வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 16 மார்ச், 2010

மூதின் முல்லை.

மூதின்முல்லை என்பது புறத்துறைகளுள் ஒன்றாகும். மறக்குடி மகளிரின் வீரத்தைப் பற்றிக் கூறுவது இத்துறையின் தன்மையாகும். இத்துறையைப் பற்றி புறப்பொருள்வெண்பாமாலை “அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில், மடவரல் மகளிர்க்குமற மிகுத்தன்று” என உரைக்கும்.

பொன்முடியார் என்னும் பெண்பாற்புலவர் (மறம்-வீரம்) மறக்குடிப் பெண்ணின் கூற்றில் வைத்துப் பாடிய இப்பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துக்கைளத் தாங்கி விளங்குகிறது.


மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.
அவனைச் சான்றோனாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும்.
வேல் வடித்துக்கொடுத்தல் கொல்லனின் கடமை.
நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமையாகும்.
விளங்கும் வாளைக் கையிலேந்தி களிற்றுயானைகளை அழித்து பகைவரை வெல்லுதல் அந்த ஆண்மகனின் கடமையாகும். என்பது பாடலின் பொருளாகும். இதனை,


ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

திணை- வாகை
துறை - மூதின் முல்லை.
பாடியவர் - பொன்முடியார்.
புறநானூறு -312

என்னும் பாடல் விளக்குகிறது.

மரபு மாற்றம்


சங்ககால மகளிரின் கடமைகளுள் ஒன்றான ஆண்மகவைப் பெறுதல் என்ற மரபு கடந்து இன்றைய பெண்கள் சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பல செயல்களைச் செய்வதைக் கடனாகக் கொண்டிருக்கின்றனர்.

ஆண்மகனைப் பெறுவதில் சங்ககாலச் சமூகத்துக்கிருந்த மகிழ்ச்சி இன்றும் உள்ளது என்பது நோக்கத்தக்கது.

சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன் என்பது இன்றும் மாறவில்லை. ஆனால் சான்றோன் என்பதன் பொருள் மாறியிருக்கிறது. சங்ககாலத்தில் சான்றோன் என்பவன் வீரன் என்ற பொருள் இருந்தது. இற்றைக்காலத்தில் சான்றோன் என்பவன் அறிவாளி, திறமைசாலி என்ற பொருள் மாறியிருக்கிறது.

வாழ்க்கையை எதிர்கொள்ளும் கருவி செய்வோன் கல்வியாளன். சங்ககாலத்தில் கொல்லனின் பணியை இன்றைய கல்வியாளர்கள் செய்கிறார்கள். வீரனின் கையில் உள்ள கருவி அவன் போரில் வெற்றிபெற உதவும். இன்றைய கல்வியாளர்கள் தரும் அறிவு என்னும் கருவி மனிதன் வாழ்க்கையில் வெற்றிபெற உதவும்.
சங்ககாலத்தில் நல்லொழுக்கம் சொல்லித்தந்தவன் வேந்தன். இன்று நல்லொழுக்கம் சொல்லித்தரவேண்டியது அரசு. நீதிமன்றம், காவல்நிலையம் என வடிவம், வழக்கம் மாறினாலும் இமரபுகள் மாறிப்போவதில்லை.

இன்றைய சூழலில் இப்பாடல் வழி,
நல்ல மகனையோ, மகளையோ ஈன்றெடுப்பது தாயின் கடன்.
அந்த மகவை கல்வியில் சிறந்த சான்றோனாக்குவது தந்தையின் கடன்.
கல்வி என்னும் செயல்வழி அறிவு என்னும் ஆயுதத்தைச் செய்து தருவது கல்வியாளரின் கடன்.
நல்ல சமூக ஒழுக்கத்தைச் சொல்லித்தரவேண்டியது அரசின் கடன்.
இவ்வாறு அவரவர் செய்யவேண்டிய பணிகளை (கடமை என்று கூட கூறவில்லை, கடன் என்றே கூறியிருக்கிறார்.) அவரவர் செய்தபின்பு அந்த மகனோ, மகளோ செய்யவேண்டிய பணி என்ன?
போர்க்களத்துக்குச் சென்று யானைகளுடன் போரிடத்தேவையில்லை.
நல்லொழுக்கம் என்னும் தேர் ஏறி, வாழ்க்கை என்னும் போர்க்களம் சென்று அறிவு என்னும் வேல் தாங்கி வரும் எதிர்ப்புகளை சந்தித்து மண்பயனுற வாழ்ந்தால் போதும்.
என்னும் கருத்தை இன்றைய வாழ்வியலுக்குப் பொன்முடியார் கூறும் அறமாகக் கொள்ளமுடியும்.

17 கருத்துகள்:

 1. அய்யா நான்தான் பர்ஸ்ட் !

  ஒரு காலத்தில் அர்த்தங்களே அறியாமல் மனப்பாடம் செய்த பல பாடல்களின் அர்த்தங்கள் இன்றுதான் புரிகிறது .பகிர்வுக்கு நன்றி !

  இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று மாலை இட்டுவிடுகிறேன் .

  மீண்டும் வருவான் பனித்துளி !

  பதிலளிநீக்கு
 2. எளிமையான விளக்கம் அருமையான பதிவு முனைவர் இரா. குணசீலன் சார் , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓட்டும் போட்டாச்சு

  பதிலளிநீக்கு
 3. மரபு மாற்றம் - அருமயான ஆய்வு.
  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 4. 3 Comments
  Close this window Jump to comment form

  Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  அய்யா நான்தான் பர்ஸ்ட் !

  ஒரு காலத்தில் அர்த்தங்களே அறியாமல் மனப்பாடம் செய்த பல பாடல்களின் அர்த்தங்கள் இன்றுதான் புரிகிறது .பகிர்வுக்கு நன்றி !

  இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று மாலை இட்டுவிடுகிறேன் .

  மீண்டும் வருவான் பனித்துளி


  மகிழ்ச்சி நண்பரே.

  பதிலளிநீக்கு
 5. Blogger சசிகுமார் said...

  எளிமையான விளக்கம் அருமையான பதிவு முனைவர் இரா. குணசீலன் சார் , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓட்டும் போட்டாச்சு..

  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 6. Blogger Chitra said...

  மரபு மாற்றம் - அருமயான ஆய்வு.
  நல்ல பதிவு.


  நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 7. நான் படித்தது ஞாபகம் வருகிறது.. என்ன கவலை என்றால் நம் வாழ்வின் அர்த்தங்கள் புரியாத காலத்தில் இதெல்லாம் நம் மனதில் புகுத்தப் பட்டுள்ளது.. இதனால் என்ன பயன்,,,? இது பள்ளிக்கூட வாத்தியார்களுக்கே சில சமயம் புரியாது..

  ஆனாலும் இவை அழியாமல் என் அடி மனதில் இத்தனை நாட்கள் இருந்ததை நினைத்து பெருமைப் படுகிறேன்... நம் மெமரி எந்த அடிப்படையில் இயங்குகிறது என்றே தெரியவில்லை..

  நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுகின்றன...

  பதிலளிநீக்கு
 8. முனைவருக்கு வணக்கம். உங்களைப்போன்ற தமிழ் அறிஞர்களின் வருகை என் தளத்திற்கு சிறப்பு. பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. Blogger சசிகுமார் said...

  உங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்
  http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_9950.html.

  மகிழ்ச்சி நண்பா.

  பதிலளிநீக்கு
 10. Blogger பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  நான் படித்தது ஞாபகம் வருகிறது.. என்ன கவலை என்றால் நம் வாழ்வின் அர்த்தங்கள் புரியாத காலத்தில் இதெல்லாம் நம் மனதில் புகுத்தப் பட்டுள்ளது.. இதனால் என்ன பயன்,,,? இது பள்ளிக்கூட வாத்தியார்களுக்கே சில சமயம் புரியாது..

  ஆனாலும் இவை அழியாமல் என் அடி மனதில் இத்தனை நாட்கள் இருந்ததை நினைத்து பெருமைப் படுகிறேன்... நம் மெமரி எந்த அடிப்படையில் இயங்குகிறது என்றே தெரியவில்லை..

  நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுகின்றன...


  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு
 11. என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

  மீண்டும் வருவான் பனித்துளி !

  பதிலளிநீக்கு
 12. திரு குணா அவர்களே. தங்களின் இந்த வலைத்தளத்தை முதன் முறையாகப் பார்வையிடுகிறேன். மிகப்பிரம்மாண்டமான இத்தளத்தைப் பற்றி இந்நாள்வரை அறியாததற்கு வருந்துகிறேன். கட்டுரைகளின் தலைப்புகளையும் வலைத்தளம் பற்றிய தகவல்களையும், வழங்கிய விருதுகளையும் பற்றி அறியவே ஓர் நாள் ஆகியுள்ளது. மேலும் எல்லாவற்றையும் படித்து மீண்டும் திரும்புகிறேன் இப்பகுதிக்கு. ஒரு சிறு கருத்து நீங்கள் வேர்களைத் தேடவில்லை. ஆங்கில மாசால் மறைந்து போன வேர்களை மீட்டுக்கொண்டுள்ளீர்கள்.நன்றி.
  அன்புடன்
  ஆதிரா

  பதிலளிநீக்கு
 13. Blogger திவ்யாஹரி said...

  நல்ல பதிவு..


  நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு