Sunday, January 1, 2012

அரசனுக்கு விளங்காத பொருள்

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல்வெளியே சென்றுகொண்டிருந்தான்.

அங்கிருந்த வயலில் உழவு வேலை நடந்துகொண்டிருந்தது. அவ்வழியே மூன்று பெண்கள் வந்தனர்.

அவர்களில் ஒருத்தி “இந்த நிலம் முகத்துக்கு ஆகும் என்றாள்”

அடுத்தவள் “ இல்லை வாய்க்கு தான் ஆகும்” என்றாள்.

இருவரையும் மறுத்த மூன்றாமவள் “இது முகத்துக்கும் ஆகாது வாய்க்கும் ஆகாது பிள்ளைக்குத்தான் ஆகும் என்றாள்.

அரசன் எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியதன் பொருள் அவனுக்கு விளங்கவே இல்லை.

தன் மாறுவேடத்தைக் கலைத்த அவன் அவர்கள் மூவரையும் அழைத்தான்.

நீங்கள் குறிப்பாகப் பேசியதன் பொருள் என்ன? விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

அவர்கள் தந்த விளக்கம்..


இந்த நிலம் முகத்துக்கு ஆகும் என்றது மஞ்சள் பயிரிடச் சிறந்த நிலம்வாய்க்கு ஆகும் என்றது வெற்றிலை பயிரிடச் சிறந்த நிலம்
பிள்ளைக்கு ஆகும் என்றது தென்னை பயிரிடச் சிறந்த நிலம் என்ற விளக்கம் தந்தார்களாம்.

21 comments:

 1. ஆஹா ! அருமை குணா சார் ....
  ஒன்றைப் படித்து விட்டு மற்றதை .. வாய்க்கு என்பதை உருளைக்கிழங்கு என்று நினைத்தேன் .
  ஒருவேளை அதை வயித்துக்கு என்று குறிப்பிட்டிருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டேன்.
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 2. வயலும் வயல் சார்ந்த இடத்திலிருந்து, ஒரு விவசாயியாக இந்த பதிவுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் அண்ணா! மிக்க நன்றி!

  ReplyDelete
 3. சரி தான்...
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முனைவரே

  ReplyDelete
 4. நல்ல விளக்கம்..இன்றெல்லாம் அந்தரங்கத்தைக் கூட நேரிடையாக சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என்று நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது.


  அன்போடு அழைக்கிறேன்..

  உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

  ReplyDelete
 5. எனக்கு ஒரு தமிழ் வாத்தியார் கிடைத்துவிட்டார்.குணசீலன் உங்களிடம் அதிகமாக கல்வி சார்ந்த விசயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன்.நன்றாக இருக்கிறது தங்கள் பதிவும் படமும் .

  ReplyDelete
 6. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 7. நல்ல விளக்கம்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 8. அன்புநிறை முனைவரே,
  அந்நாளில் வாய்மொழியாக நாட்டுபுற மக்கள்
  பேச்சுக்களே இதுபோல இருந்து வந்திருக்கிறது.
  எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது.
  கேட்டுக்கொண்டே இருக்கலாம் இதுபோல
  மறைபொருள் கொண்ட சொல்லாடல்களை.

  நீங்கள் விளக்கம் கொடுத்தமை அழகு.

  ReplyDelete
 9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அருமை
  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 11. மண்வளத்தை வைத்து நிலத்தின் பயிரை நிர்ணயிக்கும் திறனை அந்நாளில் பெண்களும் பெற்றிருந்தார்கள் என்பதையும் அழகான சொல்லாடல்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதையும் நாட்டுப்புறக் கதைகள் வழியே நம்மால் அறிய முடிகிறது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
 12. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் அருமையாக இருந்தது முனைவரையா. நன்றி!

  ReplyDelete
 13. அருமையான பதிவு. தமிழமுதத்தை ஆசையோடு பருகக்கூடியதாகவுள்ளது. வாழ்த்துகள்.

  இப்படியான நமது நாட்டுப்புறக்கதைகளில் இருந்து நாம் ஒன்றை அறிந்து கொள்ளலாம். அதாவது மன்னர் தமது முடியாட்சியை மக்களாட்சியாகத்தான் நடத்த முனைந்தனர் என்பதை இப்படியான நாட்டுப்புறக்கதைகள் சொல்லாமல் சொல்லுகின்றன. மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்வதற்கு மன்னர் மாறுவேடங்களில் திரிந்து மக்களின் உணர்வுகளை நேரடியாகவே உணர்ந்து கொள்ள முயன்றமை தெளிவாக்கப்படுகின்றது. ஆக; முடியாட்சி மக்களாட்சியாக செயற்பட முயன்றமை அந்தக்காலம்! இன்று?

  ReplyDelete
 14. பெண்களுக்கு அன்று இருந்த விவ்சாய நுண்ணறிவு உண்மையில் மலைப்பானதே... இன்றைய மக்களுக்கு அரிசியை பொங்குவதைத் தவிர ஒன்றும் தெரிவதில்லை... என்னையும் சேர்த்துத்தான்...

  ReplyDelete
 15. மிகவும் அருமை

  ReplyDelete
 16. மண்வளத்தை வைத்து அந்தக் கால பெண்டீரின் மனவளம் புரிந்தது, அருமையான பதிவு

  ReplyDelete
 17. மிக அருமை..
  இயல்பாய் பேசிய காலங்கள் மறைந்து இப்போ கொச்சை தமிழில் பேசுவதை அறிந்து கொள்ளவே ஆயுள் போய்டும் போல இருக்குங்க முனைவரே ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. நன்று.

  த.ம.9

  நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

  ReplyDelete
 19. அப்பா...என்ன ஒரு நுண்ணறிவு....!!!!!

  ReplyDelete
 20. நல்ல பதிவு.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 21. நன்றி ஸ்ரவாணி
  நன்றி சுப்ரமணி
  நன்றி ஜீவா
  நன்றி மதுமதி
  மகிழ்ச்சி பைங்கிளி
  நன்றி இரமணி ஐயா
  உண்மைதான் மகேந்திரன் நன்றி..
  நன்றி இராஜேஷ்வரி
  நன்றி தாமஸ்
  நன்றி கீதா
  நன்றி கணேஷ் ஐயா
  நன்றி சிவத்தமிழோன்
  நன்றி சுந்தரபாண்டியன்
  நன்றி சசிகலா
  நன்றி இராசகோபாலன்
  நன்றி அரசன்
  நன்றி சென்னைப்பித்தன் ஐயா
  நன்றி தென்றல்
  நன்றி இரத்தினவேல் ஐயா

  ReplyDelete