Monday, January 25, 2010

பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா?குறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று,

“கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை செயற்கை வாசனைப் பொருள்களாலேயே கூந்தல் மணம் பெறுகிறதா? என்ற கருத்து விவாதிக்கப்பட்டுள்ளது.

திருவிளையாடல் புராணச் செய்தி.


சிவனின் திருவிளையாடல்களுள் “தருமிக்குப் பொற்கிழி அளித்தல்“ என்பதும் ஒன்றாகும்.
தருமி என்பவன் ஏழை அந்தணன் ஆவான். அவன் வறுமையால் வாடிய காலத்தில் சிவன் ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

பாண்டிய மன்னன் செண்பகராமன் தன் மனைவியோடு சேர்ந்திருக்கும் போது அவளின் கூந்தல் மனம் காற்றுக் குதிரையேறி மூக்கு என்னும் பெரும் பாதை தாண்டி மூளை என்னும் ஆய்வுத்தளம் சென்று சேர்ந்தது. அவ்வளவுதான் செண்பக ராமனின் மூளை சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை வாசனைப் பொருள்களைத் தம் கூந்தலில் சூடுவதால் தான் மணம் பெறுகிறார்களா?
என்ற கேள்வி அவனைத் துளைத்தெடுத்தது. பதிலறியாமல்த் தவித்த மன்னன், தன் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடல் இயற்றுபவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக அறிவித்தான்.

இதனை அறிந்து கோயிலில் சிவன் திருவுருவத்தின் முன் புலம்பிய தருமிக்கு இறைவன் ஒரு பாடலை அளித்தான். செண்பகராமனின் ஐயம் தீர்க்கும் தன்மை வாய்ந்த அந்தப் பாடலை எடுத்துச்சென்ற தருமி தமிழ்ச்சங்க அவையோர் முன் மன்னனுக்கு பாடிக்காட்டினான்.

பெண்களின் கூந்தல் இயற்கையிலேயே மனம் வாய்ந்தது என்னும் பொருள்தோய்ந்த அந்தப்பாடலைக் கேட்டு தம் ஐயம் தீர்ந்து மகிழ்ந்த மன்னன் பரிசளிக்க முற்படும்போது, அந்த அவையிலிருந்த நக்கீரர் என்னும் புலவர் தடுத்தார். இப்பாடலில் பிழையுள்ளது என்று தம் கருத்தைத் தெரிவித்தார். நக்கீரரை எதிர்த்து வாதம் செய்ய இயலாத தருமியும் திரும்பிச் சென்றார்.

என்ன நேர்ந்தது என்று வினவிய பாண்டியனிடம் நக்கீரர்,
“எய்தவனிருக்க அம்பை நோகலாமா?

எய்தவன் ஒருவன், ஆம் பாடல் எழுதியவன் வேறொருவன் இவன் பாவம் அம்பு. என்றார்.

தவறான பாடலுக்குப் பரிசளிக்க இருந்தோமே எம்மைக் காத்தீர் என்று மகிழ்ந்தான் மன்னன்.

கோயிலில் தமக்கு நேர்ந்த இழிவை எண்ணி வருந்திய தருமி முன்னர் தோன்றிய சிவன், தருமியை அழைத்துக்கொண்டு பாண்டியனின் அவைக்கு வந்தார். அவையில் நடந்த விவாதம்,
(மூல புராணத்தையும், திருவிளையாடல் புராணம் என்னும் படத்தின் வசனங்களையும் தழுவி,)

சிவன் - எனது பாடலில் பிழை கண்டவன் எவன்?
நக்கீரர் - அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்.
சிவன் - ஓ நக்கீரனா? சங்கைக் கீறு கீறு என்று அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா எனது பாடலில் குற்றம் காணத்தக்கவன்.
நக்கீரர் - சங்கறுப்பது எங்கள் தொழில். சங்கரனாருக்கு என்ன தொழில்.
அரனே அறுந்துண்டு வாழ்வோம். உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.
சிவன் - எமது பாடலில் என்ன குறை கண்டீர்? சொல்லிலா? பொருளிலா?
நக்கீரர்
- சொல்லிலிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். பிழை பொருளில்.
சிவன் - பொருளில் என்ன பிழை கண்டீர்?
நக்கீரர் - பாடலை ஒரு முறை பாடுங்கள்.

சிவன் -

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம்
செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.“

நக்கீரர் - இப்பாடலின் பொருள்.

சிவன் - புரியவில்லையா?
தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைத்திருக்கிறேன்.
நக்கீரர்
- பாடலின் உட்பொருள்?
சிவன் - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்பது.
நக்கீரர் - ஒருபோதும் இல்லை பெண்களில் கூந்தலுக்கு எக்காலத்தும் இயற்கையில் மணம் இல்லை. வாசனைத் திரவியங்களையும், மலர்களையும் தம் கூந்தலில் சூடுவதாலேயே அவர்கள் மணம் பெறுகின்றனர். அன்றி கூந்தலுக்கு இயற்கையில் ஏது மணம்?

சிவன் - ஓ உயர்ந்த குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - அவர்களுக்கும் தான்.

சிவன் - தேவ குலப் பெண்களுக்கு?
நக்கீரர்
- நான் தினமும் வணங்கும் சிவனுக்கு அருகே அமர்ந்து காட்சியளிக்கிறாளே. உமையம்மை அவளுக்கும் கூட கூந்தல் செயற்கை மணம் தான்.

சிவன் - சினமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவராக, நக்கீரா நன்றாப் பார் என்கிறார்.
நக்கீரர் - சற்றும் தன் கொள்கையில் பின்வாங்காதவராக நக்கீரர் எதற்கும் அஞ்சாது. “ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே“ என்றுரைக்கிறார்.

சிவன் - சினம் அடங்காத சிவன் நக்கீரரை சுட்டெரித்துவிடுகிறார். பின்னர் பாண்டியன் சிவனிடம் வேண்டியதற்கிணங்க நக்கீரரை உயிர்ப்பிக்கிறார்.

நக்கீரர்
- நக்கீரரும் பொற்றாமரைக்குளத்திலிருந்து எழுந்து வருகிறார்.

சிவன் ஆடிய திருவிளையாடல்களுள் ஒன்றாக இது அமைகிறது.

குறுந்தொகையில் இரண்டாவது பாடல் இறையனார் இயற்றியதாக உள்ளது. இறையனார் என்ற பெயர் கொண்ட புலவரும் இருந்திருக்கலாம் ஆயினும் இறையனார் என்பவர் இறைவனே என்று நம்பி இப்பாடலையும் திருவிளையாடல் புராணத்தையும் பிற்காலத்தில் வந்தோர் தொடர்புபடுத்திவிட்டனர்.

குறுந்தொகைப் பாடல் இதோ,


2. குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் (தலைவியைத் தலைவன் இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்) பின்னர் தலைவியைச் சந்திக்கும் தலைவன் அவளின் நாணத்தை நீக்குதல் பொருட்டு, மெய்தொட்டுப் பயின்று (தலைவியின் உடல் தொட்டு உரையாடல்) நலம் பாராட்டுதல் ( தலைவியின் அழகு நலத்தைப் பாடுதல்)

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.

பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்க்கை வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக,

பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

(பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண் ஆகியன பெண்களின் ஏழு பருவங்களாகும்)


இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்..


1. இயற்கைப் புணர்ச்சி ( தலைவன் தலைவியை இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்.
2. மெய்தொட்டுப் பயிறல் ( தலைவியைத் தொட்டுப் பேசுதல்)
3. நலம் பாராட்டல் (தலைவியின் அழகு நலத்தைப் பாராட்டுதல்) ஆகிய அகத்துறைகள் விளக்கப்படுகின்றன.
4. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்று சொல்கிறது இப்பாடல்.
5. காமம் செப்பாது - என்ற தொடர் விரும்பியதைக் கூறாது என்றுரைக்கிறது. காமம் என்றசொல் விருப்பம் என்ற பொருளில் வந்தமை புலனாகிறது. (கமம்- நிறைவு)
6. இறையனார் எழுதிய இப்பாடலை திருவிளையாடல் புராணத்தோடு தொடர்பு படுத்தியமை அறியமுடிகிறது.

கொங்கு தேர் வாழ்ககை ஆய்வு.

தமிழுலகம் இப்பாடலை நிறைய விவாதித்து விட்டது. ஆயினும் இவ்வாய்வுகளுள் காலத்தை விஞ்சி நிற்பது, மு.வரதராசன் அவர்களின் “கொங்குதேர் வாழ்க்கை“ என்னும் நூலாகும். இந்நூல் பற்றி இவர் கூறும் போது,
ஆராய்ச்சித் தூண்டு கோல்.


பாட்டின் அமைப்பே ஆராய்ச்சியைத் தூண்டுவதாக உள்ளது. கூந்தலின் மணம் பற்றிய வண்டின் ஆராய்ச்சியைக் கேட்கிறான் காதலன். துணைவியின் கூந்தல் மணம் இயற்கையா? செயற்கையா? என ஆராய்கிறான் பாண்டியன். இப்பாட்டு குற்றமற்றதா? குற்றமுடையதா? என்று ஆராய்கின்றனர் சங்கப்புலவர்களும் நக்கீரனாரும்.
இப்பாட்டு நம் உள்ளத்திலும் ஓர் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. இலக்கிய ஆராய்ச்சிக்கு உரிய முறை யாது? எது உயர்ந்த ஆராய்ச்சி என்று ஆராயுமாறு நம்மைத் தூண்டுகிறயது இப்பாட்டு.

என்று உரைக்கிறார்.

அறிவியல் அடிப்படையில் கூந்தல் மணம்.

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.

42 comments:

 1. எளிய முறையில் அருமையான விளக்கம் .பயனுள்ள தகவல்கள் குணா சார்...

  ReplyDelete
 2. அருமை ... இறுதியாக, பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு என்று தானே கூறுகிறீர்கள் ??

  ReplyDelete
 3. அழகான விளக்கம்.. நான் அறியாத தகவல்...

  ReplyDelete
 4. //கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது.//

  தமிழோடு சேர்ந்த அறிவியல் விளக்கமும் அழகு.

  ReplyDelete
 5. Gokul R said...

  அருமை ... இறுதியாக, பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு என்று தானே கூறுகிறீர்கள் ??

  ஆம் நண்பரே..

  ReplyDelete
 6. மிக்க நன்றி. நான் கூட நக்கீரர் கூறுவது தாம் உண்மை என்று எண்ணியிருந்தேன்.

  ReplyDelete
 7. Sangkavi said...

  அழகான விளக்கம்.. நான் அறியாத தகவல்...


  அப்படியா!!
  மகிழ்ச்சி!

  ReplyDelete
 8. சைவகொத்துப்பரோட்டா said...

  //கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது.//

  தமிழோடு சேர்ந்த அறிவியல் விளக்கமும் அழகு.


  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 9. Gokul R said...

  மிக்க நன்றி. நான் கூட நக்கீரர் கூறுவது தாம் உண்மை என்று எண்ணியிருந்தேன்.

  ஓ அப்படியா மகிழ்ச்சி!!

  ReplyDelete
 10. நண்பரே சொல்ல வந்த கருத்தை அருமையாக சொல்லிச்செல்கிறீர்கள்

  வாழ்க வளமுடன்
  வளர்க உம் தமிழ் தொண்டு

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 11. ஐயா, தமிழ் செய்யுளில் இவ்வளவு விஷயம் இருக்கா? அருமை.

  ReplyDelete
 12. எளிமை அருமை மனசு குளிர்மை.
  நாலாவது தமிழ் கலக்குவது போல் உள்ளுணர்வு தித்திக்குதுங்க
  வாழ்த்துக்கள் தொடருங்கள்

  ReplyDelete
 13. ஜிஎஸ்ஆர் said...

  நண்பரே சொல்ல வந்த கருத்தை அருமையாக சொல்லிச்செல்கிறீர்கள்

  வாழ்க வளமுடன்
  வளர்க உம் தமிழ் தொண்டு

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்


  கருத்துரைக்கு நன்றி ஞானசேகர்.

  ReplyDelete
 14. Chitra said...

  ஐயா, தமிழ் செய்யுளில் இவ்வளவு விஷயம் இருக்கா? அருமை.

  ஆம் சித்ரா..
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 15. Blogger றமேஸ்-Ramesh said...

  எளிமை அருமை மனசு குளிர்மை.
  நாலாவது தமிழ் கலக்குவது போல் உள்ளுணர்வு தித்திக்குதுங்க
  வாழ்த்துக்கள் தொடருங்கள்

  நன்றி றமேஸ்..

  ReplyDelete
 16. முனைவரே முதலில் கூந்தலே இயற்கையானதுதானா ன்னு சோதிக்கனுமில்லை...;))))))

  ReplyDelete
 17. ஆமா..
  ஆமா..

  அது முதலில் அதைத் தான் சோதிக்கனும்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கஅறிவியல் விளக்கமும் அழகுள் தொடருங்கள்

  ReplyDelete
 19. அருமை.
  சிவனும் தங்கள் மாதிரி அன்புடன் பொறுமையோடு தெளிவாக விளக்கி இருக்கலாமே நக்கீரருக்கு, அதை விடுத்து மற்றொருவன் மாற்று கருத்து கூறி விட்டான் என்பதற்காக அவனை வன்முறை மூலம் எரிப்பது எந்த வகையில் நியாயம்.
  .

  ReplyDelete
 20. அருமையான விளக்கம். ஏற்கனவே அறிந்திருந்தும் தங்கள் விளக்கம் சூப்பர்.படமும் அருமையாக உள்ளது.
  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 21. நல் விள்க்கம். திருவிளையாடல் உரையாடலோடு விளகியமை நன்று.

  ReplyDelete
 22. படத்தின் கதை வசனங்கள் மக்களுக்கு பிடித்தவாறு வடிவமைக்கப் படுகின்றன.. உண்மையில் நடந்தவை வேறாக இருக்கும்.. ஆகவே உண்மை நிலையை ஆராய்ந்து உணர வேண்டியது நம் கடமை. ஒரு படத்தில் - " எலா, நம்ம வீரபாண்டிய கட்டபொம்மன் திருநெல்வேலி தானே.. அப்ப அந்த வசனமும் எங்க பாஷையில தானல இருந்துருக்கும்.. என்ன மக்கா சொல்லுதா..." என்பது ஞாபகம் இருக்கிறது.. உங்கள் தமிழ்ச் சேவைக்கு ஏன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 23. நேசமித்ரன் said...

  வாழ்த்துக்கஅறிவியல் விளக்கமும் அழகுள் தொடருங்கள்.


  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 24. குப்பன்.யாஹூ said...

  அருமை.
  சிவனும் தங்கள் மாதிரி அன்புடன் பொறுமையோடு தெளிவாக விளக்கி இருக்கலாமே நக்கீரருக்கு, அதை விடுத்து மற்றொருவன் மாற்று கருத்து கூறி விட்டான் என்பதற்காக அவனை வன்முறை மூலம் எரிப்பது எந்த வகையில் நியாயம்.//


  ஆம் நண்பரே..
  சினம் (கோபம்) நம் பலவீனம்.
  உண்மையான கருத்து கூட நம் சினத்தால் தவறான புரிதலுக்குக் காரணமாகிவிடக்கூடும்.

  ReplyDelete
 25. வேலன். said...

  அருமையான விளக்கம். ஏற்கனவே அறிந்திருந்தும் தங்கள் விளக்கம் சூப்பர்.படமும் அருமையாக உள்ளது.
  வாழ்க வளமுடன்,
  வேலன்.


  நன்றி வேலன்.

  ReplyDelete
 26. புலவன் புலிகேசி said...

  நல் விள்க்கம். திருவிளையாடல் உரையாடலோடு விளகியமை நன்று.


  நன்றி நண்பா.

  ReplyDelete
 27. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  படத்தின் கதை வசனங்கள் மக்களுக்கு பிடித்தவாறு வடிவமைக்கப் படுகின்றன.. உண்மையில் நடந்தவை வேறாக இருக்கும்.. ஆகவே உண்மை நிலையை ஆராய்ந்து உணர வேண்டியது நம் கடமை. ஒரு படத்தில் - " எலா, நம்ம வீரபாண்டிய கட்டபொம்மன் திருநெல்வேலி தானே.. அப்ப அந்த வசனமும் எங்க பாஷையில தானல இருந்துருக்கும்.. என்ன மக்கா சொல்லுதா..." என்பது ஞாபகம் இருக்கிறது.. உங்கள் தமிழ்ச் சேவைக்கு ஏன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள்..


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரகாஷ்.
  தங்கள் கருத்து உண்மைதான். வரலாறு வேறு வழக்கியல் வேறு!
  திரைப்படத்துக்காக பல மாற்றங்கள் செய்வதுண்டு. வட்டார வழக்கு எல்லோருக்கும் புரிவதில் சிக்கல் உள்ளது. அதனால் யாவரும் புரியும் வழக்கில் இவ்வாறு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.

  ReplyDelete
 28. சுவையாகவும் எளிதில் புரியும்படியும் விளக்கியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 29. கருத்துரைக்கு நன்றி டாக்டர்.

  ReplyDelete
 30. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் கிடையாது ஆனால் காதலியின் கூந்தலை மணந்து பாருங்கள் .
  மணம் கட்டாயம் வரும்
  உங்களுக்கு காதலிக்க தெரிந்தால்

  அந்த மணம் அந்த மன்னனுக்கு தெரிந்திருக்கிறது
  அது பிரம்மச்சாரியாக வாழ்ந்த நக்கீரருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

  ReplyDelete
 31. நல்லதோர் விளக்கம் சுந்தர்.

  ReplyDelete
 32. அருமை அருமை
  கொங்கு தேர் ......
  பாடலை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.
  அதற்கான அறிவியல் விளக்கமும் அருமை.

  ReplyDelete
 33. தங்களின் வலைதளம் சுற்றி வர நாள் ஓன்று போதாது நண்பரே பயனுள்ள தகவல்கள் ,,,அனைத்தும் அருமை தங்களின் தமிழ் புலமை கண்டு வியக்கின்றேன்...தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 34. ariviyal karuthupadi koonthal endru pothuvaga kooriyuoolirkal,,,,,,(kadisikku munnaiya paththi-2nd line) aankalin mudiyilum manam undaa? thayavu seithu vilakkam koorungal ?

  ReplyDelete
 35. தாங்களும் பெண்களின் கூந்தலில் இயற்கையாக நறுமணம் உள்ளதா என்பதைப் பற்றி திருவிளையாடற் புராணக் கதையைச் சொல்லி அறிவியல் விளக்கமும் சொல்லி இருக்கின்றீர்கள்! முன்பே பதிந்தும் இருக்கின்றீர்கள்! மிக அழகாகச் சொல்லி உள்ளீர்கள்! விளக்கங்கள் மிக அருமை! இப்போதுதான் பார்த்தோம்! தயை கூர்ந்து மன்னிக்கவும்!

  நாங்கள் எங்கள் தளத்தில் இரு தினம் முன்பு அதைச் சற்று நகைச்சுவையாகக் கொடுத்துள்ளோம்!

  நன்றி!

  ReplyDelete
 36. வணக்கம்
  இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
  http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 37. வணக்கம்
  இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
  http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 38. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!
  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,
  தங்களது தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!
  வருக!
  வலைச்சரத்தில் கருத்தினை தருக!
  http://blogintamil.blogspot.fr/
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 39. அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பதில் தெரியாத ஐயங்களில் ஒன்று இந்த ஐயம் தான் ஐயா.

  அறிவியல் மூலமாகவும் பாடல் மூலமாகவும் எளிமையாக விளக்கி விட்டீர்கள் ஐயா.

  நன்றி.

  ReplyDelete