Thursday, January 12, 2012

அடங்காத கொலை வெறி.. (எச்சரிக்கைப் பதிவு)கொலைவெறி பி(ப)டிச்ச நடிகரையோ
ஆங்கில மொழியையோ குறைவாக மதிப்பிடுவதற்காக அல்ல இந்தப் பதிவு!
நடிகரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டவும்
ஆங்கிலேயர்களை எச்சரிக்கவுமே இந்தப் பதிவு...

இந்தப் பாடல் ப(க)டித்தமைக்காக  இந்த நடிகரை சிலர் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்..
சிலர் காலுக்குக் கீழே போட்டு மிதிக்காத குறையாகக் கோபப்படுகிறார்கள்...

தமிழ்மொழிமீது இன்றுவரை நடந்த பண்பாட்டுப் படையெடுப்புளையும், மொழிக்கலப்பையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் என்றோ அழிந்திருக்கவேண்டுமே..

இன்னும் எப்படி உயிரோடு, உணர்வோடு உள்ளது என்ற எண்ணமே ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

தமிழை யாரும் அழிக்கமுடியாது. தமிழ் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் மொழி.
இதற்குச் சான்றுகள்..
இன்றைய தமிழ் வலையுலகம், தமிழ் இணைய உலகம், தமிழ் மின்னூல் உலகம், சமூகத் தளங்களில் தமிழ்...

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழை யாரும் வளர்க்கவேண்டாம். அதை கொல்லாமல் இருந்தாலே போதும் என்ற கருத்து இப்போது மக்களிடையே மேலோங்கிவருவது மகிழ்வளிப்பதாகவுள்ளது.

எனக்கு இந்த நடிகர் மீது கோபமே வரவில்லை..
இலக்கியத்திலிருந்து ஒரு காட்சிதான் நினைவுக்கு வந்தது.ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நான்.

இப்பாடல் நந்திக் கலம்பகத்தில் இடம்பெற்றுள்ளது.

தலைவனைத் தலைவியிடமிருந்து பிரித்து பரத்தையரிடம் அழைத்துச் சொன்றான் பாணன்.

தலைவனைப் பரத்தையரிடம் அனுப்பிவிட்டு வாசலில் அமர்ந்து பாடல் பாடினான்.

பிறகு மறுநாள் தலைவியிடம் வந்து தலைவன் மிக நல்லவன் என்று பேச வருகிறான்.

அப்போது தலைவி சொல்கிறாள்...

நீ நேற்று எம் தங்கையர் தம் வீட்டிலிருந்து விடியும் வரை பாடல் பாடி(னாயே) அதை...

என் அன்னை காட்டில் என்ன பேய் அழுகிறதா?
என்று கேட்டாள்.

பிறர் நரி ஊளையிடுகிறதா?
என்று கேட்டனர்.

தோழி நாய் தான் இப்படிக் குரைக்கிறது என்றாள்..

நான் சொன்னேன்...
இது பேயுமல்ல, நரியுமல்ல, நாயுமல்ல... நீயென்றேன்...

என்ன சரிதானே... என்கிறாள் தலைவி.

என்ன நண்பர்களே..

இப்பாடலில்...
தலைவன் இசை
தலைவி தமிழ்
பரத்தை ஆங்கிலம்
பாணன் - ???


என்று சிந்திக்கிறீர்களா?

பாணன் என்றால் பாடல் பாடுபவன். 
அப்படித்தானே நாம் இலக்கியத்தில் படித்திருக்கிறோம்.


இப்பாடலில் ஆங்கிலத்தைப் பரத்தை என்று ஒப்பிட்டிருப்பது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம்..

என்ன நுட்பமாகத் தலைவி எம் தங்கையர் என்கிறார் பாருங்கள். பரத்தை என்று சொல்லவில்லை.

வில்லிருக்க அம்பை நோவதுபோல..

நாம் ஏன் ஆங்கிலத்தின் மீது வருத்தம் கொள்ளவேண்டும்.

தலைவி பரத்தையைத் தன் எதிரியாகப் பார்க்கவில்லை. தன் சகோதரியாகத் தானே பார்க்கிறாள்.

அதுபோல தமிழின் சகோதரிபோலத் தானே ஆங்கிலமும்.

மொழிகளுள் என்னங்க ஏற்றத்தாழ்வு..
எல்லா மொழிகளுமே தகவல் பரிமாற்றத்துக்குத் தோன்றியவை தானேங்க..

இந்தக் கொலைவெறி ப(பி)டிச்ச பாடலில் இந்த நடிகர்...

