Tuesday, June 22, 2010

மாணவர் புலம்பல்.வலி மிகும் இடங்கள்.


தமிழ்த்தேர்வில் இலக்கணக்குறிப்பு எழுதுகிறான் மாணவன்.

வலி மிகும் இடங்கள் யாவை?

உடலில் எல்லா இடங்களுமே வலிமிகும்.
நீண்ட தூரம் நடந்தால் காலில் வலிமிகும்.
எல்லோருக்கும் அடிக்கடி தலையில் வலிமிகும்.

வல்லின ஒற்று மிகும் இடங்கள்(தமிழை + கண்டேன்   = தமிழைக் கண்டேன்.)யாவை? என்ற கேள்வியை வகுப்புக்கு வராத, வந்தும் கவனிக்காதவனாக இம்மாணவன் இருந்தாலும் தேர்வு எழுதும் போது இலக்கணம் என்று தயங்காது இப்படியொரு பதிலளிக்கிறான். இப்பதிலை தவறு என்று முற்றிலும் மறுத்துவிடமுடியுமா என்ன?தமிழில் தோன்றிய முதல் சிறுகதை,

“பாட்டி வடைசுட்ட கதை” யே தமிழில் முதலில்தோன்றிய முதல் சிறுகதை என்று எழுதுகிறான் ஒரு மாணவன்.

எத்தனைமுறை வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்னகதையே தமிழின் முதல் சிறுகதை என்ற சொன்னாலும் தேர்வு அறையில் இம்மாணவர்களின் நினைவில் வருவேதே இல்லை. இருந்தாலும் சிந்தித்து இப்படியொரு பதிலை எழுதி என்னைச் சிரிக்கவைத்துவிட்டான் ஒரு மாணவன்.


மாணவர் புலம்பல்.

◊ ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் விழிப்புடனிருக்கும் எனது மூளை, இயங்காமல்ப் போகும் ஒரே இடம் “தேர்வு அறை“

◊ வேதனையோடு இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர்!
வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, தேநீர், வடை.
என்ன கொடுமை இது!

வகுப்பு - தேர்வு


1-3 தினமும் படிக்கிறேன்டா..
3-6 கொஞ்சம் கடினாமாத்தான் இருக்கு..
6-10 தேவையான வினாக்கள் மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன்டா..
10-12 பார்த்து எழுதீரலம்னு இருக்கேன்டா..
கல்லூரி - என்ன சொல்ற.. இன்றைக்குத் தேர்வா????

25 comments:

 1. நல்ல நகைச்சுவை முனைவரே!
  மிக ரசித்தேன்.

  ReplyDelete
 2. அருமையான பதிவு...

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவையான இடுகை. உண்மையும் கூட.

  தற்போதைய கல்வி முறை மாணவ மாணவிகளுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டாமல், வெறுமனே மனனம் செய்வது பற்றிய பயத்தையே கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. வயது - தேர்வு

  1-3 தினமும் படிக்கிறேன்டா..
  3-6 கொஞ்சம் கடினாமாத்தான் இருக்கு..
  6-10 தேவையான வினாக்கள் மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன்டா..
  10-12 பார்த்து எழுதீரலம்னு இருக்கேன்டா..
  கல்லூரி - என்ன சொல்ற.. இன்றைக்குத் தேர்வா????


  ..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... அருமை!

  ReplyDelete
 5. //வேதனையோடு இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர்!
  வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, தேநீர், வடை.
  என்ன கொடுமை இது!//

  நல்ல லாஜிக்கான கேள்வி நண்பா . நானும் ரசித்தேன்

  ReplyDelete
 6. //1-3 தினமும் படிக்கிறேன்டா..
  3-6 கொஞ்சம் கடினாமாத்தான் இருக்கு..
  6-10 தேவையான வினாக்கள் மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன்டா..
  10-12 பார்த்து எழுதீரலம்னு இருக்கேன்டா..
  கல்லூரி - என்ன சொல்ற.. இன்றைக்குத் தேர்வா????//

  தேர்வு அன்னைக்காவது வந்தானே அதுவே பெரிய விஷயம்

  ReplyDelete
 7. @rk guru நன்றி குரு.
  தங்கள் அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 8. @பாலமுருகன் உண்மைதான் நண்பரே..
  சிந்திக்க முடியாத இயந்திரங்களே உருவாக்கப்படுகின்றன.

  ReplyDelete
 9. @பாலமுருகன் உண்மைதான் நண்பரே..
  சிந்திக்க முடியாத இயந்திரங்களே உருவாக்கப்படுகின்றன.

  ReplyDelete
 10. @சசிகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

  ReplyDelete
 11. //வேதனையோடு இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர்!
  வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, தேநீர், வடை.
  என்ன கொடுமை இது//

  கலக்கல்!

  ReplyDelete
 12. //வேதனையோடு இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர்!
  வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, தேநீர், வடை ..//

  :-)))

  ReplyDelete
 13. நல்ல நகைச்சுவை முனைவர் அவர்களே. ரசித்தேன்.

  ReplyDelete
 14. இது ஆசிரியரின் புலம்பல்.

  ReplyDelete
 15. //வேதனையோடு இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர்!
  வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, தேநீர், வடை.
  என்ன கொடுமை இது!// அதானே இதப் பத்தி நானும் யோசிச்சதுண்டு...

  ReplyDelete
 16. @நண்டு @நொரண்டு -ஈரோடு மாணவர்கள் புலம்பவைத்துவிடுகிறார்கள் நண்பரே.

  ReplyDelete
 17. இலக்கணம் நல்ல விளக்கம் ஹா ஹா ஹா

  ReplyDelete
 18. வணக்கம் உறவே

  உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

  நன்றி

  வலையகம்.கொம்
  www.valaiyakam.com

  ReplyDelete
 19. கிண்டலோடு நல்ல கருத்துக்களை அளிளத் தருகிறீர்கள். நன்றி

  ReplyDelete
 20. பாடசாலை கல்வி! மறக்க முடியுமா... மீட்க சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி

  ReplyDelete
 21. migavum sari nanbare,

  vethanaiyodu iruppavanukku verum thanneer........

  ithai oru maanavan ennidam kettuvittan.

  appuram sinthikka mudiyaatha iyanthirangale uruvaakkapadukinrana.
  athuvum migasari.

  aanaal appadipatta iyanthirangalukkuthaan periya niruvanangalil velai kodukkiraarkal. appadi irunthaal maanavarkal eppadi sinthikka vendum enru ennuvaarkal. appadi ennupavarkalai nalla velaiyil ulla iyanthirangal keli seiyaatha?

  ReplyDelete