திங்கள், 6 பிப்ரவரி, 2012

மின்சாரத் தாக்குதல்..
இடி தந்த மேகம் மழைபெய்ய மறந்ததுபோல
வாக்குரிமைதந்த அரசு எங்கள் வாழ்வுரிமையை மறந்ததென்ன?
உணவு, உடை, உறைவிடம் என்னும் மூன்றிலும் நாங்கள் தன்னிறைவு அடைந்துவிட்டோமா?

இலவசம்! இலவசம்! என ஏதேதோ நீங்கள் தந்தபோதெல்லாம் நாங்கள் உணரவில்லை..
மின்சாரத் தடையையும் தான் நீங்கள் இலவசமாகத் தந்திருக்கிறீர்கள் என்று..

 • நாங்கள் மரங்களை வளர்க்கவேண்டும் என்றா நீங்கள் மின்சாரத்தை நிறுத்தினீர்கள்? - இல்லை..
 • அணுமின்நிலையங்கள் வேண்டும் என்று நாங்களே எங்கள் வாயால் சொல்லவேண்டும் என்று மின்சாரத்தைத் தடைசெய்தீர்களா? - இல்லை..
 • ஊடகங்கள் எல்லாம் ஊழல்களையே ஒளிபரப்பு செய்கின்றன, அதனால் ஊழலை ஒழிக்கவேண்டும் என்று மின்சாரத்தை எங்களிடமிருந்து ஒழித்தீர்களா?
 • உழவர்களுக்கும், ஏழைகளுக்கும், கல்விகற்கும் மாணவர்களுக்கும் கிடைக்காத மின்சாரம் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு மட்டும் தடையின்றிச் செல்வது எப்படி?? என்பதுதான் புரியவில்லை..

எரிவதை எடுத்துவிட்டால் 
கொதிப்பது தானே அடங்கிவிடும்

என்ற பழமொழியின் பொருள் நீண்ட காலமாகவே எனக்கு சரியாகப் புரியமலிருந்தது. இப்போதுதான் தெளிவாகப் புரிகிறது.

எரிவது - மின்சாரம்!
அணுஉலை அச்சத்தால் கொதிப்பது - மக்கள் மனது!

தமிழகத்தில் மின்சாரத் தடை1,2,3,4,5.. என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.தமிழ்நாட்டில் 6 மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 970 கொள்திறன் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சென்னையில் 1மணி நேரமும் பிற நகரங்களில் தினமும் 4 மணி நேரம், கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு  நடைமுறையில் உள்ளது. 


இப்போதெல்லாம் மின்சாரம் எப்போ போகும் என்றும் தெரியாது!
அதுபோல எப்போ வரும் என்றும் தெரியாது.


மின்சாரம் எங்களைத் தாக்காவிட்டாலும்
மின் வெட்டு எங்களை நன்றாகவே தாக்குகிறது!

தொடர்புடைய இடுகைகள்


12 கருத்துகள்:

 1. மின்சாரம் எங்களைத் தாக்காவிட்டாலும்
  மின் வெட்டு எங்களை நன்றாகவே தாக்குகிறது!
  முத்தாய்ப்பாய் முடித்தீர்கள் முனைவரே..

  பதிலளிநீக்கு
 2. //இலவசம்! இலவசம்! என ஏதேதோ நீங்கள் தந்தபோதெல்லாம் நாங்கள் உணரவில்லை..
  மின்சாரத் தடையையும் தான் நீங்கள் இலவசமாகத் தந்திருக்கிறீர்கள் என்று..//உண்மை உண்மை இப்போது புரிகிறது .திருச்சியில் 6 மணி நேரம் அன்பரே

  பதிலளிநீக்கு
 3. neengal padangal pottathu arumaiyaaka
  ullathu!
  melum unarum vitham nantraaka ullathu!
  vaazhthukkal!

  பதிலளிநீக்கு
 4. கர்நாடகாவில் கறன்ட் கட்டே இல்லையாம்.. புலியின் பசிக்கு புல் கொடுப்பது போலத்தெரிகிறது!

  பதிலளிநீக்கு
 5. மின்தடை பற்றிய கருத்து மிகவும் உண்மை!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. உண்மையான கருத்துக்கள் ! முதல் படம் சூப்பர் சார் ! அதனால் கடைசி படம் நாம தான் ! நன்றி !

  பதிலளிநீக்கு
 7. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  பதிலளிநீக்கு