Friday, November 23, 2012

சுடுகாடு வரைக்கும்..


தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்..
பசுமரத்தாணி போல..
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது..
என்ற முதுமொழிகள் எல்லாம் இளமைக்காலத்தில் கற்றுக்கொள்ளும் பழக்கம் முதுமைக்காலம் வரையிலும் தொடர்ந்துவரும் என்ற கருத்தை எடுத்தியம்புகின்றன.
இன்று பலவீடுகளில் உள்ள கடிகாரங்கள் 15 நிமிடம், 30 நிமிடம் விரைவாக ஓடிக்கொண்டிருக்கின்றன. காரணம் அப்போதுதான் குழந்தைகள் உரிய காலத்தில் கிளம்புவார்கள் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஏற்படும் விளைவு. அந்தக் குழந்தைகள் வளர்ந்து கல்லூரிக்குச் சென்றாலும், பல்கலைக்கழகத்துக்குச் சென்றாலும், படித்து முடித்து வேலைக்குச் சென்றாலும் காலதாமதமாகவே செல்கின்றனர்.
காலைநேரத்தில் ஒவ்வொருவரும் கிளம்புவதே போருக்குத் தயாராவது போல இருக்கும். அதிலும் குழந்தைகளைக் பள்ளிக்கு அனுப்புவது..!!
            
        நான் பள்ளியில் படித்த காலத்தில் ஆண்டுவிழாவில் 6ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு“பள்ளிக்குத் தயாராகுதல்“ என்றொரு விளையாட்டே உண்டு. இன்று எத்தனை பள்ளிகளில் இந்த விளையாட்டுப்போட்டி வைக்கிறார்கள்?
·         100 மீட்டர் ஓட்டப் பந்தையத்துக்கான எல்லையே இந்த விளையாட்டுக்கும் எல்லையாகும்.
·         முதலில் தொடக்கக் கோட்டில் தயாராக நிற்கும் மாணவர்கள் போட்டி தொடங்கியதும் விரைந்து ஓடுவார்கள், சிறிது தூரத்தில் நின்று பல்துலக்குவார்கள், குளிப்பார்கள், சட்டை மாட்டுவார்கள், சிறிது தூரம் ஓடுவார்கள். பிறகு பாடநூல்களை எடுத்து பையில் வைப்பார்கள் பள்ளிக்கு விரைந்து செல்வார்கள்.
·         யார் முதலில் இந்த உடலசைவு மொழிகளோடு முடிவு எல்லைக் கோட்டைத் தொடுகிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.


இந்தப் போட்டியின் அடிப்படை நோக்கம் “காலநிர்வாகம்“ ஆகும். மாணவர்கள் மனதில் உரிய காலத்திற்குள் கிளம்பவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவேண்டும் என்பதாகும்.


குழந்தைகளின் மனதில் காலநிர்வாகம் குறித்த சிந்தனைகளைக் கொண்டுவந்தால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அதைக் கடைபிடிப்பார்கள்.

காலத்தின் பின்னால் ஓடுபவர்கள்
காலத்தின் முன்னால் ஓடுபர்கள்
காலத்தோடு ஓடுபவர்கள்

என்ற மூன்று வகை மனிதர்களுள் நாம் எந்த வகையினராக இருக்கிறோம் என்பதை சீர்தூக்கிப்பார்த்து.
நம் குழந்தைகளுக்கு நாம் முன்மாதிரியாக கால நிர்வாகத்தைக் கடைபிடிப்போம்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பதை உணர்வோம் உணரவைப்போம்.

தொடர்புடைய இடுகை.
28 comments:

 1. நல்ல ஒரு பதிவு தம்பி. சூரியன் எப்.எம்(கொழும்பு) வேலை செய்த காலத்தில் ஒலிபரப்பாளரும் நிலைய கட்டுப்பாட்டாளருமான திரு நடராஜசிவம் அவர்கள் சொன்னது இந்த நேரத்தில் ஞாபகம் வருகின்றது. "இராஜ முகுந்தன் 12 மணிக்கு நிகழ்ச்சி என்பது 11.59 க்கு அல்ல 12.01 க்கும் அல்ல..."

