செவ்வாய், 27 நவம்பர், 2012

நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!

சுத்தமான காற்று!
சுகாதாரமான சுற்றுச்சூழல்!

ஆகிய இரண்டும் உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.

நோய்கள் உருவாக அடிப்படைக் காரணமாக மனிதர்கள் வெளியேற்றும் குப்பைகளே அமைகின்றன. 

நம் வீடு போலத்தானே நாடும்! என்ற எண்ணம் எப்போது ஒவ்வொருவருக்கும் உருவாகிறதோ அப்போது அந்த நாடு சுத்தமான நாடாகக் காட்சிதரும். 

சுகாதாரமான சூழல் கொண்ட உலகின் பல்வேறு நாடுகளைக் காணும்போது வியப்பாக உள்ளது. 

எப்படி இவர்களால் மட்டும் தம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ளமுடிகிறது?
இதற்கு யார் காரணம்?
அரசுமட்டுமா?
அரசு விதிக்கும் அபராதம் என்னும் அச்சுறுத்தல் தான் காரணமா?

என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.

ஆழ்ந்துநோக்கினால் மக்ககளின் பொதுநலன் குறித்த சிந்தனையும், தனிமனித ஒழுக்கமுமே ஒரு வீட்டையும், நாட்டையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளஉதவும் என்பது புரிகிறது.

நம்மைச்சுற்றி கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்.
நகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது? அதைப் பொதுமக்கள் எந்த அளவுக்கு மதித்து நடக்கிறார்கள்? 

நேற்று காரைக்குடி சென்றேன் ஒரு தெருவில் குப்பை மேட்டின் மீது அமர்ந்து ஒருவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்..

என்ன என்று பார்த்தேன்..

அறிவு உள்ள எவரும்.. என்று மட்டும் எழுதியிருந்தார். என்னவாக இருக்கும்..? இங்கு குப்பை கொட்டக்கூடாது என்று எழுதுவாரோ என்று நினைத்துக்கொண்டே வந்தேன்..

நான் நினைத்ததுபோலவே அடுத்த தெருவில் “அறிவு உள்ள எவரும் இப்பகுதியில் குப்பை கொட்டவோ, அசுத்தம் செய்யவோ மாட்டார்கள்“ என்று எழுதப்பட்டிருந்தது.

இதை செய்யென்றால் செய்யமாட்டோம்..
செய்யாதே என்றால் செய்வோம் இதுதானே நம் இயல்பு?அழகாக எழுதப்பட்ட இந்தக் கருத்தைப் படிக்கத்தெரிந்தால் அவர் இங்கே குப்பை கொட்டுவாரா?
என்ற கேள்வி முதலில் நம் மனதில் எழும். இருந்தாலும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் படித்தவர்களில் பெரும்பாலானவர்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள் என்ற உண்மை புலப்படும்.அதனால் சுத்தமான சுற்றுச் சூழல் நோய்நொடியற்ற வாழ்வு தரும்  என்பதை உணர்ந்து நம் சுற்றுச்சூழல் தூய்மையா இருக்க உதவுவோம்.

 • நீர்வளங்கள்
நீர் வளங்களைப் பாதுகாக்கவேண்டிய பெரிய கடன் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, நீர்வளங்களை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்போம்.


 • இதைப் பார்த்தாவது திருந்துவோம்


 • நாம மக்கு மனுசனா? • இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்.
எவ்வளவு பெரிய உண்மை??

இந்த பூமி எவ்வளவு அழகானது?
இதை இன்னும் அழகாக்காவிட்டாலும்- கொஞ்சம் அழுக்காக்காமால் விட்டுச்செல்வோமே!!

நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!

தொடர்புடைய இடுகை

13 கருத்துகள்:

 1. படத்தை போலவே உங்க கருத்தும் அருமை சுற்றுபுறத்தை பாதுகாப்போம் தூய்மையான வாழ்வை பெறுவோம்.

  பதிலளிநீக்கு
 2. "நீ இதே செய்தால் 'சாக்லேட்' தருவேன்..."

  "நீ அதிக மதிப்பெண் எடுத்தால், நீ சொன்னதை வாங்கித் தருவேன்..."

  நீங்கள் குறிப்பிட்டுள்ள இயல்பு இதனால் கூட வரலாம்...

  படங்கள் பல கருத்துக்களை சிந்திக்க வைக்கின்றன...

  நன்றி முனைவரே...
  த.ம.2

  பதிலளிநீக்கு
 3. கருத்தான பதிவும்
  அதற்காக தாங்கள் கொடுத்துள்ள படங்களும் அருமை
  பயனுள்ள அருமையான பதிவுக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 4. பதிவும் படங்களும் மிக மிக அருமை முனைவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 5. உங்களுடைய படங்களும், கருத்துகளும் மிக மிக அற்புதமானவை, ஆழமான கருத்துகள் நிறைந்தது. ரொம்ப நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் தொடர் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி செம்மலை ஆகாஷ்.

   நீக்கு
 6. அருமையான படங்களுடன், நல்ல கருத்தையும் முன்வைத்தீர்கள் முனைவர் அவர்களே..

  பதிலளிநீக்கு