ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)

நான் பிறந்தநாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் ரூபாய் 86400 ஐ செலவு செய்துவருகிறேன்.
என்னங்க நம்பமுடியலயா?
இருந்தாலும் இதுதாங்க உண்மை.
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வளவு பணம் தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.
சிறுவயதிலெல்லாம் இவ்வளவு பணத்தை என்ன செய்வது எப்படிச் செலவு செய்வது என்றே தெரியாமல் பயனற்ற செலவுகளைச் செய்துவந்தேன்.
அப்போது இந்தத் தொகை பெரிதாகத்தான் தெரிந்தது.
இவ்வளவு பணத்தையும் எப்படிச் செலவு செய்வது என்றெல்லாம் திகைத்திருந்த காலங்கள் உண்டு.

இப்போதெல்லாம் இவ்வளவு பணமும் போதவில்லை என்றே தோன்றுகிறது.
பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டதா? 
இல்லை
என் தேவை அதிகரித்துவிட்டதா?

என்றே தெரியவில்லை..
உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத்தேவைகளுக்காக முதலில் செலவு செய்தேன்.
உறவுகளுக்காக, நட்புக்காக, பொழுதுபோக்கிற்காக என என் பட்டியில் காலந்தோறும் என்னோடு சேர்ந்து வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.
இப்போதெல்லாம் இந்தப் பணத்தை நான் செலவு செய்கிறேனா?
இல்லை
இந்தப் பணம் தான் என் வாழ்க்கையைச் செலவு செய்கிறதா? 

என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.

இவ்வளவு நேரம் நான் சொன்ன பணம் என்பது...
                                                                   24 மணிநேரம் 
ஒருமணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் 
ஒரு நிமிடத்துக்கு 60 மணித்துளிகள் 
24 X 60 X 60 = 86400


என்னங்க..
இப்ப சொல்லுங்க ஒவ்வொரு நாளும் நீங்க எவ்வளவு செலவு செய்கிறீர்கள்..?

                                                                                                          தொடர்புடைய இடுகை

ஏழாம் அறிவு உள்ளவரா நீங்கள்?

16 comments:

 1. panathula aarampichu!

  nerathula mudinthathu!
  vithiyaasam!

  neram pothavillai!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சீனி

   Delete
 2. காலம் எவ்வளவு முக்கியமானது, அதை வீணக்கக்கூடாது என்பதை விளக்கும் அருமையான பதிவு. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி இராம்வி

   Delete
 3. வித்தியாசமான சிந்தனை...

  ReplyDelete
 4. காலம் போன் போன்றது என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி நண்பா.

   Delete
 5. Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete