Sunday, February 12, 2012

இதெல்லாம் சட்டசபையில செய்யவேண்டியது..


இந்த காலத்துல பார்த்தீங்ன்னா..
எங்க பார்த்தலும் கொலைவெறிபிடிச்சவங்களா இருக்காங்க..

கொலை,கொள்ளை, வழிப்பறி, மோசடி இதெல்லாம் காலந்தோறும் இருப்பதுதான் என்றாலும்..
இப்போது இளம் தலைமுறையினரிடையே பரவி வரும் வன்முறைச் செயல்களுக்கு ஊடகங்களும் பெரும்பங்கு வகிப்பனவாக உள்ளன.

சென்னையில் ஆசிரியரைக் கொன்ற மாணவரின் வெறிச்செயலுக்குக் காரணம் யார்?
பெற்றோரா?
ஆசிரியர்களா?
கல்விமுறையா?
ஊடகங்களா?
சட்டங்களா?
என ஆயிரம் பேரைக் காரணம் சொல்லலாம் என்றாலும். போன உயிர் மீண்டு வருவதில்லை.
இப்போதெல்லாம் இணையம் உலகத்தையே சிறுகிராமமாக மாற்றிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இங்கு இருந்துகொண்டே உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் பார்க்கிறார்கள்.
அதனால் நலமான, வளமான, வலிமையான சமூகம் உருவாக நாம் யாரையும் குறைகூறாது நம்மால் முடிந்தவரை நேர்மறையான எண்ணங்களை இளம் தலைமுறையினரிடம் விதைப்பது நம் அடிப்படைக் கடமையாகும்.

இந்த பள்ளிமாணவனின் செயலுக்குப்பின் தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கட்டண சலுகை அறிவித்திருக்கிறார்கள். மாணவர்களை திட்டக்கூடாது என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இது மாணவர்களுக்கு மேலும் கொம்பு சீவிவிட்டதுபோல உள்ளது.

என் நண்பர் ஒருவர் புலம்பினார்.

என்னங்கய்யா இப்பல்லாம் வகுப்புக்குப் போயிட்டுவருவது ஏதோ போர்க்களத்துக்குப் போயிட்டுவருவதுபோல இருக்குது என்று..

ஏன் என்று கேட்டேன்..

அவர் சொன்னார்...
ஐயா ஒரு பையன் என்னைப் பார்த்து கேட்கிறான்..

என்னங்க ஐயா...
உங்க முகத்துல ஒரு மரண பீதி தெரியுதே.. !
பயப்படாதீங்க..
நாங்க உங்கள எதுவும் செய்யமாட்டோம் என்றானாம்.
இவர் அவனைத் தனியாக அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினாராம்..
திரும்பி வகுப்புக்கு வந்த மாணவனைப் பார்த்து அவன் நண்பர்கள் கேலி செய்தார்களாம் இப்படி
என்னடா..
இப்ப உன்னோட முகத்துல மரண பீதி தெரியுது?
என்று

மாணவர்களைத் திருத்த அடிப்பது சரியா? தவறா?
என்பதெல்லாம் இன்றைய காலத்தில் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள முடியாது..
காலம் ரொம்ப மாறிப்போச்சு பாருங்க..

அன்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் சொல்லிச் சேர்ப்பார்கள்.
கண்ணு, காது, மூக்க மட்டும் விட்டு எங்க வேண்டுமானலும் அடிங்க
எம்புள்ளய படிக்கவெச்சு அவனோட கண்ணைத் திறந்துவிடுங்கய்யா போதும் என்பார்கள்.
ஏன் என்று கேட்டால் அடியா மாடு படியாது என்பார்கள்.

இன்று நிலை வேறு!
அடிக்கக் கூட வேண்டாம் திட்டினாலே போதும்
இந்த மாணவர்கள் தவறான முடிவெடுத்துவிடுகிறார்கள்.

பேருந்தில் வரும்போது இரு மாணவர்கள் என்னருகே பேசிக்கொண்டு வருகிறார்கள்.

டேய் மச்சான் இவங்க டார்ச்சர் தாங்கமுடியலடா என்று
அதற்கு இவன் சொல்கிறான்.
டேய் மாப்பிள நான் சொல்றத நீ கேட்க மாட்டேங்கிற
பள்ளிக்கூடத்துல மாடில இருந்து குதிச்சிடுறா
அப்புறம் பாரு உனக்கு இராஜ மரியாதைதான் என்று

கேட்ட எனக்கு ஒரு மணித்துளி இதயத்துடிப்பே நின்றுவிட்டது.

யாரைக் குறை சொல்வது..
என்னைக் கேட்டால் மாணவர்களை அடிக்காமல் கூட அன்பால் திருத்திவிடமுடியும். அதற்கு 
ஆசிரியர் மட்டும் தன்னை மாற்றிக்கொண்டால் போதாது.
இதில் குறிப்பிடத்தக்க பங்கு
பெற்றோருக்கும்
ஊடகங்களுக்கும்
நாட்டை ஆள்வோருக்கும்
உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.


தொடர்புடைய இடுகை


கல்வி உளவியல்

31 comments:

 1. என்ன சொல்வது என்றே புரியவில்லை. இப்போது எதற்கெடுத்தாலும் கோபப்படுவது என்றுதான் போகிறது.. தில்லியில் சாலைகளில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளில் கோபமே முக்கிய எதிரியாக இருக்கிறது... பள்ளிகளிலும் இது தொடர்கிறது... எங்கே போகிறோம்... என்று கவலையாக உள்ளது.

  ReplyDelete
 2. ennanga ayya!

  ippadiyellaam pirachanai -
  muththiruchi!

  yaarai enna-
  solla?

  valikalai pakirnthu kondathukku
  nantri!

  ReplyDelete
 3. ஆசிரியை ஒருவரை மாணவர் குத்திக் கொன்றுவிட்டார்
  என்ற செய்தியைக் கேட்டதும் மனம் பதைத்துப் போனது முனைவரே.
  இவ்வயதில் ஏன் இந்தக் குரூரம் மனதில் குடியேறியது.

  சகிப்புத்தன்மையும் எதையும் எளிதில் பெற்றுவிட வேண்டும்
  என்ற சோம்பேறித்தனமும், நினைத்தவுடன் பெற்றோரால்
  நிறைவேற்றப்படும் ஆசைகளும், திறந்து வைக்கப்பட்டு
  சரிவர சரியான பாதையைக் காட்டாது கபடங்களை
  வேருக்கு நீர்விடுவது போல பாய்ச்சி வளர்க்கும் ஊடகங்களும்.......
  இந்த இளம் உள்ளங்களை கருங்கல்லாய் மாற்றி வைத்திருக்கிறது.

  என்னைப்பொருத்த வரையில் l இந்தத் தவறு
  செய்த அந்த மாணவன் சரியான முறையில் வளர்க்கப்பட வில்லை
  என்றே சொல்வேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் சமூக மதிப்பீடு சரியானது நண்பரே

   Delete
 4. இப்போதெல்லாம் ஆசிரியருக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் உண்மை.

  ReplyDelete
 5. தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.ஒரு சில ஆசிரியர்களின் தவறான அணுகுமுறையால் ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து தவறுகளுக்கும் காரணமானவர்கள் என்ற எண்ணம ஏற்பாட்டுவிட்டது.
  அளவுக்கதிகமான சுதந்திரத்தை மாணவர்கள் விரும்புகிறார்கள். இதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. தங்கள் பிள்ளகைளுடைய விருப்பம் உண்மையான தகுதி இவற்றை அறிந்துகொள்ள முற்படவேண்டும். ஒழுக்கம் கண்டிப்பை தன வாழ்க்கையிலும் பின்பற்றவேண்டும். இதைபற்றி என் பதிவிலும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
  http://tnmurali.blogspot.in/2012/02/blog-post_10.html தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
  நேற்றைய எனது பதிவிற்கு கருத்து தெரிவித்ததற்கு முனைவர் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி அன்பரே

   Delete
 6. கத்திமேல் நடப்பதான விஷயம் இது.எல்லோருக்குமே பங்கு இருக்கிறது !

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி ஹேமா

   Delete
 7. வணக்கம்!
  // யாரைக் குறை சொல்வது..// என்று ஒரு ஆசிரியராக இருந்து சமுதாயத்தை எடை போட்டுள்ளீர்கள்!

  “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
  மண்ணில் பிறக்கையிலே – பின்
  நல்லவராவதும் தீயவராவதும்
  அன்னை வளர்ப்பதிலே” - (பாடல்: புலமைப் பித்தன் படம்:நீதிக்குத் தலை வணங்கு) என்ற திரைப் படப் பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகின்றன.

  ReplyDelete
  Replies
  1. நல்லதொரு எடுத்துக்காட்டு இளங்கோ.

   Delete
 8. கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பா.

   Delete
 9. சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.
  ஆனா என்ன சொல்றதுனு தான் தெரியல.

  ReplyDelete
  Replies
  1. காலம் தான் பதில்சொல்லவேண்டும் இந்திரா

   Delete
  2. உண்மை... ஆனால், அது நாம் எதிர்பாராத மற்றுமொரு வளர்சிதை மாற்றமாகவே அமையும்.

   Delete
 10. தவறு எங்கு இருக்கிறது என்று புரியவில்லை...
  அந்த மாணவன் இந்தி பாடம் சரியாக படிக்கவில்லை என்பது நம்பும் படியாக இல்லை...
  தவறு சம்பந்தப் பட்டவர்களின் மனதில் புதைக்கப் பட்டுள்ளது...
  வெளி வருமா என்பது காலம் தான் பதில் சொல்லும்

  ReplyDelete
 11. நீங்கள் ஆசிரியராக இருப்பதால் சுவைபட எழுதியுள்ளீர் அறிவுடனும் இருக்கறது பாராட்டுகள்

  ReplyDelete
 12. தங்களுக்கு இங்கே ஒரு ஆச்சர்யம் உள்ளது... தளத்தை பார்க்கவும்...
  http://www.tamilvaasi.com/2012/02/versatile-blogger.html

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் நண்பா..

   தாங்கள் எனக்களித்த விருத்துக்கு நன்றி..
   மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்

   Delete
 13. அடியாத மாடு படியாது என்பார்கள். ஆனா இப்பவெல்லாம் மாணவர்களுக்கு அடிக்கிறதே பயம்.

  ReplyDelete
 14. உங்களுடையப் பதிவுகள் அனைத்தும்
  மிகவும் அருமையாக உள்ளது.
  வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 15. ஐயா இந்த ஊடகங்களின் மூலம் தான் மாணவர்கள் தடம் மாறி செல்கிறார்கள்..நாளைய தலைமுறையிடம் ஊடகங்கள் வன்முறையை தான் வளர்கிறதே தவிற தன்னம்பிக்கையை வளர்பது இல்லை ஐயா...

  ReplyDelete