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி அண்ணா.

   Delete
 2. கடிகாரத்தில் சரியான நேரம் வைத்து சரியான நேரத்திற்கு செல்லவே பழக்கப்படுத்த வேண்டும். மனரீதியாக " அது பரவாயில்ல.." என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் இது ஏற்படுத்தும். இது ஒவ்வொரு செயலுக்கும் தொடரும் தவறான போக்கே.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அறிவுரைக்கு நன்றி கலாகுமரன்.

   Delete
 3. //இன்று பலவீடுகளில் உள்ள கடிகாரங்கள் 15 நிமிடம், 30 நிமிடம் விரைவாக ஓடிக்கொண்டிருக்கின்றன. காரணம் அப்போதுதான் குழந்தைகள் உரிய காலத்தில் கிளம்புவார்கள் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
  // - ஆனால் பெற்றோர்கள் கிளம்பும்போது அட இது 15 நிமிஷம் பாஸ்ட்டாதானே இருக்கு இன்னும் கால் மணி நேரம் இருக்கே என்று தயாராக தாமதம் காட்டுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள். தங்கள் வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி உஷா அன்பரசு.

   Delete
 4. சகோதரி உஷா அன்பரசு அவர்களது

  //ஆனால் பெற்றோர்கள் கிளம்பும்போது அட இது 15 நிமிஷம் பாஸ்ட்டாதானே இருக்கு இன்னும் கால் மணி நேரம் இருக்கே என்று தயாராக தாமதம் காட்டுவார்கள்.//

  என்ற கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.


  ReplyDelete
 5. அருமை... அதுவும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை என்ன கற்றுக் கொடுக்கிறோமோ அது தான் கடைசி வரை...

  இல்லையெனில் அவர்கள் நமக்கு கற்றுக் கொடுப்பார்கள்...

  சிறப்பான படைப்புக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
  tm5

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் நண்பரே. தங்கள் மறுமொழிக்கு நன்றி.

   Delete
 6. கால நிர்வாகம்
  எவ்வளவு அவசியம்
  என்பதைப் பற்றிய அழகிய பதிவு முனைவரே...

  காலங்களின் பிரிவுகளில் மனிதனை
  பகுத்து சொல்லிய பதிவு
  அருமை அருமை...

  ReplyDelete
 7. நல்லதொரு கவிதையை முகப்பில் கொடுத்திருந்தது சிறப்பு முனைவரே..

  ReplyDelete
 8. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள் நாம் சிறு வயதில் என்ன கற்றுத்மருகிறோமோ அதுதான் அவர்களின் கடைசி காலம்வரை உங்கள் சிறப்பான அறிவுரைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தொழிற்களம்.

   Delete
 9. உண்மைதான்! இன்று எல்லோருக்கும் காலதாமதம் வாடிக்கையாகிவிட்டது! நேரம் தவறாமையை சின்ன வயதிலேயே போதிக்க வேண்டியது அவசியமே! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேஸ்

   Delete
 10. கால நிர்வாகத்தின் அவசியம் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்

  ReplyDelete
 11. நேரமேலாண்மை நிச்சயம் குழந்தைப் பருவத்திலி​ருந்தே உருவாக்கப்பட வேண்டும். நல்லப் பதிவு​..

  ​நாகு
  ​WWW.TNGOVERNMENTJOBS.IN

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நாகு.

   Delete
 12. சிறப்பான பகிர்வு. இந்த ஓட்டப் பந்தயம் வித்தியாசமாக இருக்கிறது. நான் படித்த போது இருந்ததாகத் தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஓ.. தங்கள் மறுமொழிக்கு நன்றி நண்பரே

   Delete
 13. தன்னம்பிக்கை தரும் படைப்பு !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நிஜாம்

   Delete