திங்கள், 29 மார்ச், 2010

வெற்றிக்குப் பக்கத்தில்.14 ஆம் நூற்றாண்டில்,கொலம்பஸ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு புதிய உலகைக்காணும் ஆவலில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கடல் வழியே புறப்பட்டது. 24 நாட்களாகத் தொடர்ந்து பயணம் எந்தக் கரையும் தென்படவில்லை. ரொனால்டோ என்பவர் உணவுக்கான பொறுப்பாளர். இருக்கக்கூடிய உணவு தற்போது திரும்பிச்சென்றால் மட்டுமே போதுமானது.

24நாட்களில் சொந்த நாட்டை அடையலாம். தொடர்ந்து பயணம் செய்தால் எல்லோரும் உணவுக்கு வழியின்றி கடலிலேயே செத்து மடிய வேண்யது தான். ரொனால்டோ சகபயணிகளிடம் கேட்டபோது அவர்களும் வந்த வழியே திரும்புவது தான் நல்லது என்று விரும்பினர்.

தங்கள் கருத்தை கொலம்பசிடம் தெரிவித்தார்கள்.தம் இலக்குக்கு உணவு தடையாவதா? ஏற்றுக்கொள்ளவில்லை கொலம்பசின் மனது. முடியாது எக்காரணத்தைக்கொண்டும் பின்வாங்கக்கூடாது தொடர்ந்து முன்னோக்கிச் செலுத்துங்கள் என்றார். சிறிது நேரத்தில் ரொனால்டோ தலைமையிலான புதிய குழு கூடி கொலம்பசைக் கைது செய்து கயிற்றில் கட்டியது. கப்பல் பின்னோக்கிச் சென்றது.

வருத்தத்துடன் தன் இலக்குப் பறிபோவதைப் பார்த்த கொலம்பஸ், ரொனால்டோவை அழைத்து, சரி இருக்கும் உணவில் எனக்கும் பங்கு இருக்கிறது தானே என்றார்.
ரொனால்டோ, ஆமாம் அதிலென்ன சந்தேகம், தங்கள் உயிரையும் சேர்த்துக்காக்க வேண்டிய பணி எனக்கு இருக்கிறது என்றார் ரொனால்டோ,

நான் சொல்வதை நன்றாகக் கேளுங்கள்,

எனக்கான 24 நாட்கள் உணவை நான் சாப்பிடாவிட்டால் அது இங்கு இருப்பவர்கள் கூட ஒரு நாள் சாப்பிடப் போதுமானதாக இருக்குமா?

ஆம் இருக்கும் என்றார் ரொனால்டோ.

சரி அப்படியென்றால் எனக்காக 24மணி நேரம் கப்பலை முன்னோக்கிச் செலுத்துங்கள். 24 மணி நேரத்தில் கரை தெரிந்தால் சரி, இல்லையென்றால் அங்கே என்னைக் கடலில் தூக்கி எறிந்து விட்டு நீங்கள் தாய்நாடு திரும்புங்கள் என்றார் .

தம் இலக்கின் மீது கொலம்பசுக்கு இருந்த ஆர்வம் கண்டு தலைவணங்கிய ரொனால்டோ கப்பலை முன்னோக்கிச் செலுத்த கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்கா!

தன்னம்பிக்கைக்கும், கொள்கைப் பற்றுதலுக்கும் சிறந்தவொரு பாடமாக இந்த நிகழ்வை எண்ணிப்பார்க்க முடிகிறது.

14 கருத்துகள்:

 1. இதுதான் சார்.....லட்சிய வேட்கை என்பது....எந்த ஒரு செயலையும் பாதியில் விட்டு விடுபவர்களே தோற்றவர்கள்...கடைசி வரை போராடினால் வெற்றி நிச்சயம் என்பதே...உண்மை....! தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு முனைவர் ஐயா அவர்களே....! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. தன்னம்பிக்கையே வெற்றியின் ஆணிவேர் என்பதை சொல்லும் அருமையான பதிவு!!!
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 3. தம் இலக்கின் மீது கொலம்பசுக்கு இருந்த ஆர்வம் கண்டு தலைவணங்கிய ரொனால்டோ கப்பலை முன்னோக்கிச் செலுத்த கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்கா!

  .......இந்தியாவுக்கு வருகிறேன் என்று அமெரிக்காவில் (அருகே உள்ள தீவில்) வந்து இறங்கியவர். இன்றும் சிலரால், செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்படும்படி மாற்றி விட்டவர். :-)

  பதிலளிநீக்கு
 4. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல ஒரு எடுத்துக்காட்டு.

  பதிலளிநீக்கு
 5. இதுவரை கேள்விப்படாத தகவலாக உள்ளது அருமை நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

  பதிலளிநீக்கு
 6. தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு முனைவர் ஐயா அவர்களே....! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு