வியாழன், 28 ஏப்ரல், 2011

அந்தக் காலத்து எட்டாவது..

ஊருல வயதானவங்க சொல்லுவாங்க......

நாங்க அந்தக் காலத்துப் பத்தாவது..
அந்தக் காலத்து பியுசி என்று..

அவங்க சொல்லும் போதெல்லாம் புரியாத உண்மை இப்போதுதான் புரிகிறது.
அந்தக் காலத்துல வாழ்க்கைக்குப் பயன்படனும்னு பாடம் சொல்லித்தந்தாங்க. அதனால மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுத்தாங்க.பல்துறை அறிவும் அவர்களுக்கு இருந்தது.

இன்றைக்கு பணம் ஈட்டுவதையே முதல் நோக்கமாகக் கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால் மூளைக்கு வேலையின்றி விரல்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கின்றன.அதனால் சுயசிந்தனை, படைப்பாக்கத்திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு துறை குறித்த முழுமையான அறிவும் அவர்களில் பலருக்கு இருப்பதில்லை.


அப்துல்கலாம் அவர்களின் பொன்னான வார்த்தைகள்.

தேர்வில் உங்களால் சொந்தமாக
விடையளிக்க இயலவில்லையா?

அப்படியென்றால் இந்தக் கல்வி முறை உங்களுக்கு ஏற்றதல்ல!


பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி முறை நிறைய மாறிவிட்டது...

நான் கல்வி கற்ற காலத்தில் எனது மிகப்பெரிய இலக்காக முனைவர் பட்ட ஆய்வு இருந்தது. ஆனால் இன்று அதே முனைவர் பட்டத்தை மிக எளிதாகவும் வியாபர முறையிலும் முடிப்பவர்களைப் பார்க்கும் போது...

நானும் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்வேன் “நான் அந்தக் காலத்துல முனைவர் பட்டம் முடித்தவன்” என்று..

2 கருத்துகள்:

  1. அந்தக் காலத்துல வாழ்க்கைக்குப் பயன்படனும்னு பாடம் சொல்லித்தந்தாங்க. அதனால மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுத்தாங்க.பல்துறை அறிவும் அவர்களுக்கு இருந்தது.//
    சிந்திக்க வைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு