வெள்ளி, 1 மார்ச், 2013

காதலின் எதிரிகள்

பெற்றோர், அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சாதி, சமயம் எனக் 
காலகாலமாகவே காதலுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இவையெல்லாம் 

உண்மையில் காதலுக்கு எதிரிகளே அல்ல காதலின் உண்மையான எதிரி காதலர்கள் தான்.

பெற்றோர்களெல்லாம் காதலை ஏன் எதிர்க்கிறார்கள்?
சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது..
என்பது பெற்றோரின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து எப்பொழுது என்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து 

அவர்கள் கேட்காமலேயே செய்துவைத்த தமக்குத் தெரியாதா இவர்களுக்கு ஏற்ற 

வாழ்க்கைத் துணையை எப்போது, எப்படித் தேடித்தருவது? என்று, என்பது பெற்றோரின் குரலாகவுள்ளது.

காதலுக்குக் கண்கள் இல்லை!

நாங்கள் சாதி, மதம், உயர்வு, தாழ்வு எதுவும் பார்க்கமாட்டோம் ஆனால் எங்கள் பெற்றோர் 

இவையெல்லாம் பார்க்கிறார்கள் என்பது பிள்ளைகளின் வாதமாகவுள்ளது.

எல்லாம் உங்கள் எதிர்கால நலன் கருத்தித்தானே பார்க்கிறோம் என்பது பெற்றோரின் எண்ணமாகவுள்ளது.

கொடிய விலங்குக்கோ, கள்வர்களுக்கோ கூட அஞ்சாத காதலன் பெற்றோரிடம் தம் 

காதலைச் சொல்வதற்கு அஞ்சுகிறான். அது பெற்றோர் மீது இருக்கும் அச்சமல்ல! 

அவர்கள் செய்த நன்றியை நாம் மறந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே காரணமாகும்!

காதலுக்காகப் பெற்றோரைத் தூக்கியெறியும் பிள்ளைகளில்
எத்தனைபேர் பெற்றோருக்காகக் காதலைத் தூக்கிப்போடுகின்றனர்?

தம் பிள்ளை நமக்காக காதலையே தூக்கிப்போட முடிவு செய்துவிட்டது என்பதை அறிந்துமா பெற்றோர் அவர்களைப் பிரித்துவைப்பார்கள்.

காதலிப்பதோ அவர்களையே திருமணம் செய்வதோ ஒன்றும் பெரிய சாதனையல்ல!

பெற்றோரின் ஏற்போடு காதலரைக் கைபிடிப்பதே பெரிய சாதனையாகும்.


பெற்றோரிடம் முறைப்படி சொன்னால், காத்திருந்தால் பெற்றோர் காதலுக்கு மரியாதை செய்வார்கள்.

காதலுக்கு மரியாதை செய்த பெற்றோரைப் பற்றிய சங்கப்பாடல் ஒன்றைக் காண்போம்..

(தலைவன் சான்றோரைத் தலைவியின் பெற்றோரிடம் மணம் பேசி வர அனுப்பினான்

தன்பெற்றோர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை 

பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாகஎன்று தோழி கூறியது.)

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
                                             குறுந்தொகை 146. 
                                             வெள்ளிவீதியார்.


தலைவி - தோழி நீ நீடு வாழ்க!
நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து வைப்போர் உண்டா?

தோழி - தலைவன் சான்றோரை உன் பெற்றோரிடம் மணம் பேசி வர அனுப்பினான், நம் 
பெற்றோர் மறுப்பாரோ என்று நீ அஞ்சவேண்டிய தேவையில்லை தலைவன் வரைவை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக

தலைவன் மணம்பேச அனுப்பிய சான்றோர் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
வயது முதிர்ந்தோர், அவர்களுக்குத் தலைமுடியெல்லாம் நரைத்திருந்தது, தலைப்பாகை அணிந்திருந்தனர், உடல்தளர்ச்சி நீங்க கம்பு ஊன்றியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களோடு பேசிய நம் பெற்றோரும் மிக்க மகிழ்வோடு நன்று நன்று என்று ஏற்றுக்கொண்டனர். நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து வைப்போர் உண்டு என்று தோழி தலைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

 • இப்போதெல்லாம் காதலர் தினம் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ விடுப்பு எடுத்துவிட்டு பூங்காக்களில் சில ஆண்களும், பெண்களும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று கூடுகிறார்கள். சில காதல் எதிர்பாளர்கள் அவர்களை உங்கள் காதல் உண்மை என்றால் இதோ தாலி இப்போதே கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களும் அப்போது தப்பி்க்க தாலிகட்டிக்கொண்டு போகும்போது அந்தத் தாலியை கீழே எறிந்துவிட்டுச் செல்கின்றனர். இதுதான் தற்காலக் காதலின் நிலை. இந்தக் காதலர்களா காதலை வாழவைக்கிறார்கள்?
         இந்தக் காதலர்கள் அல்லவா காதலின் முதல் எதிரிகள்??

தொடர்புடைய இடுகை..

மாமலையும் ஓர் கடுகாம்

24 கருத்துகள்:

 1. கொடிய விலங்குக்கோ, கள்வர்களுக்கோ கூட அஞ்சாத காதலன் பெற்றோரிடம் தம்

  காதலைச் சொல்வதற்கு அஞ்சுகிறான். அது பெற்றோர் மீது இருக்கும் அச்சமல்ல!

  அவர்கள் செய்த நன்றியை நாம் மறந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே காரணமாகும்!

  100% உண்மை நண்பரே! அருமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்லிருக்கிங்க, வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. // காதலிப்பதோ அவர்களையே திருமணம் செய்வதோ ஒன்றும் பெரிய சாதனையல்ல!

  பெற்றோரின் ஏற்போடு காதலரைக் கைபிடிப்பதே பெரிய சாதனையாகும்.
  // உண்மைதான்.. சங்க பாடலை குறிப்பிட்டது நன்று

  பதிலளிநீக்கு
 3. சங்கப்பாடலும் அதை விவரித்த விதமும் மிகவும் அருமை முனைவரே... பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமையான பகிர்வு நண்பரே...
  அழகாய்... எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும்படி எழுதியிருக்கிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 5. அய்யா !தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் சங்க இலக்கியங்களை தற்காலத்துடன் பொருத்தும் தங்கள் சேவை வாழ்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கறுத்தான். மகிழ்ச்சி.

   நீக்கு

 6. இனிய வணக்கம் முனைவரே..
  நலமா??
  விடுமுறையில் இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை..


  இன்றைய காதலர்கள் தானே
  நாளைய பெற்றோரும்...
  இன்றைய பெற்றோரின் உணர்வுகளே நாளைக்கு
  இவர்களுக்கும் இருக்கும்...
  குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் வளர்ந்த கலாச்சாரம் நம்முடையது...
  வளர்ந்தவுடன் பிள்ளைகள் அவரவர்கள் வாழ்வை
  சித்தரித்துக் கொள்ளவேண்டியதுதான் என்ற
  மேலைநாட்டுக் கலாச்சாரம் அல்லவே நம்முடையது...

  குடும்ப என்ற கட்டுக்கோப்பில் சாதி மதம் என்ற அத்தனையும் உள்ளடக்கம்...

  நான் வளர்ந்துவிட்டேன் எனக்கான என வாழ்விற்கான முடிவுகள் அத்தனையும்
  நானே எடுத்துக் கொள்வேன் என்று உரைப்பது உத்தமம் என்று எனக்கு தோன்றவில்லை...

  காதலியுங்கள் அது தவறில்லை... பெற்றோர்கள் ஒன்றும் ராட்சதர்கள் அல்லர்...
  கடித்து குதறிவிட...
  கால அவகாசம் கொடுத்து அவரகளிடம் சம்மதம் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்...


  காதல் நன்றுதான்... பெற்றோரின் சம்மதத்துடன் அதை நிறைவாக்கி
  வாழ்வில் வெற்றி பெறுவதே அழகு என்று உணர்த்தும் உங்கள் பதிவு
  மிக அருமை முனைவரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

   நீக்கு
 7. ம்ம்..நல்லாச் சொன்னிங்க..காதலர் தான் காதலுக்கு எதிரிகள்..

  பதிலளிநீக்கு
 8. அன்றைய இன்றைய நிலையில் காதல் என்கிற விஷயத்தை ஒப்பாய்வு செய்ததுபோல விரிவான அழகான தமிழ் மணக்கும் கட்டுரை முனைவரை. ஒரு சங்கப் பாடலையும் சரித்து பொருள் உணர முடிந்தது கூடுதல் மகிழ்வ எனக்கு. அருமை!

  பதிலளிநீக்கு
 9. சங்க இலக்கிய வாயிலாக நல்லதொரு அறிவுரைப் பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. ஆய்ந்து எழுதிய அருகையான பதிவு முனைவரே!

  பதிலளிநீக்கு
 11. ஆய்ந்து எழுதிய அருகையான பதிவு முனைவரே! vaazththukal

  பதிலளிநீக்கு