Friday, January 8, 2010

கொட்டம்பலவனார்.கண்ணுக்குத் தெரியாத மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.
மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனான் ஆனால் சுயநலம் கொண்ட சில மனிதர்களைப் பார்க்கும் போது இவர்களுக்கெல்லாம் மனம் என்றவொன்று இருக்கிறதா?
என்ற எண்ணம் தோன்றுகிறது.
மனம் இல்லாத இவர்கள் எப்படி மனிதராவர்கள்?
என்றும் தோன்றுகிறது.

மனதைப் பறிகொடுத்துவிட்டேன்!!

என பல சூழல்களில் நாம் சொல்வதுண்டு.

மனது எப்போது பறிபோகக் கூடும் என்பது யாருக்குத் தெரியும்?

பறிபோன மனதைத் திரும்பப் பெறுவது எப்படி?


மழலையின் சிரிப்பிலோ!
மழையின் சாரலிலோ!
காற்றின் உரசலிலே!
மலரின் வாசத்திலோ!
மேகத்தின் வடிவத்திலோ!
காகத்தின் கரைதலிலோ!
மயிலின் ஆடலிலோ!
குயிலின் கூவலிலோ!

இன்னும் இயற்கையின் பற்பல விந்தைகளில் ஏதோ ஒன்றிலோ மனதைப் பறிகொடுத்தால் சில நிமிடங்களில் பறிகொடுத்த மனதைப் பறிமுதல் செய்து கொள்ளலாம். ஆனால் இங்கு ஒரு தலைவன் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பப் பெற இயலாது தவிக்கிறான்.பாடல் இதோ,


“கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
5 1கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே 2 கொழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்¢க் கொடிச்சி
கொடிச்சி கையத் ததுவேபிறர்
10 விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே.

நற்றிணை - 95.

கொட்டம்பலவனார்
திணை : குறிஞ்சி.
துறை : இது, தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென உரைத்தது.நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட எம் தலைவியிடம் சிக்குண்டது என் மனது. அவளன்றி யாராலும் என் மனதை விடுவிக்க இயலாது என்று தலைவன் தன் நண்பனிடம் கூறுகிறான்.


பக்கத்திலே குழல் ஒலிக்க, பல இசைக்கருவிகள் முழங்க கயிற்றின் மீது கழைக்கூத்தி நடந்தாள். அந்தக் கயிற்றின் மேல் அத்திப்பழம் போல் சிவந்த முகத்தையும், பஞ்சு போன்ற தலையையும் கொண்ட குரங்கு ஆடியது. அதனைக் கண்டு குறவர்குல சிறுவர்கள் பெரிய பாறையின் மீது மூங்கிலின் மீது ஏறி நின்று தாளம் கொட்டுவர்.

அந்தக்குன்றகத்தில் வளம் நிறைந்த காவற்காடு ஒன்று உள்ளது. அங்கு நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட கொடிச்சி (குறிஞ்சி நிலப்பெண்) ஒருத்தி உள்ளாள். அவளிடம் சிக்குண்டது எனது நெஞ்சம். அவளிடம் சிக்கிய எனது நெஞ்சை அவளே மனம் வந்து விடுவித்தால் தான் உண்டு. அன்றி வேறு யாரும் விடுவிக்க இயலாதவாறு சிக்கிக்கொண்டது.

இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில்,

இப்பாடலில்
“தாளங்கொட்டுமென்ற சொல் சிறப்பினாலேயே இவ்வாசிரியர் கொட்டம்பலவனாரெனப் பெயர் பெற்றார்.

உட்பொருள்


ஆடுகள மகளான கூத்தி நடந்த கயிற்றின் மேல் மந்தியின் குட்டி ஏறி ஆடியது என்பது நேர்வழியில் வாழ்ந்துவரும் எனது நெஞ்சத்தில் கொடிச்சி (தலைவி) சென்று தங்குவதனை அறிந்த நீ கைகொட்டிச் சிரிக்கிறாய் (நகை) என்று பாங்கனை (நண்பனை) பார்த்து தலைவன் உரைப்பது உட்பொருளாகவுள்ளது.

மெய்ப்பாடு
- வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனிடத்துரைத்தல்.

இப்பாடலின் வழியாக,

கொட்டம்பலவனார்
என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், வருத்தம் பற்றி வந்த இளிவரல் என்னும் மெய்பாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் கயிற்றின் மேல் நின்றாடும் கழைக்கூத்தர்கள் இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருக்கிறார்கள் என்பதை ஒப்பு நோக்கமுடிகிறது..

அவர்கள் பொழுதுபோக்காக கயிற்றில் ஆடவில்லை!
தம் வயிற்றுப்பாட்டுக்காகத் தான் கயிற்றில் ஆடுகிறார்கள்!

என்ற உண்மையையும் மறுக்கமுடியாது.

26 comments:

 1. எடுத்துக்கொண்ட பாடல், அதற்கான விளக்கம், அதன் மூலம் சொல்லவந்த செய்தி எல்லாமே தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.

  பகிர்வுகளுக்கு நன்றி...

  ReplyDelete
 2. இந்தக் கலை இவ்வளவு பழையதா? ஆச்சரியமாக இருக்கிறது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. //மனம் இல்லாத இவர்கள் எப்படி மனிதராவர்கள்?//

  உண்மையான வார்த்தைகள்.

  ReplyDelete
 4. க.பாலாசி said...

  எடுத்துக்கொண்ட பாடல், அதற்கான விளக்கம், அதன் மூலம் சொல்லவந்த செய்தி எல்லாமே தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.

  பகிர்வுகளுக்கு நன்றி..//
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 5. வானம்பாடிகள் said...

  இந்தக் கலை இவ்வளவு பழையதா? ஆச்சரியமாக இருக்கிறது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

  ஆம் ஐயா!
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!!

  ReplyDelete
 6. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

  //மனம் இல்லாத இவர்கள் எப்படி மனிதராவர்கள்?//

  உண்மையான வார்த்தைகள்.//

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 7. பழந்தமிழ் பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி...முனைவர் குணசீலன்

  ReplyDelete
 8. அவர்கள் பொழுதுபோக்காக கயிற்றில் ஆடவில்லை!
  தம் வயிற்றுப்பாட்டுக்காகத் தான் கயிற்றில் ஆடுகிறார்கள்!
  ..................பரிதாபத்துக்குரியவர்கள். திறமை இருந்தும் ...............
  நெகிழ வைத்து இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. தலைவனின் ஆற்றாமையாக வரும் இப்ப்பாடலோடு கலைக்கூத்தாடிகளின் வருமையையும் கலந்துரைத்தது மிக அழகு. பொதுநலம் தெரிகிறது.

  ReplyDelete
 10. வானம்பாடிகள் said...

  இந்தக் கலை இவ்வளவு பழையதா? ஆச்சரியமாக இருக்கிறது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

  புலவன் புலிகேசி said...
  தலைவனின் ஆற்றாமையாக வரும் இப்ப்பாடலோடு கலைக்கூத்தாடிகளின் வருமையையும் கலந்துரைத்தது மிக அழகு. பொதுநலம் தெரிகிறது.

  இவ்விரு கருத்தே எனக்கும் தோன்றியது குணா....

  ReplyDelete
 11. கவிக்கிழவன் said...
  அருமை.//

  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 12. Chitra said...
  அவர்கள் பொழுதுபோக்காக கயிற்றில் ஆடவில்லை!
  தம் வயிற்றுப்பாட்டுக்காகத் தான் கயிற்றில் ஆடுகிறார்கள்!
  ..................பரிதாபத்துக்குரியவர்கள். திறமை இருந்தும் ...............
  நெகிழ வைத்து இருக்கிறீர்கள்..//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

  ReplyDelete
 13. புலவன் புலிகேசி said...
  தலைவனின் ஆற்றாமையாக வரும் இப்ப்பாடலோடு கலைக்கூத்தாடிகளின் வருமையையும் கலந்துரைத்தது மிக அழகு. பொதுநலம் தெரிகிறது.//

  நன்றி நண்பா..

  ReplyDelete
 14. தமிழரசி said...
  வானம்பாடிகள் said...

  இந்தக் கலை இவ்வளவு பழையதா? ஆச்சரியமாக இருக்கிறது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

  புலவன் புலிகேசி said...
  தலைவனின் ஆற்றாமையாக வரும் இப்ப்பாடலோடு கலைக்கூத்தாடிகளின் வருமையையும் கலந்துரைத்தது மிக அழகு. பொதுநலம் தெரிகிறது.

  இவ்விரு கருத்தே எனக்கும் தோன்றியது குணா....//


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்..

  ReplyDelete
 15. //மழைலையின் சிரிப்பிலோ!
  மழையின் சாரலிலோ!
  காற்றின் உரசலிலே!
  மலரின் வாசத்திலோ!
  மேகத்தின் வடிவத்திலோ!
  காகத்தின் கரைதலிலோ!
  மயிலின் ஆடலிலோ!
  குயிலின் கூவலிலோ! //

  அருமையான பகிர்வு

  ReplyDelete
 16. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்ரே..

  ReplyDelete
 17. நெகிழ்வான பதிவு குணா சார்.

  ReplyDelete
 18. இடுகை நெகிழ வைக்கிறது அண்ணா....

  ReplyDelete
 19. அற்புதமான புனைவு நண்பரே வாழ்த்துக்கள் !!!  அன்பின் உறவுகள் அனைவருக்கும்,

  என் இதயம் கனிந்த

  " பொங்கல் நல் வாழ்த்துக்கள்.".

  ReplyDelete
 20. நாறுமயிர்க்கொடிச்சி என்று சொன்னது தலைவனுக்கும் தலைவிக்கும் இயற்கை புணர்ச்சி நடந்துவிட்டதைக் காட்டுகிறது போலும்; காண மட்டுமே செய்திருந்தால் தலைவியின் கூந்தல் மணம் எப்படி தலைவனுக்குத் தெரிந்திருக்கும்?!

  ReplyDelete
 21. Blogger சங்கர் said...

  அற்புதமான புனைவு நண்பரே வாழ்த்துக்கள் !!!  அன்பின் உறவுகள் அனைவருக்கும்,

  என் இதயம் கனிந்த

  " பொங்கல் நல் வாழ்த்துக்கள்."


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 22. Blogger குமரன் (Kumaran) said...

  நாறுமயிர்க்கொடிச்சி என்று சொன்னது தலைவனுக்கும் தலைவிக்கும் இயற்கை புணர்ச்சி நடந்துவிட்டதைக் காட்டுகிறது போலும்; காண மட்டுமே செய்திருந்தால் தலைவியின் கூந்தல் மணம் எப்படி தலைவனுக்குத் தெரிந்திருக்கும்?!


  ஆம் நண்பரே..
  கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete