வெள்ளி, 2 மார்ச், 2012

சரி சரி சண்டைபோடதீங்கப்பா..காலையில் கண்விழித்ததிலிருந்து இரவு கண்ணுறங்குவது வரை எத்தனை எத்தனை சண்டைகள்!
சில நேரம் நாம் சண்டையிடுகிறோம்
பிறர் பார்க்கின்றனர்!
பலநேரம் பிறர் சண்டையிடுகிறார்கள்
நாம் பார்க்கிறோம்!
இப்படி நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் நானறிந்த காரணம் - சுயநலம்!

சுயநலமின்றி வாழ நாம் என்ன மரங்களா? என்று சிலர் கேட்கலாம்.
மரங்கள் கூட தாம் வாழத் தேவையான தண்ணீரை சுயநலத்தோடு உறிஞ்சத்தானே செய்கிறது என்று சிலர் சொல்லாம்..

ந்த மரங்களும் தம் தேவைக்கு அதிகமாக ஒருதுளி நீரைக்கூட உறிஞ்சுவதில்லையே என்பதுதான் என் பார்வையாக உள்ளது.

இப்போதெல்லாம் நடைபெறும் ஊழல்களைப் பாருங்கள் ஆயிரம் கோடி.. இரண்டாயிரம் கோடி என்று..

சுயநலம் பேராசையாக மாறிப்போனதால்..
தான் வாழ யாரை வேண்டுமானலும் மிதித்துவிட்டுச் செல்லலாம் என்பது தான் ஒவ்வொருவரும் பின்பற்றும் கொள்கைகளாக இருக்கின்றன.ன்று ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னாலும் விலையுயர்ந்த வண்டிகள் நிற்கின்றன சாலைகள் தான் பல்லைக் காட்டி சிரித்துக்கொண்டிருக்கின்றன.

கதை ஒன்று..


ஒரு நாள் உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்த வயிற்றைப் பற்றிக் குறைபேசிக்கொண்டிருந்தன.
என்னடா இது நாமெல்லாம் உழைக்க இந்த வயிறு மட்டும் எந்த வேலையும் செய்யாமல் உண்டு உண்டு வயிறுவளர்க்கிறதே என்று..
இந்த சத்தம் வயிற்றுக்கும் கேட்டது.

வயிறு உடல் உறுப்புகளைப் பார்த்துக் கேட்டது..
'ஏம்பா என்னை எல்லோரும் சேர்ந்து திட்டுறீங்க? நான் என்ன எந்த வேலையுமே செய்யாமலா இருக்கிறேன்..

நானும்தான் வேலை செய்கிறேன்என்றது..
அதற்கு எல்லா உறுப்புகளும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டன..
ஆமாமா... நீயும் உழைப்பது உன் தொப்பையைப் பார்த்தாலே தெரியுதே என்று..

நாங்களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம் என்றது தொண்டை

என்ன என்று அச்சத்தோடு கேட்டது வயிறு..

உதடுகள் பேசின..

இனிமேல் நாங்களும் உனக்காக உழைக்கப்போவதில்லை! நீ எப்படி வயிறு வளர்க்கிறாய் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம் என்று..
வயிறு எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தது.

நாட்கள் சில சென்றன..

உணவு உட்கொள்ளாததால் ...


கண்கள் ஒளி மங்கின!
நாக்கும் உதடுகள் உலர்ந்து போயின!
கைகளும் கால்களும் அசைய மறுத்தன!
சீரண உறுப்புகள் உல்லாம் மரண ஓலமிட்டன!
வயிறு மட்டும் உறுப்புகளைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தது!

அப்போது மூளை வந்து கட்டளையிட்டது..

'சரி சரி சண்டை போடாதீங்கப்பா'என்று

இந்தக் கதை சுட்டும் வயிறு தான் நம் நாடு
உடல் உறுப்புகள் தான் நாம் என்று புரிந்துகொண்டால் சண்டைகளுக்கான காரணம் என்ன என்பது விளங்கும்...


தொடர்புடைய இடுகை

25 கருத்துகள்:

 1. ஐந்து விரல்களும் சேர்ந்தால் தான் எதையும் எடுக்க முடியும். இரு கைகள் சேர்ந்தால் தான் சத்தம் எழுப்ப முடியும். இது சுயநலமில்லை. சமாதானம்!!
  சரி சரி நீங்கள் என்னிடம் சண்டைக்கு வராதீங்கள்.
  இடுகைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

  பதிலளிநீக்கு
 3. மாறுபட்ட அருமையான சிந்தனை
  அருமையான ஒப்பீடு
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்! //இப்படி நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் நானறிந்த காரணம் – சுயநலம் // என்ற தங்களின் சிந்தனை வரிகள் சத்தியமானவை!

  பதிலளிநீக்கு
 5. அருமையான கருத்து.சிறப்பான விளக்கம். நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 6. கதையும் கருத்தும் அருமை முனைவரே!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் நண்பரே
  தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன் நன்றி
  http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_03.html

  பதிலளிநீக்கு
 8. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென"

  அருமையாக ஒரு கதை மூலம்
  தெளிவாக்கியமை
  நன்று முனைவரே.

  பதிலளிநீக்கு
 9. எல்லாம் சுயநலம் தான். சிறந்த இடுகை. பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கருத்து .அதற்கான விளக்கம் நன்று. பகிர்வுக்குநன்றி .

  பதிலளிநீக்கு