Tuesday, March 2, 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-2

தமிழ்மொழி தனித்து இயங்கவல்லது. பிறமொழிகளின் துணையின்றி தமிழில் பேசவும் எழுதவும் முடியும். “தனித்தமிழ்“ பேசுவோரையும் எழுதுவோரையும் காண்பதே அரிதாகவுள்ளது. அவ்வாறு பேசுவோரை இந்தச் சமூகம் தனிமைப்படுத்துவதையும் காணமுடிகிறது. “இவ்வாறு தனிமைப்படுத்துவோர் வேறுயாருமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான். இவர்கள் “தன் தலையில் மண்ணைத் தூற்றிக் கொள்வதோடு தமிழின் தலையிலும் மண்ணைத் தூற்றுவது வருத்தத்துக்குரியவொன்றாகவே உள்ளது.

எத்தனையோ பண்பாட்டு, மொழித்தாக்கங்களிலிருந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு உயிரோடு திகழ்வது நம் தமிழ்மொழி. இந்த நிலையும் கடந்து போகும். தமிழ்மொழி நிலைத்துவாழும் என்ற நம்பிக்கையோடு…….


பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்-பகுதி-1 ல் வடமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் காட்டினேன். பலநண்பர்களும் ஆர்வத்தோடு வந்து கருத்துத் தெரிவித்தமை மகிழ்வளிப்பதாக இருந்தது. அதில் சிலர்…

◊ வடசொற்களில் சில தமிழுக்குரியது என்றும், தமிழ்ச்சொற்கள் சில வடசொற்கள் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

கருத்துரையாளர்களின் மொழிப்பற்று பெருமிதம் கொள்வதாக இருந்தது.

◊ கால்டுவெல் அறிஞர் வந்து சொல்லும் வரை வடமொழிதான் இந்தியாவில் செம்மொழியாகக் கருதப்பட்டது. அவர் தான் “ திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்“ என்ற நூல் வாயிலாக “ திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழ்“ என்ற கருத்தை உலகறியத் தெரிவித்தார். அதன் பின்னர் தான் தமிழி்ன் தொன்மை, செழுமை, வளமை, இலக்கிய நயம் ஆகியவற்றை உலத்தார் அறிந்துகொண்டனர். தமிழில் தொல்காப்பியர் பெறுமிடத்தை வடமொழியில் பாணீனி பெறுகிறார்.
◊ தமிழ்மொழி பழமையானது என்று நாம்கருதும் அதே சூழலில் பிறமொழியின் தொன்மையையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
◊ நம்மில் பலர் தமிழ் மொழியைப் பேசத் தயங்குவதையும், பிறமொழிகளின் மீது ஈர்ப்புடையவர்ளாக உள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.◊ தமிழின் தொன்மையையும், வளமையையும் வேர்ச்சொல்லாய்வின் வாயிலாக உலகறியச் செய்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். இவர் தம் கட்டுரைகள், “ஞாலமுதல் மொழி தமிழ்“ என்பதை பெருங்குரலிட்டு மொழிவனவாகும்.
◊ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொல்லும் தகுதிவாய்ந்த ஒரே மொழி நம் தமிழ்மொழி. அதனால் கருத்துச் சுதந்திரம் நிறைந்த இக்காலத்தில் தமிழின் தொன்மையும், வளமும், வேர்ச்சொல் குறித்த விழிப்புணர்வும் இன்றைய ஊடகத்துறைக்குத் தேவையெனக் கருதுகிறேன்.


தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களாக உணரச்சிப் பாவலர் காசியானந்தன் அவர்கள் கூறும் சான்று…“வீட்டுக்கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும் கோணிப்பையில் இருந்த பப்பாளிப்பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும் கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ ரிக் ஷாவில் தப்பி ஓடியபோது தகவல் அறிந்த போலீ்ஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக்கட்டின“


செய்தி ஏட்டில் திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான் என நினைக்கிறோம். ஆனால்… தமிழா இது..?

சாவி போர்ச்சுகீசியம் (திறவுகோல்)
பீரோ - பிரெஞ்சு (பேழை)
துட்டு - டச்சு (பணம்)
கோணி - இந்தி (சாக்கு, கந்தை)
பப்பாளி - மலாய் (பப்பாளி)
சப்போட்டா - இசுப்பானியம் (சப்போட்டா)
கொய்யா- பிரேசிலியன் (கொய்யா)
சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
வயது- சமஸ்கிருதம் (பருவம்)
கில்லாடி - மராத்தி (திறமைசாலி)
ஆட்டோ- கிரேக்கம் (தானியங்கி)
ரிக் ஷா - சப்பானியம் (இழுவை)
தகவல் - அரபி (செய்தி)
போலீஸ் - இலத்தீன் (காவலர்)
ஏட்டு - ஆங்கிலம் (தலைமைக்காவலர்)
துப்பாக்கி - துருக்கி (துமுக்கி)
தோட்டா - உருது(குண்டு)

அடைப்புக்குள் உள்ள சொற்கள் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களாகும்.

எந்த மொழியையும் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை.

29 comments:

 1. நல்ல ஆய்வுகள். அனால் நல்ல தூய தமிழ் மொழி தெரியாது என்பதுதான் உரையாடலுக்குத் தடைகல். உங்கள் கட்டுரைகள் நன்று. நாங்களும் முயற்ச்சிக்கின்றேம். நன்றி.

  ReplyDelete
 2. தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
  பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர
  நீரூற்றி, உரமிட்டுச் செழிப்பாக்குவான்
  தமிழன் ரொம்ப நல்லவன்

  ReplyDelete
 3. பாவலர் கூறும் சான்று..நல்ல உவமை நண்பரே...

  ReplyDelete
 4. பெயற்சொற்களை அப்படியே பயன்படுத்துவது தவறில்லை!
  ஏனென்றால் நாம் அதற்கு வேறு தமிழ் பெயர்கள் வைக்கவில்லை!

  முக்கியமாக கொய்யா, பப்பாளி!

  ReplyDelete
 5. ஒரு பத்தியில் இத்தனை மொழிச்சொல். பிரமிக்கவைக்கிறது! பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. அத்தனைக்கும் தமிழ்ச் சொற்களைச்சொல்லிவிடுங்களேன்!!

  ReplyDelete
 7. இத்தனையும் தமிழ் இல்லையா!!!,
  நன்றி தகவலுக்கு.

  ReplyDelete
 8. மிக மிக நன்றி முனைவரே..பகிர்வுக்கு.

  ReplyDelete
 9. Blogger பித்தனின் வாக்கு said...

  நல்ல ஆய்வுகள். அனால் நல்ல தூய தமிழ் மொழி தெரியாது என்பதுதான் உரையாடலுக்குத் தடைகல். உங்கள் கட்டுரைகள் நன்று. நாங்களும் முயற்ச்சிக்கின்றேம். நன்றி.


  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 10. Blogger சுப.நற்குணன் said...

  தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
  பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர
  நீரூற்றி, உரமிட்டுச் செழிப்பாக்குவான்
  தமிழன் ரொம்ப நல்லவன்.

  ஆம் நண்பரே...
  பிறமொழிகளில் தமிழன் கொண்ட பற்று, தம் மொழிமீது கொள்ளாதது வருத்தத்துக்குரியதுதான்.

  ReplyDelete
 11. Blogger புலவன் புலிகேசி said...

  பாவலர் கூறும் சான்று..நல்ல உவமை நண்பரே...


  ஆம் நண்பரே..
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 12. Blogger வால்பையன் said...

  பெயற்சொற்களை அப்படியே பயன்படுத்துவது தவறில்லை!
  ஏனென்றால் நாம் அதற்கு வேறு தமிழ் பெயர்கள் வைக்கவில்லை!

  முக்கியமாக கொய்யா, பப்பாளி!


  சரிதான் நண்பா..
  பெயர்ச்சொற்களை அப்படியே பயன்படுத்தலாம்..
  தவறில்லை..
  கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 13. வானம்பாடிகள் said...

  ஒரு பத்தியில் இத்தனை மொழிச்சொல். பிரமிக்கவைக்கிறது! பகிர்வுக்கு நன்றிஇ

  கருத்துரைக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
 14. தேவன் மாயம் said...

  அத்தனைக்கும் தமிழ்ச் சொற்களைச்சொல்லிவிடுங்களேன்!!

  இதோ..

  சாவி போர்ச்சுகீசியம் (திறவுகோல்)
  பீரோ - பிரெஞ்சு (பேழை)
  துட்டு - டச்சு (பணம்)
  கோணி - இந்தி (சாக்கு, கந்தை)
  பப்பாளி - மலாய் (பப்பாளி)
  சப்போட்டா - இசுப்பானியம் (சப்போட்டா)
  கொய்யா- பிரேசிலியன் (கொய்யா)
  சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
  வயது- சமஸ்கிருதம் (பருவம்)
  கில்லாடி - மராத்தி (திறமைசாலி)
  ஆட்டோ- கிரேக்கம் (தானியங்கி)
  ரிக் ஷா - சப்பானியம் (இழுவை)
  தகவல் - அரபி (செய்தி)
  போலீஸ் - இலத்தீன் (காவலர்)
  ஏட்டு - ஆங்கிலம் (தலைமைக்காவலர்)
  துப்பாக்கி - துருக்கி (துமுக்கி)
  தோட்டா - உருது(குண்டு)


  கருத்துரைக்கு நன்றி மருத்துவரே..

  ReplyDelete
 15. சைவகொத்துப்பரோட்டா said...

  இத்தனையும் தமிழ் இல்லையா!!!,
  நன்றி தகவலுக்கு.


  ஆம் நண்பரே..
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 16. ஏட்டு ஆங்கிலமா ? நான் தமிழ் னுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

  இது தமிழா? எனும் தலைப்பில் விருட்சத்தில் வெளியான பதிவு - link - http://www.virutcham.com/?p=470

  - விருட்ஷம்

  ReplyDelete
 17. Head என்பதை நம்மாட்கள்தான் மாற்றி ”ஏட்டு”(த.க) என வைத்துவிட்டார்கள்....

  வயதுக்கு பருவம் என்று சொல்லும் போது / பருவ காலத்திற்கும் அதே சொல்லைத்தானே உபயோகிக்கிறோம்...

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 18. ஆகா இது தமிழ்...... தமிழழகு மொழிகளில் தமிழழகு.. பல மொழி கலந்து இரசம் கொடுக்கும் தமிழ் தாய் வாழ்க... பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி குணா.. தொடருங்கள்
  பேழை
  பணம்
  கோணி - சாக்கு, கந்தை
  பப்பாசி
  கொய்யா
  சுமார் - ஏறத்தாழ
  வயது-பருவம்
  திறமைசாலி
  தகவல் -செய்தி
  குண்டு

  மேலுள்ளவை நம்ம ஊரில் வழக்கத்திலுள்ள தமிழ்...

  ReplyDelete
 19. அதனால் கருத்துச் சுதந்திரம் நிறைந்த இக்காலத்தில் தமிழின் தொன்மையும், வளமும், வேர்ச்சொல் குறித்த விழிப்புணர்வும் இன்றைய ஊடகத்துறைக்குத் தேவையெனக் கருதுகிறேன்.


  ........ நல்லது.

  ReplyDelete
 20. /* சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
  வயது- சமஸ்கிருதம் (பருவம்)
  தகவல் - அரபி (செய்தி) */

  ஒரு சில வார்த்தைகளை இன்றுதான் உணர்ந்துக்கொண்டேன்... பயனுள்ள பதிவு...

  ReplyDelete
 21. //வயது- சமஸ்கிருதம் (பருவம்)//

  அகவை என்றும் சொல்லலாம்

  ReplyDelete
 22. Virutcham said...

  ஏட்டு ஆங்கிலமா ? நான் தமிழ் னுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

  இது தமிழா? எனும் தலைப்பில் விருட்சத்தில் வெளியான பதிவு - link - http://www.virutcham.com/?p=470

  - விருட்ஷம்


  நன்றி நண்பரே பார்க்கிறேன்.

  ReplyDelete
 23. Blogger ஈரோடு கதிர் said...

  Head என்பதை நம்மாட்கள்தான் மாற்றி ”ஏட்டு”(த.க) என வைத்துவிட்டார்கள்....

  வயதுக்கு பருவம் என்று சொல்லும் போது / பருவ காலத்திற்கும் அதே சொல்லைத்தானே உபயோகிக்கிறோம்...

  பகிர்வுக்கு நன்றி நண்பரே..


  ஆம் நண்பரே..
  கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 24. Blogger றமேஸ்-Ramesh said...

  ஆகா இது தமிழ்...... தமிழழகு மொழிகளில் தமிழழகு.. பல மொழி கலந்து இரசம் கொடுக்கும் தமிழ் தாய் வாழ்க... பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி குணா.. தொடருங்கள்
  பேழை
  பணம்
  கோணி - சாக்கு, கந்தை
  பப்பாசி
  கொய்யா
  சுமார் - ஏறத்தாழ
  வயது-பருவம்
  திறமைசாலி
  தகவல் -செய்தி
  குண்டு
  மேலுள்ளவை நம்ம ஊரில் வழக்கத்திலுள்ள தமிழ்...


  ஆம் நண்பரே..
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 25. Chitra said...

  அதனால் கருத்துச் சுதந்திரம் நிறைந்த இக்காலத்தில் தமிழின் தொன்மையும், வளமும், வேர்ச்சொல் குறித்த விழிப்புணர்வும் இன்றைய ஊடகத்துறைக்குத் தேவையெனக் கருதுகிறேன்.


  ........ நல்லது.

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

  ReplyDelete
 26. flying taurus said...

  /* சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
  வயது- சமஸ்கிருதம் (பருவம்)
  தகவல் - அரபி (செய்தி) */

  ஒரு சில வார்த்தைகளை இன்றுதான் உணர்ந்துக்கொண்டேன்... பயனுள்ள பதிவு...


  கருத்துரைக்கு நன்றிகள்!!

  ReplyDelete
 27. /* சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
  வயது- சமஸ்கிருதம் (பருவம்)
  தகவல் - அரபி (செய்தி) */

  ஒரு சில வார்த்தைகளை இன்றுதான் உணர்ந்துக்கொண்டேன்... பயனுள்ள பதிவு...

  March 2, 2010 6:07 PM
  Delete
  Blogger கோவி.கண்ணன் said...

  //வயது- சமஸ்கிருதம் (பருவம்)//

  அகவை என்றும் சொல்லலாம்.

  ஆம் நண்பரே.
  கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 28. உமிகொண் டரிசி துறப்பான் - தமிழின்
  உலகப் பெருமை மறப்பான்
  தமிழா உன்றன் தலைவிதி மாற்றத்
  தரணியில் எவனினிப் பிறப்பான்?

  அய்யகோ....

  ReplyDelete
 29. ஏட்டு என்பது ஏட்டுச் சுரைக்காய் என்று வரும்போது தமிழ்தான்.. ஆனால் காவல் துறை அலுவலர் என்பதைக் குறிப்பது தமி ழ் அன்று

  ReplyDelete