என் காதல் சொல்ல வார்த்தை உண்டு..


 • தமிழ்த் திரையிசைப் பாடல்களில் பல கவிஞர்களால் பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்ட பாடல்..
 • திருமண அழைப்பிதழ்களில் பலரும் அச்சிட்டு மகிழ்ந்த பாடல்..
 • படித்தவர் முதல் பாமரர் வரை பலருக்கும் அறிமுகமான ஒரு பாடல்..
 • தமிழ் செம்மொழி என்பதற்கான சான்று பகரும் பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடல்..

என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட ஒரு பாடல்...


யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

செம்புலப்பெயல் நீரார். (குறுந்தொகை-40)


என்ற பாடலாகும்.

எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கவே தோன்றுகிறது.
அப்படி என்னதான் இந்தப் பாடலில் இருக்கிறது?

தொன்மையா?
இனிமையா?
எளிமையா?
தனித்தன்மையா?
உவமையா?

இல்லை. இவையாவற்றையும் கடந்து வேறு ஏதோ இந்தப்பாடலில் இருக்கிறது.
ஒருவேளை உயிர்..!!
அது சங்கப்பாடல்களுக்கே உரிய பொது அடையாளமாயிற்றே..
அதையும் தாண்டி... 
வேறு ஏதோ ஒன்று..

மக்கள் கூட்டமாக இருந்தாலும் உயரமான ஆளை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா? 
சிரித்த முகத்துடன் இருப்பவர் பளிச்சென்று தெரிந்திடுவார் இல்லையா?அதுபோல..

இந்த சங்கபாடலையும் எளிதில் கண்டுகொள்ளமுடிகிறதே..

ன் காதல் சொல்ல வார்த்தையில்லை என்று புலம்பும் காதலர்கள் நடுவே...
காதல் கவிதை எழுதும் கவிஞர்களின் நடுவே..

இதுதான் என்காதல் என்று மிக எளிமையாக சொல்லிச் சென்ற அந்தப் பண்புதான் இந்தப் பாடலை தனிச்சிறப்புடைய பாடலாக வேறுபடுத்திக்காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவான் எனத் தலைவியின் மனம் அஞ்சுகிறது. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைவன் அவளை ஆற்றுவிப்பதாக இப்பாடல் அமைகிறது.

குடிப்பிறப்பு, உறவுநிலை, செல்வநிலை, உயர்வு தாழ்வு, பார்த்து வருவதில்லை காதல்.என்பதைத் தலைவன் தலைவிக்கு அறிவுறுத்துகிறான்.

என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்?
நானும் நீயும் எக்குடிவழிச் சார்புடையவர்கள்?
செம்மண் நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி போல அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றாகக் கலந்தன.

இப்பாடலில் செம்புலத்தில் வீழ்ந்த நீர்போல என்ற உவமையே இப்புலவருக்கும் பெயராயிற்று.


இப்பாடலில் உள்ள எளிமை, பொதுமை, உவமை ஆகிய பொதுக்கூறுகளே இப்பாடலை காலத்தை வென்ற பாடலாக்கியுள்ளன.


தொடர்புடைய இடுகைகள்.

22 comments:

 1. அருமையான குறுந்தொகைப் பாடல். விளக்கம் அருமையிலும் அருமை. ஒரு சிறு வேண்டுகோள். பின்புலத்தில் பூமி படமோ வேறு எந்த வால்பேப்பரும் வைக்க வேண்டாம். என்னைப் போல ஸ்லோ கனெக்சன் இன்டெர்நடட் உள்ளவர்கள் அணுக கடினமாக உள்ளது. பழையபடியே எளிமையாக தளத்தை அமையுஙகள். இதன் காரணமாக தங்களது சில இடுகைகளை என்னால் அணுக முடியாமல் போய்விட்டது. தவறிருந்தால் மன்னிக்கவும்.
  தமஓ 2.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி நண்பரே அறிவுறுத்தலுக்கு நன்றி.

   Delete
 2. பள்ளிக் காலங்களில் அறிமுகமான இப்பாடல்...
  கல்லூரிக் காலங்களில் தேசிய கீதம் போல இருந்தது...
  ஒரு பருவத்தில் காதல் கவிதைகள் கொந்தளித்து வருகையில்
  அதிக நம்பிக்க ஊட்டிய பாடல் இதுவே...
  அழகான ஒரு சங்கப் பாடலை நீங்கள் விளக்கிய முறை நன்று முனைவரே...

  ReplyDelete
  Replies
  1. உண்மையே மகிழ்ச்சி நண்பரே

   Delete
 3. உங்களின் விளக்கம் பாடலைப் போல மிகவும் அருமை ! நன்றி Sir!

  ReplyDelete
 4. மிக நல்ல இடுகை. வாழ்த்துகள். எனக்கும் பல நேரங்களில் தங்கள் வலைக்கு வரமுடியாமல் இருந்தது. ஏனென்று யோசித்தேன்.இப்போது புரிகிறது.
  வேதா. இலங்காதிலகம்.
  httP://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி திலகம்

   Delete
 5. தமிழின் இலக்கிய சிறப்பை சொல்லும்
  நல்ல பணி தங்களுடையது!

  ///செம்புலப் பெயல் நீர் போல\\\\

  ஆம் மிகச்சிறந்த உவமை இது

  என் கல்லூரி தமிழாசிரியர்கள் நினைவுக்கு வந்தனர்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி நண்பா

   Delete
 6. எத்தனை அழகான வரிகள்.அற்புதம் !

  ReplyDelete
 7. நல்ல ரசனையான பாடல்.

  ReplyDelete
 8. அருமையான பதிவு நண்பரே..

  ReplyDelete
 9. பலமுறை ரசித்த பாடல்தான் .ஆனாலும்,முனைவரால் விளக்கப்படும்போது சுவை கூடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி அன்பரே

   Delete
 10. படிக்கும் போதே காதல் அரும்புகிறது வரிகளின் மேல் ..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அரசன்

   Delete
 11. என் வேண்டுகோளை ஏற்று தளத்தை எளிமையாக மாற்றியதற்கு மிக்க நன்றி நண்பரே!இப்போது எளிதில் தளத்தை அணுக முடிகிறது!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி அன்பரே

   Delete