திங்கள், 28 ஜூன், 2010

அழகான அனுபவம்.
○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவமாகும்.

பாடம்


○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
ஆனால் வாழ்க்கையில்,
தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்!கடவுள்
○ வழிபாடு செய்யுங்கள்..
கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.
ஆனால் சேவை செய்யுங்கள்..
கடவுள் உங்கள் அருகில் வருவார்!

-அன்னை தெரசா.


○ கடவுளுக்கும் மரணம் வரும்.
ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!

தந்தை பெரியார்.

வேலைக்காக
○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்
கோயில் சுற்றும் அம்மா.


குழந்தை○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!

கலீல் ஜிப்ரான்.

32 கருத்துகள்:

 1. ஒவ்வொரு பொன்மொழியும் விலை மதிப்பில்லா முத்து.

  பதிலளிநீக்கு
 2. அருமை. மேலும் இது போல பொன்மொழிகளை பகிர வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. @பாலமுருகன் தொடர்ந்து பதிவு செய்கிறேன் நண்பா..

  கருத்துரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ○// பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
  ஆனால் வாழ்க்கையில்,
  தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்!//

  நல்ல பகிர்வு..

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் சிந்தனை மொழிகள்... பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. அத்தனையும்...அத்தனையுமே பெறுமதியானவை !

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
  www.apnaafurniture.com

  பதிலளிநீக்கு
 8. அருமையான பொன்மொழிகள்.
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. அருமையான கருத்துக்கள். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. நல்ல பொன்மொழிகள் ஐயா. குறிப்பாக "கடவுளுக்கும் மரணம் வரும். மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும் பொது." சூப்பர்...

  பதிலளிநீக்கு
 11. பெரியார் சொன்னது, எழுகோள் (thesis), முரணுகோள் (anti-thesis), விளைகோள் (synthesis) என, ஹைக்கூ இலக்கணத்தில் அமைந்து நிற்பதை வியக்கிறேன். கவிதையாக்கினால் இப்படி:

  கடவுளுக்கும்
  மரணம்
  தன்னம்பிக்கை.

  பதிலளிநீக்கு
 12. //○ கடவுளுக்கும் மரணம் வரும்.
  ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!

  தந்தை பெரியார்.//

  இதை பின்பற்றுபவர்களில் நானும் ஒருவன். நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 13. நண்பருக்கு வணக்கம்,

  அழகான அனுபவம்... பதிவானது உள்ளபடியே சொல்ல வேண்டுமானால் அழகானதே...

  ”வாழ்க்கையில்,
  தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்” என்ற வரிகள் உண்மையிலும் உண்மை. வாழ்க்கைக்கு தேவையான இந்த அனுபவ பாடத்தை கற்றுக் கொள்ள எத்தனை இடங்களில் முட்டி மோதி கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

  சேவை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நாடு விட்டு நாடு வந்து அன்பு மழை பொழிந்த அன்னையின் வரிகளும் போற்றத்தக்கனவே...

  வாழ்த்துக்கள் முனைவரே...

  அன்புடன்
  தமிழார்வன்.

  பதிலளிநீக்கு
 14. @சே.குமார் நீண்டநாட்களுக்குப் பின்னர் வருகைதந்தமைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே.

  பதிலளிநீக்கு
 15. சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு