //திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..
  என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..
  அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…..

  ReplyDelete
 2. வேர்.. விழுது.. விளக்கம் அருமைங்க.. !

  //திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா.. //

  நான் லியோனின்னு இல்ல நினைச்சேன்.. =))

  ReplyDelete
 3. முனைவர் அவர்களே! நேற்றுதான் இப்பாடலைக் கேட்டேன். பழைய இலக்கிய பாடல் என்பது புரிந்தது.பொருள்தான் புரியாமல் இருந்தது.விளக்கியமைக்கு நன்றிகள் பல.மற்றும் ஒரு சந்தேகம் "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" - இதில் நமனை அஞ்சோம் என்பதில் "நமனை" என்பதன் பொருள் என்ன. இதை ஒரு பதிவாகவே போட்டால் என்போன்றோர் பயனடைவரே!

  ReplyDelete
 4. வேர் சங்க இலக்கியம்
  விழுது இன்றைய கவிதைகள்

  என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது…

  nice sir

  ReplyDelete
 5. நண்பரே வணக்கம் எனக்கு அர்த்தசாஸ்திரம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளது அதை பற்றி எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்
  நன்றி

  ReplyDelete
 6. நல்ல சிந்தனை நண்பரே...
  தொடர என் வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. நவாப்ஜான், துபாய்.November 1, 2009 at 3:14 PM

  நீண்ட நாட்களாகவே அந்த வரிகளுக்கான அர்த்தத்தை தேடிக் கொண்டிருந்தேன். எங்கு தேடுவது என்பதிலும் குழப்பம் மற்றும் சுணக்கம். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. //திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா.. என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..//

  `ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' - சொன்னவர் அண்ணாதுரை

  திருக்குறள் - இயற்றியவர் சாலமன் பாப்பையா

  `குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்' - இயற்றியவர் வாலி. (`அடி ராக்கம்மா')

  மேலும்...

  ReplyDelete
 9. இது வரை நானும் இந்தப் பாடலை பாடலாகத்தான் கேட்டிருக்கிறேன். இதில் ஒரு இலக்கியம் இருப்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். நண்பரே உங்களை ஒரு தொடர்ப்பதிவு எழுத எழுத அழைத்துள்ளேன்.....எனது தளத்தை வந்துப் பாருங்கள். http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post.html

  ReplyDelete
 10. Amazing Photos 4 All said...

  ஆஹா.. மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். என்ன கொடுமை சார் இது? இப்படியும் பலர் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்தப் பதிவின் விளக்கம் அருமைன். நன்றி


  //திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..
  என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..
  அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…/

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 11. கலகலப்ரியா said...

  வேர்.. விழுது.. விளக்கம் அருமைங்க.. !

  //திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா.. //

  நான் லியோனின்னு இல்ல நினைச்சேன்.. =)

  கருத்துரைக்கு நன்றி ப்ரியா..

  ReplyDelete
 12. எசாலத்தான் said...

  முனைவர் அவர்களே! நேற்றுதான் இப்பாடலைக் கேட்டேன். பழைய இலக்கிய பாடல் என்பது புரிந்தது.பொருள்தான் புரியாமல் இருந்தது.விளக்கியமைக்கு நன்றிகள் பல.மற்றும் ஒரு சந்தேகம் "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" - இதில் நமனை அஞ்சோம் என்பதில் "நமனை" என்பதன் பொருள் என்ன. இதை ஒரு பதிவாகவே போட்டால் என்போன்றோர் பயனடைவரே!  மிக்க மகிழ்ச்சி நண்பரே...

  நமன் என்பது எமனைக் குறி்க்கும்..

  சமணத்திலிருந்து திருநாவுக்கரசர் சைவத்துக்கு மாறினார். அதனால் சமண சமயத்திலிருந்த மகேந்திர வர்மபல்லவன் திருநாவுக்கரசருக்குத் தொல்லை கொடுத்தான்..

  அப்போது தான் திருநாவுக்கரசர்

  நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம்

  என்றார்..

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 13. Delete
  Blogger ஸ்ரீ.கிருஷ்ணா said...

  வேர் சங்க இலக்கியம்
  விழுது இன்றைய கவிதைகள்

  என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது…

  nice si

  கருத்துரைக்கு நன்றி கிருஷ்ணா..

  ReplyDelete
 14. Blogger RAJESH said...

  நண்பரே வணக்கம் எனக்கு அர்த்தசாஸ்திரம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளது அதை பற்றி எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்
  நன்றி..

  தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி நண்பரே..

  இதோ தாங்கள் பார்வைியிட வேண்டிய முகவரி...

  http://books1.dinamalar.com/BookView.aspx?id=2089

  http://www.newbooklands.com/new/product1.php?catid=2&&panum=2996

  http://aanmigakkadal.blogspot.com/2009/06/1.html

  http://ta.wikipedia.org/wiki/சாணக்கியர்

  ReplyDelete
 15. Blogger மா.குருபரன் said...

  நல்ல சிந்தனை நண்பரே...
  தொடர என் வாழ்த்துகள்./

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 16. நவாப்ஜான், துபாய். said...

  நீண்ட நாட்களாகவே அந்த வரிகளுக்கான அர்த்தத்தை தேடிக் கொண்டிருந்தேன். எங்கு தேடுவது என்பதிலும் குழப்பம் மற்றும் சுணக்கம். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்/

  மகிழ்ச்சி நண்பரே...

  ReplyDelete
 17. Delete
  Blogger புலவன் புலிகேசி said...

  இது வரை நானும் இந்தப் பாடலை பாடலாகத்தான் கேட்டிருக்கிறேன். இதில் ஒரு இலக்கியம் இருப்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். நண்பரே உங்களை ஒரு தொடர்ப்பதிவு எழுத எழுத அழைத்துள்ளேன்.....எனது தளத்தை வந்துப் பாருங்கள். http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post.htm

  மகிச்சி நண்பரே..

  ReplyDelete
 18. அருமையான விளக்கங்கள் அய்யா . நன்றி பின் தொடர்வதற்கு

  ReplyDelete
 19. நண்பா தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். வந்துருங்க

  http://vimarsagan1.blogspot.com/2009/11/blog-post_04.html

  ReplyDelete
 20. இன்றைய இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு..

  ReplyDelete
 21. இன்றைய பெரும்பாலான கவிஞர்களுக்கு மரபுக் கவிதை என்றாலே என்னவென்றும் தெரிவதில்லை, யாப்பு இலக்கணத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

  ஏதோ உரைண‌டையை ஒடித்து எழுதிவிட்டால் அது கவிதை என்று பெருமைப் பட்டுக்கொள்வது இயல்பாகிவிட்டது.

  ReplyDelete
 22. அறிவுறுத்தலுக்கு நன்றி மதுமதி
  நன்றி வீர்

  ReplyDelete