வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பொன்னகரம் (ஒலிக்கோப்பு)

புதுமைப்பித்தன் என்ற புனைப் பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), அவர்களின் பிறந்தநாள் இன்று. மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். எள்ளலுடன் கூடிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவையாகும். 

புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் சிறப்பிடத்தைப் பெற்றுத்தந்தன. அவர் எழுதியதாகக் கருதப்பபடும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணி  ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். 


இவர் எழுதிய சிறுகதைகள்


மொழிபெயர்ப்பு சிறுகதைகள்




புதுமைப்பித்தன் அவர்களின் பொன்னகரம் என்ற கதையின் ஒலிக்கோப்பை இந்த இணைப்பில் கேட்கலாம்.

தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா.

4 கருத்துகள்:

  1. ஒலிக்கோப்பு இணைப்பிற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு முனைவரே...

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு. அவர் எழுதியதாகக் கருதப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்தில் வெளியிடப்பட்டன என்ற தகவல் வியப்பும் வருத்தமும் அளிக்கக்கூடியதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் சிகரத்தில் அவர் இருக்கிறார்! நல்ல பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு