வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 23 செப்டம்பர், 2025

அருள் உரிமை - ஆசிய ஜோதி - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 


2. அருள் உரிமை

தேவதத்தன் அன்னப்புள்ளை எய்தல்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞராவார். எட்வின் அர்னால்டின் ‘Light of Asia’ என்ற நூலைத் தழுவி தமிழில், ஆசிய ஜோதி என்ற நூலை எழுதினார். கௌதம புத்தரின் வரலாற்றையும் அவர்தம் கொள்கைகளையும் விளக்குவதாக இந்நூல் திகழ்கிறது.

விழுமியம் - கருணை

அருள் என்றால் இரக்கம் என்று பொருள் மனிதாபிமானம், ஜீவகாருண்யம், உயிரிரக்கம், கண்ணோட்டம் எனப் பலவாறு இதனை அழைக்கிறோம். இப்பாடலில் அன்னப் பறவையை எய்த தேவதத்தன் அது தனக்குச் சொந்தம் என்கிறான். சித்தார்த்தரோ அப்பறவை இறக்கவில்லை உயிருடன் உள்ளது அது தனக்குச் சொந்தம் என்றார். இருவரின் நோக்கம் என்ன என்று உரைக்கும் இக்கவிதை நிறைவாக இரக்கம் அதாவது அருள் உடையவர்களுக்கே இந்த அன்னப்பறவை சொந்தம் என்று முடிவாகிறது.

உலகம் முழுதும் ஒருகுடை யின்கீழ்
ஆளும் அண்ணல் அரண்மனை யருகில்
மலர்ந்த மலர்கள் மணமிக வீசப்
பொறிவண்டு.ஆடும் பூம்பொழில் மீது
,
வடதிசை இமய மாமலை அமர்ந்த (5)
வாழிடம் நோக்கி
, வளரும் அன்பால்
உருகிய உள்ளம் ஒழுகிய தென்னப்
பாடியே அன்னப் பறவைகள் வான
வீதி வழியே விரைந்து சென்றன.
செல்வது கண்டு
, தேவ தத்தன் - (10)
அரசிளங் குமரற்கு அண்டிய உறவினன்
வில்லினை வளைத்து வெய்யதோர் பாணம்
எய்து நின்றனன்! எய்தஅப் பாணம்
முதன்முதலாக முன்னர்ச் சென்ற
அன்னப் பறவையின் அதன்சிறை யதனில் (15)
படவே: ரத்தம் பாயப் பறவையும்
தளர்ந்து சுருண்டு தரைவில் விழுந்தது.

அரண்மனைக்கு அருகில் ஒரு பூந்தோட்டத்தில் பூக்கள் மணம் வீச, வண்டுகள் ரீங்காரமிட அழகான சோலை, இமயமலை பகுதியிலிருந்து தன்னுடைய சொந்த இருப்பிடத்தை நோக்கி அன்னப்பறவைகள் கூட்டம் அப்படியே வானத்தில் பறந்து சென்றன. அதை சித்தார்த்தன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்த சித்தார்த்தனுக்கு உறவினனான தேவதத்தன் என்ற ஒரு அரசங்குமரன் தன்னோட வில்லை வளைத்து எய்த அம்பு அன்னப்பறவைக் கூட்டத்தில் முதலில் பறந்த போயிட்டு அன்னப்பறவை மேல் தைதத்து.ப்பறவை ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து, சித்தார்த்தன் முன் தரையில்  சுருண்டு விழுந்தது.

சித்தார்த்தன் அதை எடுத்தல்

விழுந்த அப்பறவை, மேனி முழுதும்
ஒழுகி ஓடும் உதிரம் புரளத்
துள்ளித் துள்ளித் துடிப்பது கண்டு
, (20)
சிந்தை கனிந்து
, திருமா மன்னரின்,
செவ்வக் குமாரன் சித்தார்த் தன்போய்
,
மலர்ந்து விரியா வாழைக் குருத்தினும்
தண்ணிய கரங்களால் தாங்கி எடுத்து
,

மடியில் வைத்து மார்போடு அணைத்துத் (25)
தழுவித் தழுவித் தளர்ச்சி நீக்கினன்.
அப்பால்,
இடக்கையிற் பறவையை ஏந்தி, அம்பினை
வலக்கை யதனால் வாங்கி, வடிந்த
உதிரம் மாற்றி, உறுத்திய புண்ணில் (30)
தேனும் தளிரும் சேர்த்துப் பிசைந்து
பூசியே வருத்தம் போக்கினன்,ஆங்கே
இத்தனை அன்பு காட்டினன் எனினும்
அவன்,
நோவு நொம்பலம் நோயின் தன்னம (35)
இந்நாள் வரையிலும் யாதுஎன அறியான்.
ஆதலின்,
பறவையின் மீது பாய்ந்த அம்பின்
முனையைத் தனது முழங்கை யதனில்
அமுக்கிப் பார்த்தனன்; 'ஐயோ!" என்றனன்; (40)
பரித்து பின்னும் பறவையை எடுத்துத்
தாயினும் இரங்கித் தழுவி அணைத்தனன்.

சித்தார்த்தன் விரைந்து சென்று தன் மென்மையான கரங்களால் தாங்கி எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். தழுவித் தழுவி அந்த பறவையினுடைய வருத்தத்தைப் போக்கினார். இடக்கையில அந்த அன்னப்பறவையை ஏந்தி அதன்மேல் பாய்ந்த அம்பை வலக்கையில் எடுத்தார். ரத்தம் பெருகி ஓடியது கண்டு வருந்தி அந்தப் புண்ணில் தேனும் தளிரும் சேர்த்துப் பிசைந்து மருந்து பூசி அன்னப்பறவையின் வருத்தம் போக்கினார். வருத்தம், துன்பம், வலி ஏதும் அறியாத சித்தார்த்தன் அந்த பறவையின் மீது இருந்தது அம்பின்  முனையை எடுத்து தன்னுடைய முழங்கையில வச்சு அமுக்கி பார்த்து ஐயோ என்று வருந்தினார். பிறகு இந்த வலியை இப்பறவை எவ்வாறு தாங்கும் என்று மேலும் தாய் குழந்தையைத் தாங்குவதுபோல இரக்கத்துடன் தழுவினார்.

சேவகன் பறவையைக் கேட்டல்

சிறிது நேரம் சென்றபின்,
அங்கோர் சேவகன் வந்து தெண்டனிட்டு, 'எங்கள்
அரச குமரன்ஓர் அன்னப் பறவையை (45)
எய்து வீழ்த்தினன்; வீழ்ந்த இடமும்
மலர்மிரு ரோஜா வனமிது வேயாம்;
யாதும் தாமத மின்றி அவனிடம்
அன்னப் பறவையை அனுப்பிடு மாறுஇங்கு
என்னை உன்பால் ஏவினன்" என்றனன் (50)

சேவகன் மொழிஎலாம் சித்தார்த்தன் கேட்டு, இயம்பிய மறுமொழி இயம்பக் கேண்மின்:

சிறிது நேரத்துக்குப் பின் சேவகன் வந்து இந்த சித்தார்த்தன் காலடியில் விழுந்து வணங்கி, ஐயா எங்கள் அரசகுமரன் தேவதத்தன் ஒரு அன்னப்பறவையை எய்து வீழ்த்தினார். அது விழுந்த இடம் நீங்க இருக்கக்கூடிய இந்த ரோஜா வனம் தான். தாமதமின்றி அந்த அன்னப்பறவையை பெற்றுவருமாறு என்னை அனுப்பினான். அதைக்கேட்ட உயிர்களின் மீது அன்பு கொண்ட சித்தார்த்தனின் மறுமொழி சொன்னார்.

சித்தார்த்தன் மறுமொழி

எய்த அம்பினால் -பறவை
இறந்து வீழ்ந்திடுமேல்,
எய்த வர்க்காகும் -உரிமை;
யாதும் ஐயமில்லை.

நீண்ட சிறகினிலே-விசைதான்
நின்றி ருப்பதல்லால்,
மாண்ட தில்லை அன்னம்-உயிர்த்து
வாழு கின்றதப்பா!

சந்தேகம் வேண்டாம்-அதனைத்
தரமு டியாதப்பா!
எந்த உயிரையும்-காப்பது
என் கடமையப்பா!"

தேவதத்தன் எய்த அம்பினால் இந்த பறவை இறந்து விழுந்திருந்தால் அப்பறவை அம்பு செலுத்தியவருக்கு தான் சொந்தம். அதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த தேவதத்தன் விட்ட அம்பு இந்த பறவையின் சிறகில் பட்டு நின்றது. இந்த அன்னப்பறவை சாகவில்லை. ன்னும் உயிருடன் உள்ளது. சந்தேகமே வேண்டாம். அதை தர முடியாது. எந்த உயிரையும் காக்க வேண்டியது என்னுடைய கடமை என்று சேவகனிடம் சித்தார்த்தன் சொன்னார்.

தேவதத்தன் கூறுதல்

சாற்றும் உரைகேட்டுத்-தேவ
 தத்தனும் ஓடிவந்து,
சீற்றம் எழுந்தவனாய்-நின்று
செப்பும் மொழியிதுவாம்;

"மடிய நேர்ந்தாலும் உயிர்த்து
வாழ நேர்த்தாலும்,
படியில் வீழ்ந்திடுமேல் - பறவை
பாணம் எய்ந்தவர்க்காம்.

என்கை அம்பினால் - விழுந்த
இப்ப றவையினை,
சங்கை இல்லாமவ்-இங்கே
தந்திடுவாய், ஐயா!"

இவர்கள் பேசும் உரைகேட்டு தேவதத்தன் அங்கு வந்து. கோபத்துடன் சித்தார்த்தனைப் பார்த்து, செத்து போனாலும் சரி உயிரோட இருந்தாலும் சரி இந்த நிலத்தில் விழுந்த இந்த பறவை, யார் அம்பு எய்தார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம் என்று அப்பறவையைத் தன்னிடம் தருமாறு கேட்டான்.

சித்தார்த்தன் மறுமொழி

சொன்ன மொழிகேட்டான்-ஐயன்
துன்பம் மிக அடைந்தாள்;
அன்னப் பறவையினைக்-கண்னத்தோடு
அணைத்து வைத்துக்கொண்டான் 8

பாரில் உயிரையெல்லாம் - அருளால்
பாது காக்கவந்தோன்,
சீரிய நன்மொழிகள் - உள்ளம்
தெளிந்து கூறுகின்றான்: 9

"இல்லை இல்லையையா! - பறவை
என்பறவை ஐயா!
வல்லடி வழக்கு—நீயும்
வளர்க்க வேண்டாம், ஐயா! 10

தொல்லுலகமெல்லாம் - அருளால்
சொந்த மாக்கவந்தேன்;
வெல்லும் பொருள்களில்-முதலில்
வென்ற பொருளிதாம், 11

எம்ம னிதருமே-உளத்தில்
இரக்க முற்றிடயான்.
செம்மை நெறியினை-நன்கு
தெரிந்து கூறிடுவேன்.

துன்பம் அண்டாமல்--அதனைத்
துரத்தி ஓட்டிடுவேன்
;
இன்பம் இவ்வுலகில் - நிலைக்க
என்றும் வென்றிடுவேன்! 13

மனிதர் மட்டுமல்ல-உலகில்
வாழும் எவ்வுயிரும்
,
இனிய வாழ்வடையும் வழியை
இனிது காட்டிடுவேன்
, 14

என்னு ரைகளைநீ - மறுக்கின்
,
இன்றே இப்பொழுதே
,
மன்னும் நீதிமன்றம்- ஏறி
வழக்கு ரைப்போம்
, ஐயா" 15

தேவதத்தன் சொன்ன மொழி கேட்டு மிகத் துன்பம் அடைந்த சித்தார்த்தன் அன்னப்பறவையைத் தன் கன்னத்துடன் அனைத்து வைத்துக்கொண்டார். இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களை எல்லாம் கருணையால் பாதுகாக்க வந் சித்தார்த்தன் சிறந்த நல்ல மொழிகளால் உள்ளம் தெளிந்து பேச ஆரம்பிக்கிறார். இல்லை ஐயா பறவை என் பறவை. மேலும் மேலும் பேசவேண்டாம் வம்பு வளர்க்க வேண்டாம். இந்த பழமையான உலகத்தை எல்லாம் கருணையினால் பாதுகாக்க வந்தவன் நான். நான் வென்ற பொருள்களிலேயே முதலில் வென்ற பொருள் இந்த அன்னப்பறவைதான். எல்லா மனிதருமே மனதில் இரக்கத்தோடு வாழ்வதற்கான நல்ல வழியை தெரிந்து நான் உனக்கு சொல்றேன். துன்பங்கள் நீங்கி இன்பம் இவ்வுலகில் நிலைக்கும் வழியை நான் காட்டுவேன். என் பேச்சை மறுத்தால் இன்றே இப்போதே நீதி மன்றம் சென்று வழக்குரைப்போம் என்று சித்தார்த்தன் தேவதத்தனிடம் உரைத்தார்

நீதிமன்றம் அடைதல்

இருவரும் அப்பால் இசையா ராகி,
அறநூல் கற்றோர் அறிவிற் பெரியோர்
,
நடுநிலை நீதி நன்கு கண்டோர்
கூடிய மன்றில் குறைகொண்டு ஏகினர். (5)

ஏகவே
,
வழுவற இருதலை வழக்கும் கேட்டு
,
மன்றுளோர் தம்முள் வாதம் செய்தனர்
;
இதுவே நீதியென்று இயம்பினர் சிலரே
;
அதுவே நீதியென்று அறைந்தனர் சிலரே
;
யாதும் துணியாது இருந்தனர் சிலரே
; (10)
முடிவில்
,

இந்நாள் வரையிலும் எவருமே அறியாப்
புலமை மிக்க புரோகிதன் ஒருவன்.
எழுந்து நின்று, யாவரும் கேட்க, 16

அறநூல்களைக் கற்று அறிவில் தெளிந்தோர் உள்ள நீதி மன்றத்தை அடைந்தனர். இருவரின் கருத்துகளையும் கேட்ட சிலர் சித்தார்த்தனுக்கு ஆதரவாகவும் இன்னும் சிலர் தேவதத்தனுக்கு தான் அந்த பறவை சொந்தம் என்றும் கூறுகின்றனர், சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். அப்போது அதுவரை எவரும் அறியாத புலமை மிக்க வேதங்களை ஓதும் புரோகிதன் ஒருவன் வந்து யாவரும் கேட்குமாறு பேசினான்.

புரோகிதன் கூறுதல்

'உயிரைக் கொன்றிடவே -முயலும்
ஒருவ னுக்கு அந்த
உயிரின் மேலேதும் - உரிமை
உண்டோ? கூறும் ஐயா! 17

உயிரைக் காப்பவனே- என்றும்
உயிர்க்கு உடையவனாம்;
அயர்வு வேண்டாம், ஐயா!-இதுவே
அறநூல் விதி ஐயா! 18

இன்னும் வீண்வாதம் -பேசி
இருப்பதேன்! ஐயா!
அன்னம் சித்தார்த்தன்-பொருளாம்
ஐய மில்லை, ஐயா' 19

உயிரை கொல் முயற்சிக்கும் ஒருவனுக்கு அந்த உயிரின் மேல் எந்த உரிமையுமே கிடையாது. உயிரை காப்பவன் எவனோ அவனுக்குதான் அந்த உயிர் சொந்தம். அதனால் சந்தேகமே வேண்டாம். இதுதான் அறநூல் காட்டும் விதி. இன்னும் வீண்வாதம் பேச வேண்டாம். இந்த அன்னப்பறவை சித்தார்த்தனுக்குதான் சொந்தம் அதில் ஐயமில்லை என்றார் புரோகிதர்.

என்று நீதி எடுத்துண ரச்செய்து
மன்றி லிருந்து மாய் மாக
மறைந்து போயினன்; மறையும் அந்நேரம்,
பையர வொன்று பதுங்கி அவ்வழி
ஊர்ந்து செல்வதை ஒருவன் கண்டனன்,
இற்சில காலை தேவரும் இந்த
வடிவந் தாங் வருவதுண்டு என்பரால்!
யாதோ உண்மை? யாவரே அறிவார்? 20

நீதி உரைத்த புரோகிதர், அந்த நீதிமன்றத்திலிருந்து மாயமா மறைந்துபோனார். அந்நேரம் அந்த வழியாக ஒரு பாம்பு ஒன்று ஊர்ந்து போறத அங்கு இருப்போர் யாவரும் பார்த்தனர். சில நேரங்களில் தேவர்கள் இதுபோல வேறு வடிவம் தாங்கி வருவார்கள் யாருக்குத் தெரியும் என்று பேசிக்கொண்டனர்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு என்ற திருவள்ளுவரின் கருத்துக்கு ஏற்ப உலகத்து உயிர்கள் யாவும் அன்புடையவர்களுக்கே சொந்தம் என்ற கருத்து இக்கவிதை வழியாகப் புலனாகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக