வியாழன், 15 நவம்பர், 2012

ஒரு எலியும் மூன்று காக்கைகளும்


இறந்த எலிக்கும் மூன்று காக்கைகளுக்கும் இடையே உள்ள தூரம் தான் 
நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள தூரம்.

இதற்குள் எத்தனை எத்தனை ஆசைகள், கனவுகள்,ஏக்கங்கள், துக்கங்கள்....


சென் கதைகள் இரண்டு....

1. சென் குரு இகியு இளம் வயதிலேயே அறிவு முதிர்ச்சியுடன் 
காணப்பட்டார்.சிறுவனாய் இருக்கும்போது ஒரு நாள் தன் குரு வைத்திருந்த ஒரு அருமையான,மிகப் பழமையான , அபூர்வமான  தேநீர்க் கோப்பையை கை நழுவி உடைத்து விட்டார்.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அப்போது குருவின் குரல் கேட்டது.உடனே வேகமாக அவர் குருவிடம் சென்று,''அய்யா,பிறக்கும் உயிர்கள் ஏன் இறக்க வேண்டும்?''சின்ன வயதிலேயே இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று மகிழ்ந்து குரு சொன்னார்,''அது இயற்கை . தவிர்க்க முடியாதது..பிறந்த ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் முடிந்தவுடன் இறக்கத்தான் செய்யும்.''இகியு சொன்னார்,''அய்யா,நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கிறது.
உங்களின் தேநீர்க் கோப்பைக்கு 
காலம் முடிந்ததால் இறந்து விட்டது.''

2. சென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,
''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?
என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,
நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?
''ஞானி சொன்னார்,''பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.
இப்போது இரண்டும் போய்விட்டன.
இடையில் வந்தவை இடையில் போயின.
இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?''


தொடர்புடைய இடுகை..

12 கருத்துகள்:

 1. எத்தனை எத்தனை ஆசைகள், கனவுகள்,ஏக்கங்கள், துக்கங்கள்..

  சென்கதைகளுடன் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. முனைவரே சிறப்பு..எப்படியிருக்கீங்க?

  பதிலளிநீக்கு
 3. இடையில் வருவது இடையில் போவதை உணர்ந்தால் மனம்தான் சம நிலையில் இருக்குமே. மனிதனின் பிறவி குணம் அவ்வளவு சீக்கிரம் மாறுவதில்லை.ஆசைகள், கனவுகள்,ஏக்கங்கள், துக்கங்கள்... கடைசி வரை விட்டு போவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் உஷா அனபரசு.

   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

   நீக்கு
 4. இறந்த எலிக்கும் மூன்று காக்கைகளுக்கும் இடையே உள்ள தூரம் தான்
  நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள தூரம்.
  அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 5. படத்தின் விளக்கம் அருமை... உண்மை...

  சென் கதைகள் இரண்டும் அருமை...

  நன்றி...
  tm8

  பதிலளிநீக்கு
 6. நிதர்சன விளக்கங்களுடன்
  அழகிய கதைகள்
  பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே...

  பதிலளிநீக்கு