ஆங்கில வழியே தமிழைக் கொல்கிறார் என்றுதானே கூக்குரலிடுகிறீர்கள்..

ல்லாப் பாருங்கப்பா...
இந்த நடிகர் தமிழைத்தான்ளர்க்கிறார்...
 தமிழ் வழியே தான் ஆங்கிலத்தைக் கொல்கிறார்...

எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தமிழன் அல்ல ஆங்கிலேயன்தான்...!!

சிதைக்கப்பட்ட மொழி தமிழல்ல! ஆங்கிலம் தான்!


54 comments:

 1. தான் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமலேயே காசுக்காக கண்டதையும் செய்துக் கொண்டிருக்கும் இவர்களை பிதாவே மன்னித்தருள்வாயாக.

  ReplyDelete
 2. நான் பலருக்கு சொல்லிப் புரிய வைக்கக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த கருத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள். உங்கள் அனுமதியுடன் என் தோழர்களுக்கு உங்கள் இணைய முகவரியைப் பகிர்கிறேன்... நன்றி.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி சகோதரரே

  ///தமிழை யாரும் அழிக்கமுடியாது. தமிழ் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் மொழி.///

  சத்தியமான சொல்

  ReplyDelete
 4. //மொழிகளுள் என்னங்க ஏற்றத்தாழ்வு..
  எல்லா மொழிகளுமே தகவல் பரிமாற்றத்துக்குத் தோன்றியவை தானேங்க..//

  இதுவும் அழகான வரிகள்

  ReplyDelete
 5. அருமையான கருத்து. அதற்கு பழந்தமிழ் பாடலை உதாரணம் காட்டியது சிறப்பாக இருக்கு.

  ReplyDelete
 6. தமிழ் வழியே தான் ஆங்கிலத்தைக் கொல்கிறார்...///

  ஹி..ஹி... உண்மை தான்.....

  ReplyDelete
 7. தமிழ்மணம் தவிர மற்ற ஓட்டு பட்டைகளை காணோமே?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா..

   வலைப்பக்கத்தை மேம்படுத்தலுக்காக நண்பா..

   இப்போது மீண்டும் வைத்துவிட்டேன்.

   Delete
 8. //சிதைக்கப்பட்ட மொழி தமிழல்ல! ஆங்கிலம் தான்!//கண்டிப்பாக ஆங்கிலம் தான் கொல்ல பட்டு இருக்கிறது

  ReplyDelete
 9. சபாஷ் முனைவரே,

  நாங்கள் இவர்களுக்கு பதில் சொல்வதும் சரி
  உங்களைப் போல முனைவர்கள் பதில் சொல்வதும் சரி..
  வித்தியாசம் இருக்கிறது.
  நான் அப்படியே தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் முனைவரே.
  இலக்கியம் பாணன் எனச் சொல்லும் பாடகரை நாட்டுப்புற இலக்கியம் அண்ணாவி எனச் சொல்கிறது. கலப்பு கலந்து பாடும் அண்ணாவியை நாட்டுப்புறம் ஏற்றுக்கொள்வதே இல்லை.
  அப்படியே அவர் பாடினாலும், அடுத்த முறை அவர் வாய்ப்பிழப்பார்.

  உங்களின் விளக்கத்துக்கு பின்னர் நானும் அந்தப் பாடலின் மேலிருந்த பொல்லாத கோபத்தை பொறுத்துக்கொண்டேன்.

  நன்றிகள் பல முனைவரே.

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 10. எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தமிழன் அல்ல ஆங்கிலேயன்தான்...!!

  சிதைக்கப்பட்ட மொழி தமிழல்ல! ஆங்கிலம் தான்
  >>>
  ஓ இப்படியும் பொருள் கொள்ள(ல்ல)மோ?!

  ReplyDelete
 11. எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தமிழன் அல்ல ஆங்கிலேயன்தான்...!!

  சிதைக்கப்பட்ட மொழி தமிழல்ல! ஆங்கிலம் தான்!
  >>>
  ஓ இப்படியும் பொருள் கொல்ல(ள்ள)லாமோ?

  ReplyDelete
  Replies
  1. கொள்(ல்)ளலாம் இராஜி.
   புரிதலுக்கு நன்றி.

   Delete
 12. இதைவிட யாராலும் நாசூகாகக் கடிக்கமுடியாது குணா.இதுவும் கொலைவெறிதான் !

  ReplyDelete
 13. பலத்தப் பாராட்டுகள் முனைவரே. எத்தனை அருமையான உதாரணத்துடன் இன்றைய தமிழின் நிலையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்! பரத்தை வீடு சென்ற கணவனின் செயல் பொறுக்காத மனைவி ஆற்றாமையும் கோபமும் கொண்டு, கணவனுக்குத் துணைபோன பாணன்பால் அவ்வுணர்வைக் காட்டும் விதம் வெகு அற்புதம். அப்படித்தான் இன்றைய தங்கள் பதிவும். தமிழ் படும்பாட்டைக் கண்டு மனம் பொறுக்காத நிலையில் பொருத்தமானப் பதிவிட்டு எம் பொறுமல் தீர்த்தவிதம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்த புரிதலுக்கும் ஒப்பீட்டுக்கும் நன்றிகள் கீதா.

   Delete
 14. அன்பின் குணா - எண்ணங்கள் நன்று - இலக்கியத்தினைக் காட்டி இப்பாடலினால் கொல்லப்படுவது எம்மொழி எனக் கூறியமை நன்று. சிறு சிறு தட்டச்சுப் பிழைகள் தவிர்க்கலாமே ! தமிழாசிரியர் பதிவில் பிழைகளா ......

  ஊலையிடுகிறதா ... சகோரியாகத் ... திருத்துக

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள் ஐயா..

   திருத்திக்கொண்டேன்

   Delete
 15. குணா,

  அருமையான எடுத்துக்காட்டு.

  ’பாணன்’ = கேள்விக்குறியாக்கிய பாங்கு... அனைத்தும் அருமை.

  நந்திக்கலம்பகப் பாடலை நான் அறிந்துக்கொள்ள முக்கிய காரணமாக அமைந்த ‘அந்த கொலவெறி’ பாணனுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றிகள் கவிஞரே

   Delete
 16. பின் தொடர்வதற்காக

  ReplyDelete
 17. மிகச்சரியான எ.கா

  ReplyDelete
 18. அருமையான கருத்து.. ஆனா அவர் இத நெனச்சு எழுதலையே.. இருந்தாலும் தமிழனை விடு குடுக்காமல் பேசுவது இன்னொரு தமிழனுக்கு அழகு என்பதை நிருபித்து விட்டீர் ...

  ReplyDelete
 19. பரத்தையர் என்று ஆங்கிலத்தை கூறுவதை சிலருக்கு வருத்தத்தை தரும். மனைவியிருக்க மாதவியிடம் சென்ற கோவலன் என்ன ஆனான்? அதனால் வருத்தம் இல்லைங்க...!ஆங்கிலேயனுக்குதான் வருத்தம் என்பது சரியே!

  ReplyDelete
 20. அருமையான பதிவு.நமது தமிழ் சிவபெருமானால் போதிக்கப்பட்டு,முருகப்பெருமானால் அகத்தியருக்கு உபதேசம் செய்யப்பட்ட தெய்வ மொழி.நம் மொழியின் அருமை தெரியாத இவர்கள் எல்லாம் தமிழர் என்று சொல்வதே கேவலம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றிகள் இராஜேஷ்

   Delete
 21. நாகரீகமாக, மறை முகமாகக் கொடுத்த சாட்டை அடி
  முனைவரே!நன்றி!

  பொங்கல் வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றிகள் புலவரே

   Delete
 22. தமிழ் வாத்தியார் தமிழ் வாத்தியார்தான்...அருமையான விளக்கங்கள்.

  ReplyDelete
 23. வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் உங்கள் மனம். சிந்தனை. வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 24. நன்று நண்பரே,
  தாங்கள் எனது வலைப்பக்கத்தில் பின்னூட்டம் எழுதியிருந்ததைப் பார்த்துத்தான் தங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன்.
  ஆகா! என்ன கிண்டல், எவ்வளவு உண்மையான நையாண்டி!
  எனது “ஏனிந்தக் கொலைவெறி?“பாடலை விடவும் தங்களின்
  “அடங்காத கொலைவெறி“யில் ஆழம் அதிகம். தொடரட்டும் தங்கள் பணி.
  தொடர்வோம் தோழமை.
  நன்றி, வணக்கம்.
  அன்புடனும் வாழ்த்துகளுடனும்,
  நா.முத்துநிலவன்.
  புதுக்கோட்டை - 622 004
  எனது வலைப்பக்கம் www.valarumkavithai.blogspot.com

  ReplyDelete
 25. அருமை முனைவர் அவர்களே! யாழ் தமிழர் இந்தப்பாடலுக்கு பதிலடியாக ”kolaveri-Jafna version" என்ற தலைப்பில் யு டியுபில் பாடலை பதிவு செய்துள்ளனா. அருமையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் நண்பா.
   வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி.

   Delete