Monday, October 31, 2011

மனிதன் படைத்த விதி!


பிறப்பும், இறப்பும்..
விழிப்பதும், தூங்குவதும் போல இயல்பானது என்பர் வள்ளுவர்..

பிறப்பைப் போல இறப்புக்கும் மதிப்பு உண்டு..
விலை மதிப்பில்லாத உயிரை சாலைவிபத்துக்களில் இழப்பது கொடுமையிலும் கொடுமை..

உலகம் முழுவதும் சாலைவிபத்துக்களில் ஆண்டொன்றுக்கு 13 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலையோரங்களில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு தரும் சொற்களையும், சாலைவிதிகளையும் யார் மதிக்கிறார்களோ அவர்கள் தம் உயிருக்கும், உடலுக்கும் மதிப்பளிக்கிறார்கள் என்று பொருள்.

இதோ..

இன்று..
இளங்கவிஞர் கேசவன் அவர்களின் விழிப்புணர்வு தரும் கவிதை ஒன்று..

வகுக்கப்பட்ட சாலை விதியே நம்
தலையில்
எழுதப்பட்டதலைவிதி!

கண்ணறியா விதியாம் நம் தலைவிதி
அதை மதியாமல் திரிந்தாலும் தவறில்லை!
நாம் நன்கறிந்த விதியாம்
நம் சாலைவிதி - அதனை
மதியாமல் நடப்பது சரியா..?

பொருளறியா இறை மந்திரங்கள் 
எத்தனையோ ஓதுவதால் 
வாழ்வு செம்மையுறும் என்று நம்பும் நீ
நன்கு பொருளறிந்த சாலையோர 
விழிப்பளிக்கும் சொற்களைமதியாமல் நடப்பது சரியா..?

எத்தனையோ காலங்கள் 
எப்படியெல்லாமோ வீணடித்தாய் நீ!
சாலையைக் கடக்கும் 
அந்த ஒரு மணித்துளியில்
என்னதான் சாதித்திடுவாய்..?
உன் உயிரை அடகு வைத்து
 ஒருநொடி! இருநொடி!
பொறுமை இழந்த நீ
அடுத்த நொடி இழப்பது ஏதென்று அறிவாயோ..?

நொறுக்கப்பட்ட வாகனம்!
 நசுக்கப்பட்ட உடல்கள்!
தெறிக்கப்பட்ட இரத்தங்கள்!
இழக்கப்பட்ட உயிர்கள்!
இவையாவிலும் மேலாக..
உன்னால் துடித்த! 
உனக்காகத் துடித்த 
உறவுகளும் தானடா!

தூய்மையான மழைத்துளி 
சாக்கடையில் விழுவதைப் போல்
ஒப்பில்லா இரத்தத்துளி
தார்ச் சாலையில் விழலாமா..?

எத்தனையோ வார்த்தைகள்!
எண்ணற்ற ஊர்வலங்கள்!
இருந்தென்ன பயனடா..?
வார்த்தை எழுதியவருக்கும்
ஊர்வலம் நடத்தியவருக்கும் 
தானா..
விழிப்புணர்வு..?

உன் உயிர் காப்பவன் இறைவன் என்றால்
நீ மதித்தால்..
சாலைவிதியும் இறைவன் அன்றோ..!!

உன் உயிர் பறிப்போன் எமன் என்றால்
நீ மதிக்காவிட்டால்..
சாலைவிதியும் எமன் அன்றோ!

தாயின் விதி நலம் தரும்!
 பாடசாலை விதி ஒழுக்கம் தரும்!
சாலை விதி வாழ்க்கைதருமடா..!

சாலைவிதிகளை மதிக்காவிட்டாலும்
காலில் போட்டு மிதிக்கலாமா..?

எத்தனையோ விபத்துக்கள்..
அத்தனைக்கும் காரணம்..
மிதிக்கப்பட்ட சாலைவிதிகள்..!

உன் உயிருக்கு மதிப்புக் கொடு!
சாலைவிதிகளை மதித்தொழுகு!
இயற்கையான மரணம் எய்து..!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றால்..
விபத்தற்ற வாழ்வு மதிப்பற்ற செல்வமல்லவா!!!

படைப்பாக்கம்

ச. கேசவன்
இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.
நாமக்கல் மாவட்டம்
தொடர்புடைய இடுகைகள்

27 comments:

 1. எத்தனையோ காலங்கள்
  எப்படியெல்லாமோ வீணடித்தாய் நீ!
  சாலையைக் கடக்கும்
  அந்த ஒரு மணித்துளியில்
  என்னதான் சாதித்திடுவாய்..?
  -மனதில் தைக்கும் வரிகள். என் கருத்தும் இதுவே. படைத்திட்ட மாணவருக்குப் பாராட்டுக்களும், பகிர்ந்திட்ட முனைவருக்கு நன்றிகளும்!

  ReplyDelete
 2. சாலைவிதிகளை மதிக்காவிட்டாலும்
  காலில் போட்டு மதிக்கலாமா.// சரியான சவுக்கடி கேள்விகள்.,
  வாழ்த்துக்கள் கவிஞருக்கு..

  ReplyDelete
 3. அருமையான கவிதை! நன்றி பகிர்தலுக்கு!

  ReplyDelete
 4. தங்கள் மாணவர் எழுதிய கவிதையா ? அருமையாக உள்ளது !

  ReplyDelete
 5. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு முனைவரே...
  அன்பர் கேசவனுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்ல கவிதை அருமை

  ReplyDelete
 7. //
  பொருளறியா இறை மந்திரங்கள்
  எத்தனையோ ஓதுவதால்
  வாழ்வு செம்மையுறும் என்று நம்பும் நீ
  நன்கு பொருளறிந்த சாலையோர
  விழிப்பளிக்கும் சொற்களைமதியாமல் நடப்பது சரியா..?


  //

  அருமையான வரிகள்

  ReplyDelete
 8. த.ம.7
  உங்கள் மாணவர் கவிதை அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 10. நம் சாலைவிதி - அதனை
  மதியாமல் நடப்பது சரியா../

  கவிதைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. பலமான கைத்தட்டல்கள்
  இளங்கவிஞர் கேசவனின்
  கவிதை மிக அருமை.
  சாலைவிதிகள் நமக்கு
  நாமே வகுத்தவை....
  கொஞ்சம் அதை மதித்து நடந்தால்
  தவறொன்றுமில்லை....

  எழுதிய மாணவருக்கும்
  மாணவரை ஊக்குவிக்கும் முனைவருக்கும்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. எத்தனையோ விபத்துக்கள்..
  அத்தனைக்கும் காரணம்..
  மிதிக்கப்பட்ட சாலைவிதிகள்..!//

  உண்மை தான் நண்பா ,ஒருத்தர் மதித்தாலும் எதிரில் வருபவர் சாலை விதிகளை மதிக்கவில்லை என்றால் இருவருக்குமே பாதிப்புதான் ,பகிர்வுக்கு நன்றி நண்பா

  த.ம 9

  ReplyDelete
 13. மாணவர் கேசவன் திறன் மேன்மேலும் உயர வாழ்த்துகள்...

  விழிப்புணர்வு கவிதை மிக அருமை...

  பகிர்வுக்கு மிக்க நன்றி... நண்பரே...

  ReplyDelete
 14. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

  இளங்கவிஞர் கேசவனுக்கு எங்கள் அனைவரது வாழ்த்தையும் சொல்லி விடுங்கள்!

  இது போல பலரைத்தட்டிக்கொடுக்கும் ஆசான் கிடைக்க கொடுத்து வைத்த மாணவர்கள்!

  ReplyDelete
 15. கலக்கல் பதிவு, கலக்கல் கவிதை..

  ReplyDelete
 16. அருமையான கவிதை! நன்றி பகிர்தலுக்கு!

  ReplyDelete
 17. உயிரின் மதிப்பை உணர்த்தும் கவிதை... அருமை கேசவன்.

  ReplyDelete
 18. நல்ல பகிர்வு முனைவரே....

  ReplyDelete
 19. காலத்துக்கேற்ற விழிப்புணர்வுக் கவிதை !

  ReplyDelete
 20. இப்படி அற்புதமான மாணவர்கள் கிடைத்ததற்கு நீங்களும், தட்டி கொடுத்து ஊக்குவிக்கும் ஆசிரியர் கிடைத்ததற்கு அவர்களும் பெருமை பட்டு கொள்ளலாம்.

  அவசியமான நல்ல கவிதை. படைத்த மாணவருக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 21. கவிதை அருமை சார்.... தமிழ்மணம் 10

  ReplyDelete
 22. k7 airticle good .., aathiga eathir porpogalodu kathiruukum manavar sangam............,

  ReplyDelete
 23. இளங்கவிஞர் கேசவன் அவர்களின் கவிதையைப் பாராட்டி அவரை ஊக்குவித்த தமிழ் உறவுகளுக்கு மாணவர் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..


  நன்றி நன்றி நன்றி!

  ReplyDelete
 24. அனைவருக்கும் பொருத்தமான கவிதை. உங்களுக்கும் திரு கேசவன் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

  ReplyDelete
 25. இளங்கவிஞர் கேசவன் அவர்களின் கவிதையைப் பாராட்டி அவரை ஊக்குவித்த தமிழ் உறவுகளுக்கு மாணவர் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
  NAGALINGAM................,

  ReplyDelete