Thursday, January 7, 2010

காலெறி கடிகையார்
இல்வாழ்க்கைக்குப் பொருள் தேவையானது. பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது. அதே நேரம் இளமையும் நில்லாதது. விரைவில் கடந்து செல்லக்கூடியது.

தலைவனை பொருள் தேடவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது.
இளமை நில்லாதது அதனால் தலைவியை விட்டு நீங்காதே..

என்று ஒரு மனம் சொல்கிறது.

தலைவனுக்கும் நெஞ்சுக்கும் இடையிலான உரையாடல் இதோ..


தலைவன்
- பொருள் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானது.
அறவழியே வாழவும்.
ஈயென இரப்போருக்கு இல்லை என்று சொல்லாது ஈயவும்,
பொருள் தேவையாகவுள்ளது.


நெஞ்சம்
- பொருள் தேவைதான் நான் இ்ல்லையென்று சொல்லவில்லை. பொருள் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. நீசென்றவுடன் அள்ளிவர பொருளெல்லாம் ஒரே இடத்திலேயேவா கிடைக்கப்போகிறது?

தலைவன்
- சரி அதற்காக இங்கேயே இருந்தால் பொருளுக்கு எங்கே செல்வது?

நெஞ்சம்
- இங்கே இல்லாத வளமா?
உன் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை நீ இங்கேயே பெறமுடியும்.
மேலும் நீ சிந்திக்கவேண்டிய ஒன்றை நீ சிந்திக்கவே இல்லை.

தலைவன்
- என்ன சொல்கிறாய்…?

நெஞ்சம்
- இளமை நில்லாது சென்றுவிடும் என்பதை நீ அறியாயா?
நீ பல நிலங்களையும் கடந்து பொருள் தேடி வரும் போது உன் தலைவி தன் இளமையைத் தொலைத்திருப்பாள். பொருளைக் கூட எப்போது வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம் ஆனால் இளமையைக் காலத்தில் தான் பெறஇயலும்.
உனது இளமையையும் - தலைவியின் இளமையையும் ஒரு சேர நுகராது நீ பொருள் தேடி வந்து என்ன பயன்?

தலைவன்
- ஆம் நீ சொல்வது சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்.

நெஞ்சம்
- தலைவியின் பல்லிலும், இதழிலும் ஊரிய நீரை சுவைத்த நீ கரும்பின் துண்டங்களிலிருந்து வரும் இனியநீர் போன்றதென்று உணர்ந்திருக்கிறாய். அத்தகைய இனிமையான தலைவியையும் அவள் தம் இளமையையும் நீங்கிச் செல்வது சரிதானா? சிந்தித்துப்பார்! உன்னை நீங்கித் தலைவி உயிர் வாழ்வாள் என நினைக்கிறாயா?

தலைவன்
- நீ சொல்வது சரிதான்.
நான் சென்றால் தலைவி உயிர்தாங்கமாட்டாள். அதனால் நான் செல்லவிருந்த பயனத்தை நிறுத்திக்கொள்கிறேன்..

நெஞ்சம்
- ஆம் நல்ல முடிவு. நீ ஈட்ட எண்ணிய பொருளை நீ இங்கேயே பெற்று அறவழியே இன்பவாழ்வு நடத்தலாம்.

என்பது பாடலின் உட்பொருளாகும். இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில தலைவியின் வால்எயிறு ஊரிய நீரை கரும்பின் இனிய சுவையோடு ஒப்பிட்டு நோக்கி “ காலெறி கடிகை“ என்ற கூறியதால் இப்புலவர் காலெறி கடிகையார் என்று பெயர் பெற்றார்.

பாடல் இதோ..இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே.

குறுந்தொகை -267.
பாலை - தலைவன் கூற்று
காலெறி கடிகையார்.(அகத்துறை -மேல் நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்“ என்னும் நெஞ்சிற்கு நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி செலவு அழுங்கியது.)

செல்வத்தால் கிடைக்கும் அறமும், இன்பமும் தலைவியுடன் முறையாக இல்லறம் நிகழ்த்துதலால் பெறாலாம் எனத் தலைவன் கருதினான். அறனும் இன்பமும் பெறுவதற்குரிய பொருளைத் தேடப் புகுந்து அறமும் இன்பமும் இழப்பதற்கு நான் தயாராக இல்லை. அதனால் எனது பயனத்தை தவிர்கிறேன். என முடிவு செய்கிறான் தலைவன். பயனத்தைத் தவிர்த்தல் செலவழுங்குதல் என்னும் அகத்துறையாகும்.

இப்பாடலின் வழியாக “காலெறி கடிகையார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தையும். செலவழுங்குதல் என்னும் அகத்துறைக்கான விளக்கத்தையும் அறியமுடிகிறது.

24 comments:

 1. அருமையான பதிவு

  குறுந்தொகை பாட‌லில் எவ்வளவு அர்த்தம் உள்ளது .

  வாழ்க்கையை தொலைத்து விடலாமா ..

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 3. அருமையான பாடல், அழகான விளக்கம்...

  ReplyDelete
 4. இந்த பாடலை உணர்ந்து வாழ்ந்தால் இன்றைக்கு தலைப்புச் செய்திகளில் வரும் நிலைமை வராது.

  ReplyDelete
 5. மகிழ்ச்சி.. தொடருங்கள் உங்கள் பணியை!!

  ReplyDelete
 6. T.V.Radhakrishnan said...

  அருமையான பதிவு//
  நன்றி நண்பரே..

  ReplyDelete
 7. Sangkavi said...

  அருமையான பாடல், அழகான விளக்கம்...//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 8. குடந்தை அன்புமணி said...

  இந்த பாடலை உணர்ந்து வாழ்ந்தால் இன்றைக்கு தலைப்புச் செய்திகளில் வரும் நிலைமை வராது.//

  உண்மைதான் நண்பரே..

  ReplyDelete
 9. கலையரசன் said...
  மகிழ்ச்சி.. தொடருங்கள் உங்கள் பணியை!!


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 10. இல்வாழ்க்கைக்குப் பொருள் தேவையானது. பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது. அதே நேரம் இளமையும் நில்லாதது. விரைவில் கடந்து செல்லக்கூடியது.
  ..............இன்றைய இடுகை - கரும்பின் இனிப்பு. அருமை.

  ReplyDelete
 11. வாழ்வியல் வழிகாட்டியாக இந்த குறுந்தொகைப் பாடல். :-)
  இதுபோல நீங்கள் விளக்கினால் தான் எங்களுக்கு பொருள் விளங்கும்...

  ReplyDelete
 12. புரியும்படியான எளிமையான விளக்கம்.
  அருமை, தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

  ReplyDelete
 13. கலையரசன் said...
  மகிழ்ச்சி.. தொடருங்கள் உங்கள் பணியை!!


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  January 7, 2010 5:46 AM
  Delete
  Blogger Chitra said...

  இல்வாழ்க்கைக்குப் பொருள் தேவையானது. பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது. அதே நேரம் இளமையும் நில்லாதது. விரைவில் கடந்து செல்லக்கூடியது.
  ..............இன்றைய இடுகை - கரும்பின் இனிப்பு. அருமை//

  கருத்துரைக்கு நன்றி சித்ரா..

  ReplyDelete
 14. ரோஸ்விக் said...

  வாழ்வியல் வழிகாட்டியாக இந்த குறுந்தொகைப் பாடல். :-)
  இதுபோல நீங்கள் விளக்கினால் தான் எங்களுக்கு பொருள் விளங்கும்...//

  நன்றி ரோஸ்விக்..

  ReplyDelete
 15. சைவகொத்துப்பரோட்டா said...

  புரியும்படியான எளிமையான விளக்கம்.
  அருமை, தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

  கருத்துரைக்கு நன்றி அன்பரே..

  ReplyDelete
 16. இப்பொதெல்லாம் தலைவியை பிரிந்து பொருள் தேடி அலையும் காலம். கொடுமை...

  ReplyDelete
 17. இதனைப் பொருள்வயிற்பிரிவு என்று சங்கத் தமிழர் அழைத்தனர் நண்பரே..

  ஓதல் (கல்வி)
  பகை
  தூது

  என பிரிவை மூவகைப்படுத்தினர்.

  ReplyDelete
 18. பொருள் தேவை எக்காலகட்டதிலும் மாறவேயில்லை...

  பாடலும் நீங்கள் அதை எடுத்துரைத்த விதமும் அருமை குணா....

  ReplyDelete
 19. //கரும்பின்
  காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
  வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
  கோலமை//

  மனதில் நிற்கும் அழகான வரிகள்......வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. Blogger தமிழரசி said...

  பொருள் தேவை எக்காலகட்டதிலும் மாறவேயில்லை...

  பாடலும் நீங்கள் அதை எடுத்துரைத்த விதமும் அருமை குணா....//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்..

  ReplyDelete
 21. ஆரூரன் விசுவநாதன் said...

  //கரும்பின்
  காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
  வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
  கோலமை//

  மனதில் நிற்கும் அழகான வரிகள்......வாழ்த்துக்கள்//

  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 22. நல்ல கருத்துக்களை உடைய இடுகைகள். சமயம் கிடைக்கும் போது எல்லாம் படிக்கின்றேன். நன்றி.

  ReplyDelete