Sunday, March 25, 2012

மகவுடை மந்தி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம்!
ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம்..

இன்னொருவரின் ஆசைகளையோ, எண்ணங்களையோ காதுகொடுத்து என்ன? என்று கேட்பதற்குக் கூட நமக்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.

அப்படிக் கேட்டால் உலகில் தற்கொலைகள் கூட பாதியாகக் குறைந்துவிடும் என்பது என் எண்ணம்!இதோ ஒரு சங்ககாலத் தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்..

உங்களுக்குக் கேட்கிறதா?

தோழி - தலைவ! இதுவரை நீ ஊருக்குத் தெரியாமல் இரவுநேரத்தில் வந்து தலைவியைக் கண்டு காதல் மொழி பேசி வந்தாய்..

தலைவன் - ஆமாம். உன் உதவியை மறக்கமுடியுமா?

தோழி - போதும்! போதும்! எல்லாவற்றையும் இதோடு நிறுத்திக்கொள்!

தலைவன் - ஏன்? என்ன ஆனது?

தோழி - நீ இரவு நேரத்தில் வரும் வழியின் துன்பங்கள் எண்ணியும், உங்கள் சந்திப்பை ஊரார் அறிந்து பேசும் அலர் மொழிக்கு அஞ்சியும் நாளும் நாளும் நாங்கள் பட்ட துன்பங்கள் போதும். தலைவியை நீ திருமணம் செய்துகொள். அது தான் உங்கள் இருவருக்கும் நல்லது.

தலைவன் - (தன் நெஞ்சைப் பார்த்து இவ்வாறு பேசுகிறான் தலைவன்)
                     
                        ஏ நெஞ்சே! அதோ பார் பச்சை மண்பானை!
                        இதோ பார் தம் குட்டியைத் தூக்கிச் செல்லும் குரங்கு!

அந்த பச்சை மண்பானையை மழையிலிருந்து காக்க முடியுமா? அந்த மண்பானை அழிவது உறுதி. அதுபோல தலைவியின் நினைவால் தன் மனம் அழிதலும் உறுதி!

சே! அந்த குரங்குக் குட்டியைக் கூட கிளைகளில் ஏறும் போது கீழே விழாமல் பாதுகாத்து அன்போடு அணைத்துச் செல்ல அதன் தாய்க்குரங்கு உண்டு. ஆனால் எனக்கு..?

இன்னும் கொஞ்ச காலம் காதலித்து மகிழலாம் என்று எனக்கு ஆசை இருந்தாலும் என்னைப் புரிந்துகொள்ளவோ, என் தேவையை அன்போடு கேட்டு நிறைவேற்றவோ யாருமே இல்லையே..
குறுந்தொகை -29

என்று தலைவன் தன் மனதோடு இவ்வாறு பேசிக்கொள்கிறான்.

31 comments:

 1. கொஞ்ச காலத்துக்கு முன்னால படிச்சதா ஞாபகம்..,

  பகிர்வுக்கு நன்றி முனைவர் அவர்களே ..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும்
   நன்றி நண்பா.

   Delete
 2. நல்ல பதிவு
  உண்மையை சொல்லபோனால்
  உங்களின் ஒவ்வொரு பதிவுகளில் இருந்தும்
  நிறை விஷயங்களை கற்றுகொள்ளமுடிகிறது

  கணினியில்
  தரவிறக்கம் செய்யப்பட்ட
  சங்க இலக்கிய நூல்கள்
  வேலைப் பளு காரணமாக திறக்கப்டமாலேயே இருக்கு

  உங்கள் பதிவுகளை பார்க்கையில்
  நேரம் கொஞ்சம் ஒதுக்கி அதை திறக்கும் ஆவல் வந்துவிட்டது

  நன்றி முனைவரே

  ReplyDelete
  Replies
  1. கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது அன்பரே..
   நன்றி.

   Delete
 3. தோழி - நீ இரவு நேரத்தில் வரும் வழியின் துன்பங்கள் எண்ணியும், உங்கள் சந்திப்பை ஊரார் அறிந்து பேசும் அலர் மொழிக்கு அஞ்சியும் நாளும் நாளும் நாங்கள் பட்ட துன்பங்கள் போதும். தலைவியை நீ திருமணம் செய்துகொள். அது தான் உங்கள் இருவருக்கும் நல்லது.//

  இவர்கள் பாடு திண்டாட்டம்தான்!!

  ReplyDelete
  Replies
  1. தமிழ்வாசிப்புக்கு நன்றிகள் மருத்துவரே

   Delete
 4. அருமையான பதிவு.
  தொடரும் மின்வெட்டு, நீண்ட நாட்களாக Dash Board திறக்கவில்லை - எனவே நீண்ட இடைவெளி.
  வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. மீள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள் ஐயா.

   Delete
 5. sanga kaala kaathal!
  arumaiyaana thakaval!

  ReplyDelete
 6. சங்ககாலத்திலும் காதல் என்றாலே ஒரு தனிச்சுவைதான்.அதுவும் தமிழ்ச்சுவையோடு !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தமிழ் சுவாசித்தலுக்கும் நன்றி ஹேமா.

   Delete
 7. வணக்கம்! மகவுடைய மந்தி போல மனித வாழ்வு அமையவில்லை என்பதனை நன்றாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆழமான புரிதலுக்கு நன்றி இளங்கோ.

   Delete
 8. அருமையான குறுந்தொகைப் பாடல் முனைவரே! தங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு தேன்சொட்டு. உங்கள் தேனடை வற்றாத நீரூற்று போலும். தமிழ்த்தேன் பருகிப் பருகி என் இதயக்குரங்கு தள்ளாடுகிறது.

  ReplyDelete
 9. படம் அருமை. இந்த மாதிரி படமெல்லாம் எங்குதான் கிடைக்கிறதோ உங்களுக்கு தெரியவில்லை?!!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தமிழ்த்தேடலுக்கும்..நயம் பாராட்டலுக்கும் நன்றிகள் பல அன்பரே..

   Delete
 10. பகிர்வுக்கும் விளக்கத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி பாலா.

   Delete
 11. மகவுடை மந்தி விளக்கஉரை படித்தே
  அகமகிழ்ந்த ளித்தேன் வாழ்த்து!

  ReplyDelete
 12. அன்புள்ள திரு.குணசீலன்,

  உங்கள் பதிவு 'மகவுடை மந்தி! வாசித்தேன். குறுந்தொகை -29 பாடலும், விளக்கமும் அருமை.'இரவுக் குறி' என்பது தலைவன், தலைவி சந்திப்பைக் குறிக்கிறதா?

  நான் பணி நிறைவு செய்த கண் மருத்துவ பேராசிரியர். தற்சமயம் தமிழ் மீதுள்ள ஆர்வத்தினால் புதுக் கவிதைகள் சில 'எழுத்து' வலைத் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். சில குறட்பாக்கள், நான்மணிக் கடிகை, நாலடியார், திரிகடுகம் ஆங்கிலத்தில் தகுந்த முறையில் மொழிபெயர்த்து www.poemhunter.com ல் வெளியிட்டிருக்கிறேன்.
  அன்புடன்,
  வ.க.கன்னியப்பன்

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா.
   மிக்க மகிழ்ச்சி.

   Delete
 13. அன்புள்ள திரு.குணசீலன்,

  உங்கள் பதிவு 'மகவுடை மந்தி! வாசித்தேன். குறுந்தொகை -29 பாடலும், விளக்கமும் அருமை.'இரவுக் குறி' என்பது தலைவன், தலைவி சந்திப்பைக் குறிக்கிறதா?

  நான் பணி நிறைவு செய்த கண் மருத்துவ பேராசிரியர். தற்சமயம் தமிழ் மீதுள்ள ஆர்வத்தினால் புதுக் கவிதைகள் சில 'எழுத்து' வலைத் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். சில குறட்பாக்கள், நான்மணிக் கடிகை, நாலடியார், திரிகடுகம் ஆங்கிலத்தில் தகுந்த முறையில் மொழிபெயர்த்து www.poemhunter.com ல் வெளியிட்டிருக்கிறேன்.
  அன்புடன்,
  வ.க.கன்னியப்பன்

  ReplyDelete
 14. அன்புள்ள திரு.குணசீலன்,

 15. சிறப்பான பதிவு ! வாழ்த்துக்கள் நண்பரே !

  ReplyDelete
 16. நற்சுவை கூட்டும் குறுந்தொகைச்
  செய்யுள் கொண்டு
  சொற்சுவை ஊட்டும் விளக்கம்
  நன்று முனைவரே!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி புலவரே

   Delete