Tuesday, January 12, 2010

கணினியில் ஏற்பட்ட பிழைகள்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு..ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத்
தாருங்கள்.6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog
தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

32 comments:

 1. ஹா ஹா ஹா.....

  இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

  தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா

  நன்றாக உள்ளது

  ReplyDelete
 4. Blogger வரதராஜலு .பூ said...

  ஹா ஹா ஹா

  நன்றாக உள்ளது//

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 5. Blogger ஆரூரன் விசுவநாதன் said...

  nice jokes//

  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 6. Blogger ஈரோடு கதிர் said...

  ஜூப்பருங்க.//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 7. கலக்கிட்டீங்க நண்பா... நான் ஏதோ சீரியஸான இடுகை என்று நினைத்து வந்தேன். நல்லா சிரிச்சேன்... தங்களுக்கும் நண்பர்களுக்கும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. நன்றி நண்பரே..
  தொடர்ச்சியான இலக்கிய இடுகைகளுக்கு நடுவே ஒரு நெகிழ்விற்காக இவ்விடுகையிட்டேன்...

  தங்களுக்கும் தமிழர்திருநாள் வாழத்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 9. நல்ல தமிழாக்கம் தலைவா!! பொங்கல், இட்லி, வடை வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. எல்லாமே சிரிப்பைத் தருகின்றன.ஆனாலும் பத்தும் பதினொன்றும்... வெடிச்சிரிப்பு!

  ReplyDelete
 11. உஸ்.... எப்பா... நீங்க தமாசும் ரசிப்பீங்களா, நல்ல விஷயம்.

  ReplyDelete
 12. குறுந்தொகையில் இருந்து கூகிள் தொகை வரை..............கலகலக்குது.
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நல்ல நகைச்சுவை நண்பரே. மிகவும் சிரிப்பாக இருந்தது வெளியிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. நண்பரே...நகைச்சுவை அருமையாக உள்ளது. என்ன திடிரென்று டி்ராக மாறி விட்டீர்கள்...
  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 15. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள். :))

  ReplyDelete
 16. Blogger கலையரசன் said...

  நல்ல தமிழாக்கம் தலைவா!! பொங்கல், இட்லி, வடை வாழ்த்துக்கள்..//

  நன்றி நண்பா..

  ReplyDelete
 17. அ. நம்பி said...

  எல்லாமே சிரிப்பைத் தருகின்றன.ஆனாலும் பத்தும் பதினொன்றும்... வெடிச்சிரிப்பு!

  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 18. Chitra said...

  குறுந்தொகையில் இருந்து கூகிள் தொகை வரை..............கலகலக்குது.
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா...

  ReplyDelete
 19. பித்தனின் வாக்கு said...

  நல்ல நகைச்சுவை நண்பரே. மிகவும் சிரிப்பாக இருந்தது வெளியிட்டமைக்கு நன்றி.

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..

  ReplyDelete
 20. வேலன். said...

  நண்பரே...நகைச்சுவை அருமையாக உள்ளது. என்ன திடிரென்று டி்ராக மாறி விட்டீர்கள்...
  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  கருத்துரைக்கு நன்றி நண்பா...

  துறை மாறவில்லை நண்பரே...

  இலக்கிய இடுகைகளுக்கு இடையே சற்று இளைப்பாற இந்த நகைச்சுவைகள்...

  ReplyDelete
 21. வானம்பாடிகள் said...

  இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள். :))

  தங்களுக்கும் இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் ஐயா..

  ReplyDelete
 22. "நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
  எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
  தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?"

  லொல்லு...........

  எனது முகவரிக்கு நீங்கள் தோற்ற பணத்தை அனுப்பிவிடுங்கள் நீங்கள் வென்றெடுத்த பணத்தை பெரிய அண்ணாச்சி பில்கேட்ஸிடம் வாங்கிகொள்ளுங்கள்

  வாழ்க வளமுடன்


  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 23. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை நண்பரே...

  நான் குறிப்பிட்ட நகைச்சுவையைவிட நீங்க கேட்டது பெரிய நகைச்சுவையாக இருக்கிறது நண்பரே...

  சிரித்து மகிழ்ந்தேன்..

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 24. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
  எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
  www.radaan.tv

  http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

  ReplyDelete
 25. நல்ல நகைச்சுவை பகிர்வு..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 26. முனைவர்.இரா.குணசீலன்
  என்னாச்சு ?
  ஏன்?
  நீங்களுமா ....???

  ReplyDelete
 27. Blogger ஸ்ரீ said...

  :-)))))))))))))))

  வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 28. Blogger புலவன் புலிகேசி said...

  நல்ல நகைச்சுவை பகிர்வு..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே..

  நன்றி நண்பா!!

  ReplyDelete
 29. Blogger நண்டு=நொரண்டு said...

  முனைவர்.இரா.குணசீலன்
  என்னாச்சு ?
  ஏன்?
  நீங்களுமா ....???//

  நண்பரே இளைப்பாறுவதற்காகவே இந்த நகைச்சுவை...

  தொடர்ந்து இலக்கிய இடுகைகள் தான் எழுதுவேன்..

  வருகைக்கும் நன்றி நண்பரே..

  தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்!!

  ReplyDelete