வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 1 மார்ச், 2012

வயிற்றைக் கேள்!

எங்கோ படித்த கவிதை
படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை
சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை
என்னைத் நான் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணைநிற்கும் கவிதை.
வாழ்க்கையின் உயர்வை மிக அழகாக, ஆழமாக, நயமாக,நறுக்கென்று சொல்லும் கவிதை..

நானறியாத கவிஞராக இவர் இருந்தாலும் , எனக்குள் இருக்கும் நான் யார் என்பதை எனக்கு உணர்த்திய அக்கவிஞருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அக்கவிதையை உங்கள் முன்வைக்கிறேன்.






தலையைச் சொறி
நாக்கைக் கடி
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு
காலைச் சேர்
என்ன இது
வயிற்றைக் கேள்
சொல்லுமது

தொடர்புடைய இடுகைகள்

இணைய இணைப்பின்றி மின்னஞ்சல்


மின்னஞ்சல் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் ஜிமெயில் பயன்படுத்தபவர்களாகவே இருக்கிறோம். கூகுள் கியர் என்றொரு மென்பொருளைப் பயன்படுத்தி நெருப்புநரிஉலவியில் இணையஇணைப்பின்றி மின்னஞ்சலைப் பலரும் பயன்படுத்திவந்தனர்.
தற்போது குரோம் உலவியிலும் இந்த சேவையைப் பெறமுடிகிறது.

இதோ அதற்கான வழிமுறை..

  1. இணைய இணைப்புக்குள் செல்லவும்
  2. குரோம் உலவியைத் திறந்துகொள்ளவும்
  3. டூல்ஸ் எக்ஸ்டன்சனைத் தெரிவுசெய்யவும்
  4. ஆப்லைன் கூகுள் மெயில் செல்லவும்
  5. ஆட் கூகுள் மெயில் கொடுக்கவும்
  6. உங்கள் கணினியில் நிறுவப்பட்டு உங்களுக்கு ஆப்லைனில் பயன்படுத்தவிருப்பமா என்ற வினா கேட்கப்படும் விருப்பம் என்று கொடுக்கவும்.
  7. இப்போது இணைய இணைப்பில்லா சூழலிலும் உங்கள் ஜிமெயிலின் தகவல்களை நீங்கள் பயன்படுத்தமுடியும். நீங்கள் இணைய இணைப்பிற்குச்செல்லும்போதெல்லாம் உங்களுக்கு வந்த அஞ்சல்கள் இற்றைப்படுத்தப்படும்.
  8. இருந்தாலும் மின்னஞ்சலை நீங்கள் அனுப்பமுடியாது. நீங்கள் அனுப்பமுயலும் மின்னஞ்சல்கள் வரைவாக சேமிக்கப்பட்டு இணைப்பில் செல்லும்போது அனுப்பப்படும்.

புதன், 29 பிப்ரவரி, 2012

ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)

நான் பிறந்தநாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் ரூபாய் 86400 ஐ செலவு செய்துவருகிறேன்.
என்னங்க நம்பமுடியலயா?
இருந்தாலும் இதுதாங்க உண்மை.
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வளவு பணம் தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.
சிறுவயதிலெல்லாம் இவ்வளவு பணத்தை என்ன செய்வது எப்படிச் செலவு செய்வது என்றே தெரியாமல் பயனற்ற செலவுகளைச் செய்துவந்தேன்.
அப்போது இந்தத் தொகை பெரிதாகத்தான் தெரிந்தது.
இவ்வளவு பணத்தையும் எப்படிச் செலவு செய்வது என்றெல்லாம் திகைத்திருந்த காலங்கள் உண்டு.

இப்போதெல்லாம் இவ்வளவு பணமும் போதவில்லை என்றே தோன்றுகிறது.
பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டதா? 
இல்லை
என் தேவை அதிகரித்துவிட்டதா?

என்றே தெரியவில்லை..
உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத்தேவைகளுக்காக முதலில் செலவு செய்தேன்.
உறவுகளுக்காக, நட்புக்காக, பொழுதுபோக்கிற்காக என என் பட்டியில் காலந்தோறும் என்னோடு சேர்ந்து வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.
இப்போதெல்லாம் இந்தப் பணத்தை நான் செலவு செய்கிறேனா?
இல்லை
இந்தப் பணம் தான் என் வாழ்க்கையைச் செலவு செய்கிறதா? 

என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.

இவ்வளவு நேரம் நான் சொன்ன பணம் என்பது...
                                                                   24 மணிநேரம் 
ஒருமணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் 
ஒரு நிமிடத்துக்கு 60 மணித்துளிகள் 
24 X 60 X 60 = 86400










என்னங்க..
இப்ப சொல்லுங்க ஒவ்வொரு நாளும் நீங்க எவ்வளவு செலவு செய்கிறீர்கள்..?

                                                                                                          தொடர்புடைய இடுகை

ஏழாம் அறிவு உள்ளவரா நீங்கள்?

திங்கள், 27 பிப்ரவரி, 2012

அதே சிரிப்பூ..?



இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாம் நம்மைவிட நம்மைச் சுற்றியிருப்பவர்களையே அதிகம் சிந்தித்துப்பார்ப்போம். ஆம். அவர்கள் நம்மைப் பார்ப்பார்களே என்றே நினைத்துப்பார்ப்போம்.

கீழே விழுந்த ஒருவன் தன் வலியைவிட 
தன்னை யாரும் 
பார்த்துவிட்டார்களோ?
சிரித்துவிட்டார்களோ? 
என்பதிலேயே விழிப்புடனிருப்பான். அதுபோல,

நம்மை யாரும் பார்க்காவிட்டாலும்
எல்லோரும் நம்மை மட்டுமே பார்க்கிறார்கள் என்பது போன்ற மனவுணர்வு சில நேரங்களில் நமக்கு வருவதுண்டு.

அந்த நேரத்தில் வெட்கம் வந்து நம்மைக் கவ்விக்கொள்ளும். 
தலை கவிழ்ந்து மண்ணைத் தவிர யாரையும் பார்க்கத் தோன்றாது.


இங்கே ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடந்துவிட்டது.


தலைவன் பிரியும் முன்னர் முல்லையின் அரும்புகளைக் காட்டி இதே போல அடுத்த கார்காலத்தில் முல்லை மலரும்போது நான் வந்துவிடுவேன் என்று கூறிச்சென்றான். கார்காலம் வந்தும் அவன் வரவில்லை. இவ்வேளையில் இயல்பாக மலர்ந்த முல்லையைக் காண்கிறாள் தலைவி. இவளுக்கு முல்லை தன் தலைவனின் உயர்வு அவ்வளவுதானா? என்று எள்ளி நகையாடுவதாகவே தோன்றுகிறது.

பாடல் இதோ.

-ஒக்கூர் மாசாத்தியார்


குறுந்தொகை -126. முல்லை - தலைவி கூற்று
பருவம் கண்டு அழிந்த தலைமகள் (தலைவி) தோழிக்குச் சொல்லியது.

இதே போன்ற இன்னொரு பாடல்..

மேற்கண்ட பாடலில் தலைவியைக் கண்டு சிரித்த முல்லை இங்கு தலைவனைக் கண்டு சிரிக்கிறது..

ஏன் என்று பாருங்கள்..

இயல்பாகவே மாலையில் மலர்ந்த முல்லை மலரைக் கண்ட தலைவனின் மனது முல்லை மலரோடு பேச ஆரம்பித்துவிடுகிறது..

தலைவன் - ஏ முல்லை மலரே தலைவியை நீங்கித் தனித்திருக்கும் என்னைக் கண்டு இரக்கம்  கொள்ளவேண்டிய நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாயே இது உனக்கே தகுமா?

முல்லை - இப்போது நீ தலைவியுடன்  சேர்ந்தல்லவா இருக்கவேண்டும்.
அவளைத் தனிமையில் தவிக்கவிட்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்..

என்று கேட்டுவிட்டு கலகலவென முல்லை சிரிக்கும் ஒலி தலைவனின் காதில் கேட்கிறது.




கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்  
    
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை  
    
முல்லை வாழியோ முல்லை நீநின்  
    
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை  

நகுவை போலக் காட்டல்  
    
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.  
என்பது வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்குரைப்பானாய் உரைத்தது.

குறுந்தொகை 162

கருவூர்ப் பவுத்திரன்.
(முல்லையே,  நீ வாழ் வாயாக!
மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற, நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண்,
தாம் சென்ற பணி முடிந்து பலரும் தம் வீட்டிற்குச் செல்லும் ஒளியிழந்த மாலைக் காலத்தில்,
நீ உனது சிறிய வெள்ளிய அரும்புகளைக் காட்டிச் சிரித்தாய்!
தலைவியரைப் பிரிந்து என்போல்  தனித்திருப்போரை  
எள்ளி நகைப்பது போலவே உன் செயல் இருக்கிறது.
இது உனக்குத் தகுமோ?)

இலக்கிய நயம்

 முல்லை மலர்வது இயல்பான ஒன்றுதான் என்றாலும் இங்கு தலைவிக்கும், தலைவனுக்கும் அது தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறது என்றே தோன்றுகிறது. 
இருவரின் குற்றவுணர்வுமே இதற்கு அடிப்படையாக அமைகின்றன. 
தம் அகவாழ்வை இயற்கையோடு அழகாகப் இயைபுபடுத்திப் பார்க்கும் சங்கத்தமிழரின் வாழ்வு இன்றைய தலைமுறையினர் எண்ணிப்பார்க்க வேண்டிய இனிய நினைவுகளாகும்.

தொடர்புடைய இடுகைகள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

காற்றுக்கு இத்தனை பெயர்களா?

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்றுசூறாவளிக் காற்று

தொடர்புடைய இடுகைகள்