வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 16 ஏப்ரல், 2011

The body’s pallor (குறுந்தொகை)



Like moss on pond
in the town’s water pond
the body’s pallor
clears

as my lover touches
and touches,

and spreads again,
as he lets go
as he lets go

1.Pond – a small area of still water.
2.Moss – a very small green or yellow plant without flowers that spreads over damp surfaces, rocks,trees,etc
3.Pallor- pale colouring of the face, especially because of illness or fear.

தலைவனை நீங்கினால் ஏற்படும் பிரிவு காரணமாகத் தலைவியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றம் பசலை எனப்படும். பசலையைக் கண்டு ஊரார் அலர் தூற்றுவர் என்பது சங்ககால மரபு. இந்த பசலை பற்றிப் பல பாடல்களைப் புலவர்கள் பாடியிருந்தாலும் அதன் தன்மையை எல்லோருக்கும் புரியமாறு சொல்லும் பாடல் ஒன்றைக் காண்போம்…


நீர்நிலைகளின் பச்சை நிறத்தில் பாசிபடர்ந்திருப்பதைப் பலரும் பார்த்திருப்பர். அந்தப் பாசி பயன்கொள்வோர் அருகே செல்லும் போது விலகிச் செல்லும், அந்நீர்நிலையைக் கடந்து வந்தபின்பு மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும்.

அந்த பாசி போன்றது பசலை என்கிறாள் தலைவி. ஏனென்றால் தலைவன் அருகே இருக்கும் போது இந்த பசலை என்னைவிட்டு நீங்கிவிடுகிறது. அவன் என்னை நீங்கியவுடன் மீண்டும் வந்து சேர்ந்துகொள்கிறது என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்னும் அகத்துறையில் அமைந்த இப்பாடலை,

(வரைவு - திருமணம்)

ஊருண் கேணி உண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.

குறுந்தொகை -399. மருதம் - தலைவி கூற்று


பரணர் பாடியிருக்கிறார்.

(சங்க இலக்கியத்தின் சிறப்பை பிறமொழியாளர்களும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலேயே இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளேன்)

3 கருத்துகள்:

  1. பசலையின் தன்மை பற்றிய பாடல் பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
  2. @இராஜராஜேஸ்வரி தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு
  3. குறுந்தொகை பாடல்வரிகளை அழகுற கூறி அதக்கு இகவும் சரியான விளக்கமும் தந்து பலருக்கு தெளிவக்கும்விதம் சிறப்பு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு