வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கூகுளைவிடச் சிறந்த தேடுபொறி!


 1. இன்று வரை எத்தனையோ தேடு பொறிகள்ழக்கில் வந்திருக்கின்றன. எந்தத் தேடுபொறியாலும் கூகுளோடு போட்டி போடமுடியவில்லை.
 2. யாகூ, பிங் என பிரபலமான தேடுபொறிகளின் இடையே குல் (www.Cuil.com) என்றொரு தேடுபொறி வந்து நான்தான் கூகுளைவிட சிறந்த தேடுபொறி என்றது. ஆனால் இன்றுவரை நிலைத்திருப்பது என்னவே கூகுள் மட்டுமே.
 3. கூகுளின் இந்தச் செல்வாக்கிற்கு அடிப்படைக் காரணங்களில் சில...

 4. விரைவான தேடல்
 5. துல்லியமான தேடல்
 6. சரியான பகுப்பாய்வு
 7. தொடர்புடைய செய்திகளைத் தருதல் ஆகியனவாகும்.

 8. நானும் சிந்தித்துப் பார்த்தேன் கூகுளைவிடச் சிறந்த தேடுபொறி எது? என்று..

  நானறிந்த வரை மனித மனதுக்கு இணையாக கூகுளால் கூட ஒரு செய்தியைத் தேடித்தரமுடியாது என்று தோன்றியது.

  நாம் கூகுளில் தேடும் அளவுக்கு நம் மனதில் தேடுவதில்லை என்பதுதான் நிகழ்கால உண்மை.

  பெரிய பேச்சாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள், தேர்ந்த ஓவியர்கள், சாதனையாளர்கள் என இவர்களின் வாழ்க்கையை ஆழ்ந்துநோக்கினால் இவர்கள் தம் மனதில் தன்னைப் பற்றித் தேடி தன்னால் என்ன முடியும் என்று அறிந்துகொண்டவர்கள் என்பது விளங்கும்.

  விலங்குகளுக்குக் கூட அதன் அனுபவங்கள் மரபியல் கூறுகள் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. அதுபோலவே மனிதனுக்கும் இன்று இந்த மணித்துளி வரை மனித சமூகம் பெற்ற அனுபவங்கள் அடுத்த தலைமுறை மனிதனுக்கு மரபியல் கூறுகள் வழியே எடுத்துவரப்படுகின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது.
  ஒவ்வொரு புதிய செய்தியைத் தெரிந்துகொள்ளும் போதும் இது நமக்கு முன்பே தெரிந்ததுபோல உள்ளதே என்று நமக்குத் தோன்றும் எண்ணமே அதற்குச் சான்றாகவுள்ளது.

  • கூகுள் தன் தரவுத் தளத்தில் உள்ள செய்திகளைத் தேடித்தருவதுபோல, மனித மனமும் தன்னிடம் உள்ள செய்திகளைத் தேடித்தரத் தயாராக உள்ளது. என்றாலும் நாம் தான் அதைப் பயன்படுத்துவதில்லை.

  • நம் மூளை என்னும் தரவுத்தளத்தில், சென்ற தலைமுறையிலிருந்து பெற்ற அனுபங்களை சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அதனை நாம் அறிந்துகொள்வதற்கு நமக்கு கல்விநிலையங்கள், நூல்கள், அனுபவங்கள் எனப் பல்வேறு அறிவின் கூறுகள் தேவைப்படுகின்றன.

  இன்றைய சூழலில் பலருக்குத்  தான் யார் என்றும் தனக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளது என்றும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள முயல்வதும் இல்லை.

  தான் யார் என்று தெரிந்துகொண்டவர்களை 
  இந்த உலகம் உடனடியாகத் தெரிந்துகொள்கிறது!

  தான் யார் எனத் தெரியாதவர்களைப் பற்றி 
  இந்த உலகத்துக்கும் கவலையில்லை!

  இதோ சில தேடல்கள்..


 9. நான் யார் தெரியுமா?
 10. என்று பலரும் தன்னைப் பற்றி பிறரிடம் கேட்பதுண்டு.

  இவர்கள் யார் என்று இவர்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? தெரியாமல் தான் கேட்கிறார்களா? என்று தான் இவர்களைப் பார்த்தால் எனக்குத் தோன்றும்.

 11. எல்லோருக்கும் எல்லாமே தெரியும் - ஆனால்
 12. தனக்கு எல்லாம் தெரியும் என்பதுதான் எல்லோக்கும் தெரிவதில்லை என்பது எனது அனுபவ மொழி.

  • வடிவேலு நகைச்சுவையில், வேலைக்குச் செல்லும் வடிவேலுவை நிறுத்தி சிங்கமுத்து என்ற நடிகர் கேட்பார்..கருப்பா, குள்ளமா, சுருட்டை முடிவச்சிட்டு ஒருத்தர் இருப்பாரே அவரை உங்களுக்குத் தெரியுமா? என்று.

  வடிவேலுவோ.. யாரவர் அவர் வீட்டுமுகவரி, தெருமுகவரி என்று ஏதாவது அடையாளம் இருக்கிறதா? என்று கேட்பார். அதற்கு அவர் அதெல்லாம் எதுக்கு தம்பி என்று கருப்பா, குள்ளமா, சுருட்டை முடிவச்சிட்டு ஒருத்தர் இருப்பாரே அவரை உங்களுக்குத் தெரியுமாஎன்று மீண்டும் சொல்லி அவரைத் தெரியுமா? என்று கேட்பார். வடிவேலுவுக்குக் கோபம் வந்துவிடும்..

  என்னய்யா நீ முகவரியும் தரமாட்டேங்கிற, விவரமும் சொல்ல மாட்டேங்கிற யாரு யாருன்னு கேட்டா எனக்கு எப்படிய்யா தெரியும்? என்ற கேட்பார்.

  அப்போது அவருக்குத் தலைக்கு மேல் கோபம் வந்துவிடும்.
  ஏன்டா... அது நான் தான்டா.
  நான் இந்த தெருவுல எந்த அளவுக்குப் பிரபலமாகியிருக்கேன் என்று தெரிஞ்சிக்கதான்டா அப்படிக் கேட்டேன். யாரைக் கேட்டாலும்..

  சொன்னவுடனே என்னை நல்லாத் தெரியும்! நல்லாத் தெரியும்! என்று சொல்லிட்டுப் போறாங்க. நீ மட்டும் எப்படிடா என்னைய தெரியாதுன்னு சொல்லாம் என்று போட்டு வடிவேலுவை அடிப்பார்.

  இப்படியொரு நகைச்சுவை. இதில் இவர் யார்? என்று இவர் தகுதி என்ன என்று இவருக்கே தெரியவில்லை. இன்னொருவரிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இவர் நினைக்கிறார்.

  • இதுபோல இன்னொரு சென் கதை...

  ஒரு துறவி இறக்கும் நிலையில் இருப்பார். அவரைச்சுற்றி அவரது சீடர்கள் சூழ்ந்திருப்பார்கள். தன் குரு கடைசியில் என்ன வார்த்தை சொல்லப் போகிறார் என்று ஆவலாகக் காத்திருந்தார்கள். அந்தக் கடைசி வார்த்தை அவரது வாழ்வின் மொத்த அனுபவமாக இருக்கும் என்று அந்த வார்த்தையைத் தெரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

  அந்த குருவோ தம் சீடர்களில் சிறந்த சீடனை அருகே அழைத்தார். அவரிடம் தம் வாயைத் திறந்து காட்டினார். பின் என்ன தெரிந்தது என்று கேட்டார்.

  சீடன் சொன்னார், “குருவே பற்கள் தெரிகின்றன, நாக்கு தெரிகிறது என்றார்.

  குரு சொன்னார். பார்த்தாயா.. உனக்கே எல்லாம் தெரிந்திருக்கிறது. பற்கள் நிலையில்லாதவை, நாக்கு நிலையானது என்பது உனக்குத் தெரிந்திருக்கிறது. இந்த உலகில் எல்லாமே இப்படித்தான் நமக்குத் தெரியும் என்பதுதான் பலநேரங்களில் நமக்கு மறந்துபோகிறது என்றார்.


  • இதே போன்ற இன்னொரு கதை..
  ஒரு தொடர்வண்டியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான் ஒருவன். பொதுவாக அவன் ஒவ்வொருவரிடமும் சென்று...

  சாப்பிட்டு இரண்டு நாளாச்சுங்க..
  கை ஒடிஞ்சுபோச்சு..
  கால் ஒடிஞ்சிபோச்சு..
  கண்கள் தெரியல என ஏதாவது பொய்சொல்வான்.. அதை நம்பிய சிலர் அவனுக்குத் தன்னால் முடிந்த பணமோ, காசோ கொடுப்பார்கள்.

  ஒரு நாள் இப்படித்தான் தொடர்வண்டியில் காலதர்(சன்னல்) அருகே அமர்ந்திருந்த ஒருவரிடம் சென்று பொய்சொல்லி பிச்சையெடுக்கலாம் என்று அருகில் சென்று வாயைத் திறந்தான். அவர் அவன் பேசும் முன்பே தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார். இந்தப் பிச்சைக்காரனுக்கோ உழைக்காத காசு உடம்புல ஒட்டாது என்று மனம் சொன்னது. இன்னொரு கேள்வியும் அவன் மனதில் தோன்றியது.

  இவர் எப்படி நாம் எதுவும் சொல்லாமலேயே பணம் கொடுத்தார்? என்று பல்வேறு சிந்தனைகளோடு. சரி என்று, 


  வேறு பிச்சைக்காரன் போல தன் சட்டையை இன்னும் கிழித்துக்கொண்டு தலைமுடியை மாற்றி சீவிக்கொண்டு கண்ணில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஐயா.. என்று அவரிடமே மீண்டும் சென்றான்..

  இப்போதும் அவர் அவன் பேசும் முன்பே இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார்இவனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்று எதுவும் பேசாதவனாக மீண்டும் சட்டையைக் கழற்றிவிட்டு கைகளை மடக்கி உள்ளே வைத்துக்கொண்டு ஒருகையில்லாதவன் போல அவரிடமே மீண்டும் போய் நின்றான். இவன் ஆரம்பிக்கும் முன்பே அவரும் வழக்கம் போல இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார்.

  இப்போதும் இவனால் தன் மனதில் தோன்றிய கேள்வியை அவரிடம் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

  அவரிடமே கேட்டான்...

  ஐயா நான் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?
  நான் தான் முதலில் கால் ஒடிந்தவனாக வந்தேன்.
  இரண்டாவது முறை கண் தெரியாதவனாக வந்தேன்.
  மூன்றாவது முறை கைஇல்லாதவனாக வந்தேன்.

  என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா என்று கேட்டான்.

  அதற்கு அந்த மனிதர் சொன்னார். தம்பி நீ ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தோற்றங்களோடு வரும் போதும் நீ யார் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது.

  ஆனால் பாவம் உனக்குத்தான் நீயார் என்று தெரியவில்லை என்று எண்ணி, சிரித்துக்கொண்டிருந்தேன் என்றார்.

  அவர் சொன்னதன் பொருள் புரிந்தும் புரியாமலும் அவன் அந்த இடத்தைவிட்டுச் சென்றான் என்றொரு கதை உண்டு.

  வடிவேலு நகைச்சுவை
  சென் கதை
  பிச்சைகாரன் கதை

  என மூன்று கதைகளும் சொல்லும் கருத்து ஒன்றுதான்.
  உள்முகத்தேடல் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை என்பதுதான் அது.

  மனித மனதை விடச் சிறந்த தேடுபொறி இதுவரை கண்டறியப்படவில்லை, மனித மூளையில் உள்ள செய்திகள் அளவுக்கு கூகுளின் தரவுத்தளத்தில் கூட செய்திகள் இல்லை என்ற வாழ்வியல் உண்மையையே இக்கதைகள் உணர்த்துகின்றன. 

37 கருத்துகள்:

 1. செம செம! உண்மையில் தன்னுள் தன்னை தேடி கண்டுகொள்பவனை இந்த உலகமும கண்டுகொள்கிறது!

  கலகலப்பாக பயணித்து அருமையாக முடிந்தது! அருமை நண்பரே! (TM 2)

  பதிலளிநீக்கு
 2. அருமையான தேடல் பதிவுங்க முனைவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பல உதாரணங்களுடன் சொல்லி அருமையாக முடித்துள்ளது சிறப்பு முனைவரே ! பாராட்டுக்கள்...

  நன்றி...
  (த.ம. 4)

  பதிலளிநீக்கு
 4. மனித மனதை விடச் சிறந்த தேடுபொறி இதுவரை கண்டறியப்படவில்லை,//உண்மை தான் அன்பரே

  பதிலளிநீக்கு
 5. ஆம். சரியாக சொன்னீர்கள். நம்மைப்பற்றி நாம் சரியாக ஆராய்ந்து பார்ப்பதில்லை. இதைத்தான் கண்ணதாசனும் "உன்னை நீ அறிந்தால் உலகத்தில் (நன்றாக) போராடலாம் என எழுதினார்.
  முக்கியமாக நம் இளைஞர்கள் படிக்க வேண்டிய அற்புத கருத்துக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நல்ல சிந்தனை.. :)
  அழகான தொகுப்பு.... வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. மிகவும் அருமையான கருத்துக்களை எளிய வார்த்தைகளில் சொல்லி இருக்கிறீர்கள். சமீபத்தில் நான் படித்ததில் அருமையான ஒரு பதிவு இது.

  பதிலளிநீக்கு
 8. கூகுலில் இருந்து...மனவியல் தேடல்...மிக நல்ல கருத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி சீனி.

   நீக்கு
 10. மிகச்சிறந்த தேடுபொறி .... அருமையான சிந்தனை

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து, சிந்தித்ததை உதாரணக் கதைகளுடன் கொடுத்து படிப்பவர்களின் மனதில் கருத்தை ஆழ விதைத்த விதம் அருமை..!!!

  தெளிவான நடையில் எளிமையான வார்த்தைகளைக் கொண்டு பதிவில் பயணம் செய்திருக்கிறீர்கள்..!

  தொடரட்டும் கருத்துப் பயணம்..!!!

  பதிலளிநீக்கு
 12. ஐயா என் மனம் மறுக்கமுயாத பயணத்தை அதனுள் ஆரம்பித்துவிட்டது உங்கள் பதிப்ப படித்த உடன்.. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்... எனது சின்ன விருப்பம் ஜென் கதைகளையும் அதற்குரிய விளக்கங்களையும் ஒரு பதிப்பாக வெளிஇடுங்கள்.... நன்றி.

  பதிலளிநீக்கு
 13. நல்லது வசந்தன். பதிவிடுகிறேன்.
  தற்போது கதை என்னும் பிரிவில் சென் உட்பட பல கதைகளைப் பகிர்ந்து வருகிறேன்..

  பதிலளிநீக்கு
 14. உண்மைதான். தன்னில் தன்னை காணமுடிபவர், வெற்றிபெறுவார் . நல்ல கருத்து . நன்றி

  பதிலளிநீக்கு
 15. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்..

  பதிலளிநீக்கு
 16. உள்முகத்தேடல் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை

  பதிலளிநீக்கு
 17. அருமையான கருத்து படித்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. எத்தனை முறைபடித்தாலும் சலிக்கவில்லை அவ்வளவு உண்மை ஒளிந்திருக்கிறது.
  நன்றி

  பதிலளிநீக்கு