வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 20 நவம்பர், 2012

வாங்க விக்கிப்பீடியாவில் எழுதலாம்.


இணையத்தில என்ன தேடினாலும் அதிகளவு செய்திகளைப் பரிந்துரைப்பது விக்கிப்பீடியாதான். இதுஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். இதில் நீங்களும் தங்கள் கருத்துக்களை வெளியிடலாம். இதன் உள்ளே  சென்றால் போதும் நீங்கள் எவ்வாறு தங்கள் பதிவுகளை உள்ளீடு செய்யலாம் என்று நெறிமுறைகள் எளிய முறையில் உள்ளன.

நான் முதலில் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்தது நான் இளங்கலை படித்த இராமசாமித் தமிழ்க்கல்லூரியின் விவரம் தான். அடுத்து எனது சுயவிவரம். அடுத்து, நான் பணிபுரியும் கல்லூரியின் விவரம், அடுத்து சங்கஇலக்கியங்கள் தொடர்பான செய்திகளை இணைப்புகளை உள்ளீடுசெய்யத்தொடங்கினேன். அதனால் விக்கிப்பீடியாவுக்குவந்த பார்வையாளர்கள் எனது வலைப்பதிவையும் பார்வையிடத் தொடங்கினார்கள். அதன் புள்ளிவிவரத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.

அதனால் வலை உறவுகளே நீங்கள் என்னதுறை சார்ந்தவராக இருந்தாலும் தங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதிவு செய்யுங்கள்.

எதிர்காலத்துக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு களமாக இருக்கும்.32 கருத்துகள்:

 1. நல்ல பயனுள்ள பதிவு முயற்சி செய்து பார்க்கத் தூண்டி விட்டீர்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பங்களிக்க ஆவலுடன் தேடுதலுடன் இருந்தேன் ...

  தகவலுக்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 3. எனக்கு நேரம் கிடைப்பதில்லை...

  தங்களின் முயற்சிக்கு... மேலும் சிறப்பதற்கு வாழ்த்துக்கள்...
  tm4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பார்வைக்கும் நன்றி நண்பரே..
   நேரம் கிடைக்கும்போது இதுதொடர்பாக சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.

   நீக்கு
 4. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் ( www.tamiln.org ) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. பௌஅனுள்ள பதிவு..தமிழை வளர்க்க தமிழனான நானும் விரைவில் முயற்சி செய்கிறேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அருமை!பகிர்வுக்கு மிக்க மகிழ்வு . அதில் உங்கள் http://www.gunathamizh.com சிறப்பு

  பதிலளிநீக்கு
 7. தொடக்கத்தில் நானும் எழுத முயற்சித்தேன். ஆனால் ஒரு மாஃபியா குழு போல உள்ளே இருந்து கொண்டு அது தப்புஇது தப்பு என்று நீக்கி விடத் தொடங்கினார்கள். இதன் உள் கட்டமைப்பு எனக்கு புரிபடவில்லை. உங்கள் விபரங்கள் எழுதியிருப்பதாக சொன்ன இணைப்பு தர முடியுமா? நானும் முயற்சிக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறுவது மறுக்கமுடியாத உண்மை நண்பரே.
   தமிழில் கட்டுரைகள் அதிகமாக வெளிவராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

   http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D

   நீக்கு
 8. முன்பே விக்கிபீடியாவில் படித்துள்ளேன். அதில் தகவல்கள் பதிப்பவர்கள் நம்பகமான ஆதாரம் மிக்க தகவல்களே பதிவிட வேண்டும் இல்லையா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை கலாகுமரன்.
   சான்றுகளுடன் வெளியிடப்படும் தகவல்கள் காலத்தால் அழியாததாகப் பாதுகாக்கப்படும்.

   நீக்கு
 9. இணைப்புகளுக்காக எழுதக் கூடாது, பயனுள்ள ஆக்கத்திற்காக எழுதவேண்டும் என்று எண்ணுகிறேன்.
  ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கென்று தனியான ஒரு எழுத்து நடையை பராமரிக்கிறார்கள். நடைமுறையிலுள்ள தமிழைவிட்டுச் சற்று விலகவேண்டி வரலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகாகச் சொன்னீர்கள் நண்பா.
   உண்மை இருந்தாலும் வலைப்பதிவர்கள் சிலர் அப்படியாவது எழுதவரவேண்டுமே என்பதுதான் என் எண்ணம்.

   விக்கிப்பீடியாவில் தாங்கள் கூறுவதுபோல தனித்துவமான மொழிநடை கையாள்கிறார்கள்.

   அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நீச்சல்காரன்.

   நீக்கு
 10. நானும் முயற்சிக்கிறேன் முனைவர் ஐயா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள முயற்சி முனைவரே...
  எனது பங்கும் இருக்கும்....
  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 12. தகவல் களஞ்சியத்தில் தமிழ் கட்டுரைகள் மட்டும் குறைவாக இருப்பது வருத்தமாக இருக்கிறது. பயனுள்ள தகவல்களை இனியாவது பகிரலாம். நன்றி!

  பதிலளிநீக்கு
 13. என் பங்களிப்பு கண்டிப்பாக உண்டு நண்பரே

  பதிலளிநீக்கு