வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 26 ஜனவரி, 2012

எனது நூல் உங்கள் மறுமொழிகளுடன்.

உயிருள்ள பெயர்கள்
(இணையத்தில் வெளியான சங்கஇலக்கியக் கட்டுரைகள்
உலகத்தமிழர் மறுமொழிகளுடன்)

அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்..

கடற்கரையில் நடந்து செல்வது ஒரு இனிய அனுபவமாகும்.
அவ்வாறு நடந்து செல்லும் போது..
பின்னால் திரும்பி நாம் நடந்துவந்த காலடித் தடங்களைக் காண்பதில் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சி வரும்..

அதுபோல சங்க இலக்கியம் என்னும் கடலில் நானும் சில முத்துக்களை எடுத்த பெருமிதத்தோடு கரைநோக்கி நடந்து வருகிறேன்.

பின்னால் திரும்பிப்பார்க்கிறேன் என்னைப் போல எத்தனையோ பேர்கள் கையில் முத்துக்களுடன் காலடித்தடங்களை விட்டு்ச்சென்றிருக்கிறார்கள்.
எத்தனை எத்தனை காலடித்தடங்கள்..

இதில் என் காலடித் தடத்தைத் தேடும் முயற்சியாக..

இதுவரை நான் எழுதிய சங்க இலக்கியக் கட்டுரைகளைச் சில பாகுபாடுகளுடன், சில மறுதிருத்தல்களுடன் தொகுத்து   உங்கள் மறுமொழிகளுடன் நூலாக்கம் செய்துவருகிறேன் 

என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்தமாதம் வெளிவரவிருக்கும் நூலின் பதிப்பாக்கவடிவத்தை கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்..

ந்த நூலில் புதிதாக, பெரிதாக எதுவும் நான் சொல்லிவிடவில்லை 
என்றாலும்.
பழந்தமிழ் இலக்கியங்களைத் திருப்பிப் பார்த்தேன்,
உலகத் தமிழர்களைத் திரும்பிப்பார்க்கவைத்தேன் 
என்ற பெருமித உணர்வுடன் இந்த நூலை இணையவழியே அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்கிறேன்.1. அணிலாடு முன்றிலார் குறுந்-41.
2. 
இம்மென் கீரனார்-அக-398
3. 
இரும்பிடர்த்தலையார்-புற-3
4. 
ஊட்டியார்-அக-68
5. 
ஓரிற் பிச்சையார்-குறுந்-277.
6. 
ஓரேருழவர்-குறுந்-131.
7. 
கங்குல் வெள்ளத்தார்-குறுந்-387.
8. 
கல்பொரு சிறுநுரையார்-குறுந்-290.
9. 
கவைமகன்-குறுந்-324.
10. 
காலெறி கடிகையார்-குறுந்-267.
11. 
குப்பைக் கோழியார்-குறுந்-305.
12. 
குறியிறையார்-குறுந்-394.
13. 
கூகைக் கோழியார்-புற-364
14. 
கூவன் மைந்தன்-குறுந்-224.
15. 
கொட்டம்பாலனார்-நற்-95
16. 
கோவேங்கைப் பெருங்கதவனார்-குறுந்-134.
17. 
செம்புலப்பெயனீரார்-குறுந்-40.
18. 
தனிமகனார்- நற்-153.
19. 
தும்பி சேர் கீரனார்-குறுந்-393.
20. 
தேய்புரி பழங்கயிற்றினார்- குறுந்-284.
21. 
தொடித்தலை விழுத்தண்டினார்- புற-243.
22. 
நெடுவெண்ணிலவினார்-குறுந்-47.
23. 
பதடி வைகலார்-குறுந்-323.
24. 
மீனெறி தூண்டிலார்-குறுந்-54.
25. 
விட்ட குதிரையார்-குறுந்-74.
26. 
வில்லக விரலினார்-குறுந்-370.
27. 
விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்- நற்-242.இப்புலவர்கள் பற்றிய விளக்கம்..

தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

31 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் குணா சார்... தங்களை போன்றவர்களை வெகுநாளாக தொடர்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. நற்பணி செய்தீர் முனைவரே!
  வாழ்த்துக்கள்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. நல்ல முயற்சி
  பணி சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களை தொடர்வதில் பெருமிதம்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. ந்ல்ல முன்னுதாரணமான பணியை முன்னெடுத்திருக்கிறீர்கள். தங்கள் தமிழ்த் தொண்டு சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. ஆர்வமாக காத்திருக்கிறேன் முனைவரே..
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 7. பணி சிறக்க வாழ்த்துக்கள் முனைவரே!!

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான பணி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள்!தமிழினை சுவாசிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு