Sunday, August 26, 2012

உணவுக்கு நீங்கள் தரும் மரியாதை!

 


என் நண்பர் ஒருவருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அவர் பாதி சாப்பாட்டை வைத்துவிட்டு போதும் என்றார்.

ஏன் உடல்நிலை எதுவும் சரியில்லையா? ஏன் பாதி உணவை அப்படியே வைத்துவிட்டீர்கள் என்றேன். உடல் நிலை நன்றாகத்தான் இருக்கிறது, மனநிலை தான் சரியில்லை என்றார்.

சரி அதனால் உணவை வீணாக்கலாமா?

உலகில் ஒவ்வொரு 3.6 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் இறக்கிறார்.என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது நண்பரே என்றேன்.

அதற்கு அவர் என் மனக்கவலையைவிட இந்தப் புள்ளிவிவரம் பெரிய கவலையைத் தருகிறது நண்பரே என்றார் அவர்.

ஆமாம்..

“நீ உன்னால் முடியாது என்று எதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாயோ..
அதை உலகின் ஏதோ ஓரிடத்தில் ஒருவர் முடித்துக்கொண்டிருக்கிறார்! என்றொரு பொன்மொழி உண்டு நண்பரே..

அவரும் சிரித்துக்கொண்டே ஆமாம் ஆமாம் பலர் சாப்பிடுவதற்காகவே பிறந்திருக்கிறோம் என்றுதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி்க்கொண்டே கொஞ்சம் முயற்சித்து சாப்பிட்டார். அப்போது நான் சொன்னேன்..

நண்பரே இதுதான் நீங்கள் உணவுக்குத் தரும் மரியாதை என்றேன்.இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்கும் முன் சிந்திப்போம்.

இதுகூட செய்வதற்கு அரிய செயல்தான்..

முயற்சித்தால் நாமும் பெரியோராகலாம்.

தொடர்புடைய இடுகைகள்


33 comments:

 1. இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்கும் முன் சிந்திப்போம்.

  இதுகூட செய்வதற்கு அரிய செயல்தான்..

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. உலகத்துல எனக்கு பிடிக்காத மிக சொற்பமான விசயத்தில் உணவு பொருட்களை வீனடிப்பதும் ஒன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் தன்மதிப்பீட்டுக்கும் நன்றி நண்பா.

   Delete
 3. உணவினை வீணாக்கக் கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு தான் முனைவரே. எத்தனை எத்தனை குழந்தைகள் உணவில்லாது கஷ்டப்படுகிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே தங்கள் புரிதலுக்கு நன்றிகள்.

   Delete
 4. உணவுப்பொருள்களை தேவையான அளவு மட்டும் வாங்கி உணபதே சிறந்தது.

  அதையும் மீறி அதிக உணவு நம் தட்டில் இருப்பின் உடல்தேவைக்கு ஏற்ப மிகுதியை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. அதிகமாக சாப்பிட்டு உடல் அவஸ்தையை அனுபவிப்பதை விட ஒதுக்கிவிடுதல் நலம்

  நல்லதொரு சிந்தனை முனைவரே..

  ReplyDelete
 5. இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்கும் முன் சிந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அறிவுறுத்தலுக்கு நன்றிகள் நண்பரே.

   Delete
 6. அருமையான கருத்துக்கள்! உணவை வீண்செய்வதை தவிர்ப்போம்!

  இன்று என் தளத்தில்
  பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
  கோப்பை வென்ற இளம் இந்தியா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

  ReplyDelete
 7. ஆம் முனைவரே .!பலர் உணவில்லாமல் இறக்கிறார்கள் ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி ஸ்டாலின்.

   Delete
 8. உணவின் மகத்துவத்தினை சொல்லும் பதிவினை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ!

  ReplyDelete
 9. //இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்கும் முன் சிந்திப்போம்.
  இதுகூட செய்வதற்கு அரிய செயல்தான்.//

  பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்வோம் !
  பதினாறும் என்னென்ன என அழகாகச் சொல்லியுள்ளது அருமை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. உணவின் முக்கியத்துவத்தை நண்பருக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் உணர்த்திய முனைவர் வாழ்க!

  ஸ்ரீ....

  ReplyDelete
 11. இனி உணவுப் பொருட்களை வீணடிப்பதைத் தவிர்ப்போம் ...உபயோகமான பதிவு ...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி தண்மதி.

   Delete
 12. அருமையான பகிர்வு.

  உணவை வீணாக்குவது பெரிய பாவங்களில் ஒன்னு. இப்படித்தான் எங்க பாட்டி, சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்தாங்க. இப்ப நானும் என் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறேன்.

  ReplyDelete
 13. உண்மை, உணவு இருப்பவர்கள் சிந்திக்காமல் வீணாக்குகிறோம். என் பையன் எப்பொழுதும் சாப்பிடும் பொழுது போதும் போதும் என்று சொல்லிக்கொண்டு இருப்பான். ஒரு நாள் அவனிடம் தினமும் சாப்பாடு இல்லாமல் நிறைய பேர் சாகிறார்கள் தெரியுமா, நீயே வலையில் தேடித் பார் என்றேன். பார்த்து விட்டு அவன் சொன்ன தகவல், 16000 குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பட்டினியால் இறக்கிறார்கள், 1 நொடிக்கு 5 குழந்தைகள்!!!! :-( குறைவானாலும் தேவையானதைச் எடுத்து வீணாக்காமல் சாப்பிட அறிவுறுத்தியிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தேவையான புள்ளிவிவரங்களுடன் உண்மையை சத்தமாகவே சொல்லியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

   Delete
 14. சாப்பாட்டை வீணடிக்கிறதைப்போல் ஒரு பாவச்செயல் ஏதுமில்லை. தட்டுல பரிமாறிட்டு வீணாக்கறதை விட தேவையானதை மட்டும் பரிமாறிக்கறது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி அமைதிச்சாரல்

   Delete
 15. உண்மை தான் ஐயா..ஒவ்வொரு மனிதனுமே பாடுபடுவதே இந்த உணவுக்கு தான்..ஆனால் நம்மில் சிலர் அதை வீணாக்குகிறோம் ஐயா..

  ReplyDelete