வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

வேறென்ன வேண்டும்..?

நிறைவே அடையாத மனம் கொண்டவர்கள் நாம். 
ஆனால் சில சூழல்களில் மட்டும் நம் மனம்..

அடப் போங்கடா!! 
இதைவிட வேறு என்னடா வேண்டும்?
என்று கேட்கும்..

ஒரு மனிதனின் மகிழ்ச்சியின் அளவுகோள் பணத்தில் தான் அடங்கியுள்ளதா என்ன..?

இதோ பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் மன்னன் சொல்கிறான்..


Even when a man has earned much
of whatever can be earned
shared it with many 
even when he is master of great estates
if he does not have 
children
who patter on their little feet
stretch tiny hands
scatter toch
grub with mouths
and grab with fingers
smear rice and ghee
all over their bodies
and over come reason with love
all his days
have come to nothing

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
     உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
     குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
     இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
     நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
     மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
     பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
  (புறம் : 188)

பலசுவைமிக்க உணவுகளைப் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும்
‘உடைமை‘ எனப்படும் பெரும்செல்வம் பெற்றவராயினும் என்ன?
மெல்ல மெல்ல, 
குறு குறு என நடந்து சென்று, 
தம் அழகிய சிறிய கையை நீட்டி, 
உண்கலத்து நெய்யுடைச் சோற்றில் இட்டும்
அக்கையாலேயே, பெற்றோரைக் கட்டிக் கொண்டும், 
வாயால் கவ்வியும், 
கையால் துழாவியும், 
தன் உடல் முழுவதும் சிதறியும்,
அக்குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே என்று..

தொடர்புடைய இடுகை


22 கருத்துகள்:

 1. உண்மைதான் இதைவிட வேறு பேறு என்ன வேண்டும்..உணர்ந்து கொண்டுதானிருக்கிறேன்..அதை அழகாக அறிவுடை நம்பியின் வாயிலாக எடுத்துச் சொன்னீர்கள்.எதையும் தாங்கள் எடுத்தாளும் விதம் சிறப்பு..நன்றி..

  பதிலளிநீக்கு
 2. குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர். மழலைச் செல்வம் வாய்க்கப் பெறாதவர்கள் பாவம்தான்... அழகான பாடல் முனைவரையா. அருமையாக வழங்கியிருக்கிறீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 3. பணத்தின் அழகே ஈதலும் பகிர்தலும் தான்.

  இவையும் இன்றி மழலையும் இன்றி என்ன பயன் .

  உண்மைதான். நன்று குணா சார்.

  பதிலளிநீக்கு
 4. தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று அறிந்தவுடன்
  பிரசவ வேதனையையும் தாண்டி முகத்தில் மலர்ச்சி காட்டும் அன்னை...
  எனக்கு வாரிசு உருவாகிவிட்டது என நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் தந்தை....
  பணத்தால் விளையாத ஒன்று.
  அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் முனைவரே..

  பதிலளிநீக்கு
 5. உண்மைதான் பயனற்றது தான்!!!
  700 கோடியும் சிந்திக்க வைத்து ஆறுதல் தருகிறது ஏதோ ஒரு வகையில் பயனற்ற வாழ்க்கை பயனாகி போனதில்!!!!!!

  பதிலளிநீக்கு
 6. பிள்ளைச் செல்வம் இல்லாதார், வேறு எத்தனைச் செல்வங்கள் கொண்டவராயினும் ஏழைகளே!

  அருமையான பகிர்வு, முனைவரே!

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையான பதிவு நண்பரே... நன்றி...

  பதிலளிநீக்கு
 8. நாம் வைத்துக் கொள்ளும் இலக்கே நம்மை நிறைவடைய வைப்பதில்லை... இலக்கு இல்லை என்றால் நிறைவே... குழந்தை செல்வத்தை ரசிக்கவும் ஒரு உணர்வு வேண்டும்... பலர் ரசிப்பதில்லை தோழர்... உதாரணம் playway schools

  பதிலளிநீக்கு
 9. மிகச் சரி
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்
  த.ம 9

  பதிலளிநீக்கு
 10. நன்றி மதுமதி
  நன்றி கணேஷ் ஐயா
  நன்றி ஸ்ரவாணி

  பதிலளிநீக்கு
 11. அழகாகச் சொன்னீர்கள் மகேந்திரன் உண்மைதான்..

  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சத்ரியன்

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுந்தரபாண்டியன்

  பதிலளிநீக்கு
 14. உண்மைதான் சூர்யா வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி டேனியல், நன்றி இரமணி ஐயா.

  பதிலளிநீக்கு
 16. "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
  சிறுகை அழாவிய கூழ்"

  தன் குழந்தை பிசைந்த உணவௌ விட அமிழ்தம் பெரியதல்ல..
  நன்றி ஐயா!!

  கூடவே
  மேலைப் புத்தாண்டு வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 17. நினைக்கவே இனிக்கும் மழலைச் செய்கைகளும், குறும்புகளும். பாண்டியன் அறிவுடைநம்பியின் சிந்தனை அலாதியானது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு