வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

காலம் மாறிப்போச்சு பாருங்க..யதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்றொரு பொன்மொழி உண்டு.வயதான சிலரிடம் கேட்டிருக்கிறேன் உங்கள் வயது என்ன? என்று அதெல்லாம் யாருக்குத் தெரியும் நம்ம ஊரு ஆத்துல பெரிய வெள்ளம் வந்தபோது தான் நான் பிறந்தேன் என்று ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்றெல்லாம் பள்ளியில் சேர அடிப்படைத்தேவை, பிறந்தநாள் சான்றிதழ் என்று வழக்கமே வந்துவிட்டது. ஆனால் இன்றோ நம் வயதைக் கணக்கிட்டுக்கொள்ள எவ்வளவு வழிமுறைகள் வந்துவிட்டன.

          என்னைப் பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றபோது தலைமை ஆசிரியர் என் வலது கையால் உச்சந்தலைக்கு மேல் சுற்றி இடது காதைத் தொடு என்றார். எனக்கு காது எட்டவில்லை. தம்பி நீ அடுத்த ஆண்டு வாப்பா என்றார் தலைமை ஆசிரியர். மறுநாளே என் ஆயா (அம்மாவின் அம்மா) என்னை அழைத்துச் சென்று சார் இப்பபாருங்க அவனே அவன் காதைத் தொடுவான் என்றார். தலைமை ஆசிரியர் என்னடா ஒரே நாளில் உன் கை வளர்ந்திடுச்சா? இல்லை காது வளர்ந்திடுச்சா? என்றார். சரி தொடு பார்க்கலாம் என்றார்.

        நானும் வலது கையை உச்சந்தலையைச் சுற்றிக் காதைத் தொடுவதற்குப் பதிலாக, தலையின் பின்பக்க வழியாகக் காதைத் தொட்டேன். தலைமை ஆசிரியரும் சிரித்துக்கொண்டே சரி சரி என்று சேர்த்துக்கொண்டார். அப்போது எனக்கு வயது ஐந்து. இப்போதெல்லாம் ஐந்து வயதுவரை குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு எந்தப் பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இல்லை அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முதியர்வகள் யார் வீட்டில் இருக்கிறார்கள்.

இது நாகரிகத்தின் வளர்ச்சியா? இல்லை பண்பாட்டின் வீழ்ச்சியா? என்று மனம் கேட்கிறது.


இணையத்தில் உலவும்போது வயதைக் கணிக்கும் இணையம் ஒன்று காணக்கிடைத்தது.

உங்கள் வயதைக் கணக்கிட்டுக்கொள்ள இங்கு அழுத்தவும். உங்கள் பிறந்த நாள், மாதம், ஆண்டு போன்ற விவரங்களை மட்டும் கொடுத்தால், நாம் எந்த கிழமை பிறந்தோம், இப்போதுவரை நாம் எத்தனை நாட்கள், எத்தனை மணிநேரம், நிமிடங்கள், மணித்துளிகள் வாழ்ந்திருக்கிறோம் எனத் துல்லியமான விவரங்களை இந்த இணையம் தருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு கணக்கீட்டு முறைகளும் இதில் உண்டு. மேலும் இந்த இணையம் தரும் நிரல்களை வலைப்பதிவில் இணைத்துக்கொண்டால் அவரவர் வலைப்பதிவிலிருந்தே இந்த விவரங்களைப் பெறமுடியும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.


1,021,184,643 இவ்வளவு துல்லியமான விவரங்களைப் பார்க்கும்போது..

நாம் எந்த அளவுக்கு இந்த வாழ்வைப் பயனுள்ளவாறு வாழ்ந்திருக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.
தொடர்புடைய இடுகை


ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)

19 கருத்துகள்:

 1. நல்லதொரு தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சார்...
  நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. /நாம் எந்த அளவுக்கு இந்த வாழ்வைப் பயனுள்ளவாறு வாழ்ந்திருக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.//சரியா சொன்னீங்க .

  பயனுள்ள தகவல் .
  தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. //
  நாம் எந்த அளவுக்கு இந்த வாழ்வைப் பயனுள்ளவாறு வாழ்ந்திருக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது//

  அருமையான கேள்வி... இந்த கேள்வி எல்லோர் மனதிலும் எழுமேயானால் நிச்சயம் ஒரு சிறந்த சமுதாயம் உருவாகும்!

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள தகவல்! நன்றி!

  இன்று என் தளத்தில்

  தாயகத்தை தாக்காதே! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

  சுதந்திர தின தகவல்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

  பதிலளிநீக்கு
 5. நல்ல தள அறிமுகமும் நீங்கள் பள்ளியில் சேர்ந்த கதையும் கலந்து அழகான பகிர்வைத் தந்திருக்கிறிர்கள் முனைவரே.

  பதிலளிநீக்கு
 6. பயனுள்ள தகவல் .
  தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. நல்ல தளம் பலருக்குப் பயன்படும். அறிமுகம் செய்த முனைவருக்கு எமது நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அன்புடையீர்,

  வணக்கம்.

  தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாக பயனுள்ளதாக உள்ளது.

  வாழ்த்துகள் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

  http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உவகையோடு பெற்றுக்கொண்டுன் அன்பரே.
   தங்கள் அன்புக்கு நன்றி.

   நீக்கு
 9. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு