வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பொய்யே முதலீடு


கையில பை!
கழுத்துல டை!
வாயில பொய்!
இதுவே விற்பனையாளனின் முதலீடு என்ற எண்ணம் கொண்டு வாழும் இன்றைய சூழலில் மனிதர்களுக்கு சுயநலவுணர்வு மேலோங்கியதால் மனிதநலம் பற்றிய கவலை இல்லாமல்ப் போனது.

“பொய், கலப்படம்“ இரண்டும் வணிகத்தின் இரு கண்கள் என்னும் எண்ணம் மேலோங்கியதால் பாதிக்கப்படுவது என்னவோ நுகர்வோர் தான்!

இந்தக்காலத்துல போய் பொய்யெல்லாம் சொல்லாம வியாபரம் செய்யமுடியுமா?
கலப்படம் செய்யமாப் பொழப்பு நடத்தமுடியுமா?

(என்ற வணிகர்களின் புலம்பல் கேட்கிறது.)

“நியாயவிலைக் கடைக்காரருக்குக்
குழந்தை பிறந்தது
எடை குறைவாக“

என்ற கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

நாமும் ஏமாற்றப்படுவோம் அதனால் நாமாவது யாரையும் ஏமாற்றக்கூடாது!
என்ற சிந்தனை வந்தால் மட்டுமே மனிதநலம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு மனிதர்களுக்கும் வரும்.

மனித நலம் பாதிக்கப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் அறியாதது போல கேட்கும் வியாபாரிகளே!

எதில் இல்லை கலப்படம்?
உண்ணும் உணவிலிருந்து,
நோய் நீக்கும் என்று நம்பி உண்ணும் மருந்துப் பொருள்களைக் கூட நீங்கள் விட்டுவைக்கவில்லையே!

o உண்மை பேசி, கலப்படமின்றி நேர்மையாக வணிகம் செய்யவே முடியாதா? அப்படி வணிகம் செய்வோர் உலகில் எங்குமே இல்லையா?

எனக்குத் தெரிந்தவரை நூற்றுக்குப் பத்துப்பேர் நேர்மையாவர்களாகவே இருக்கிறார்கள். நல்லார் அவர் பொருட்டே எல்லோருக்கும் மழை பொழிகிறது என்ற நம்புகிறேன்.

இச்சூழலில், சங்ககால வணிகமுறையில் தமிழர்தம் உயர்ந்த கொள்கை நாம் பெருமிதம் கொள்ளத்தக்தாகவுள்ளது. பத்துப்பாட்டில்,

“நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்“

(பட்டினப்பாலை – 207-211)

இவ்வடிகள் இடம்பெருகின்றன. வணிகர்கள், நடு நிலையுடையவர்களாக நல்ல உள்ளத்துடன் இருந்தனர். பொய் சொன்னால் தம் குடிக்கு பழி வரும் என்று அஞ்சி உண்மையே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.

இவர்கள் தம் பண்டங்களையும், பிறருடைய பண்டங்களையும் வேறுபடுத்திப்பார்க்காமல் ஒப்ப நோக்கி ஆராய்ந்து கண்டனர்.

தாம் கொள்ளும் பொருள்களைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகுதியாகக் கொள்வதில்லை.
தாம் கொடுக்கும் பொருள்களையும் வாங்கும் பொருள்களுக்குக் குறைவாகக் கொடுப்பதில்லை.

தங்களுக்க வரும் இலாபத்தை நுகர்வோரிடம் வெளிப்படையகப் பேசியே வணிகம் செய்தனர். அதனால் அவர்கள் வணிகத்திலும் சிறந்து செல்வத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர் என்பதையே இவ்வடிகள் புலப்படுத்துகின்றன.

23 கருத்துகள்:

 1. பொய் சொன்னால் தம் குடிக்கு பழி வரும் என்று அஞ்சி உண்மையே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.


  ....இது மீண்டும் வாராதா?

  பதிலளிநீக்கு
 2. பணம் ஒன்று "மட்டுமே" இப்போது
  குறிக்கோளாகி விட்டது.

  பதிலளிநீக்கு
 3. பழையகால வணிகமுறையில் அரிசி,பருப்புவகைகள் அளக்கும்போது முதலில் சிறிதளவு எடுத்துப்போட்டு விட்டு மேலாக அளக்கும் முறைகள் இருந்திருக்கிறது.

  இப்பொழுது நிறைக்குக் குறைவாக நிற்கும் பொழுதே அள்ளிவிடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 4. //நாமும் ஏமாற்றப்படுவோம் அதனால் நாமாவது யாரையும் ஏமாற்றக்கூடாது!
  என்ற சிந்தனை வந்தால் மட்டுமே மனிதநலம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு மனிதர்களுக்கும் வரும்.//

  உண்மை. மிகச் சிறந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 5. சவுக்குப் பதிவு.

  உறைக்குமா சம்மந்தப்பட்டவர்களுக்கு?

  பதிலளிநீக்கு
 6. //.. பொய் சொன்னால் தம் குடிக்கு பழி வரும் என்று அஞ்சி உண்மையே பேசக்கூடியவர்களாக இருந்தனர் ..//

  பட்டினப்பாலை பாடினதுக்கு அப்புறம் நல்ல வியாபாரிகளே இல்லை என்பது வருத்தம் தான்.. :-(

  பதிலளிநீக்கு
 7. @Chitra
  எனக்கும் அதே எண்ணம்தான்.
  தங்கள் வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. @மாதேவி பசுமையான நினைவுகளை எண்ணி அசைபோட மட்டுமே முடிகிறது இன்று . தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. @மாதேவி பசுமையான நினைவுகளை எண்ணி அசைபோட மட்டுமே முடிகிறது இன்று . தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. @வானம்பாடிகள் உண்மைதான் ஐயா இன்றைய நிலையை ஒப்புநோக்கும் போது..
  சங்ககால வாழ்வு என்பது கனவுபோலத்தான் இருக்கிறது. அதே மனிதர்கள் தான் ஆனால் மனிதம் இழந்தவர்கள் என்பதால் இந்த அவலநிலை.

  பதிலளிநீக்கு
 11. @திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).

  எனக்குத் தெரிந்த பத்து நேர்மையானவர்கள் கூடத் தங்களுக்குத் தெரியாமல்ப் போனது வருத்தம் தான் நண்பரே..

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  இன்னும் சில நேர்மையானவர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள் என்று நம்புவோம் நண்பா!

  பதிலளிநீக்கு
 12. தையே தமிழர்களின் முதல் மாதம் என்பதனை உரைக்குமாறு உள்ள ஏதேனும் சங்கப் பாடலை உடனடியாகத் தரவும் .. ( என் நண்பர்களின் வேண்டுகோள் அப்படி!!)
  தங்களின் சிறந்த தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் !!
  நன்றி !!

  பதிலளிநீக்கு
 13. சமீபத்தில் குணாவின் வித்தியாசமான பதிவுகளும் வரவேற்கத்தக்கவை..

  //
  “நியாயவிலைக் கடைக்காரருக்குக்
  குழந்தை பிறந்தது
  எடை குறைவாக“//

  இதற்கெல்லாம் அச்சப்படுவார்களா?
  அநியாயவிலை கடைக்காரர்கள்

  பதிலளிநீக்கு
 14. @'BLUESPACE' ARIVUMANI, GERMANY தை நீராட்டு பற்றிய குறிப்புகள் உள்ளன நண்பரே.. இன்னும் பார்த்துச் சொல்கிறேன்..

  பதிலளிநீக்கு
 15. @தமிழரசி

  மகிழ்ச்சி நன்றி தமிழ்..
  தாங்கள் சுட்டிய கவிதை நான் எங்கோ எதிலோ படித்தது.

  பதிலளிநீக்கு
 16. நல்ல பதிவு.
  நியாயவிலைக் கடைக்காரர் கவிதை அருமை :-)

  பதிலளிநீக்கு