வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்!


நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவன் நான்!

மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நான் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்!!

கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
நான் மரங்களை வெட்டினாலும்
கட்டிடங்கள் வளர்த்துத் தருகிறேன்!

வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்!

மரங்கள்..
மலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!

மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!

நானும் மரமும் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் மரமும் நானும்
என்று சொல்லிக்கொள்கிறேன்..

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்..

கவிஞர் காசியானந்தன்.


தொடர்புடைய இடுகைகள்



25 கருத்துகள்:

  1. //பறவைகளின் பல்கலைக்கழகமாக மரங்களே திகழ்கின்றன.//

    சிறந்த கவிதையின் மிகச்சிறந்த வரி.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  2. நானும் மரமும் என்று
    சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
    நான் இன்னும் வளரவில்லை!
    அதனால்தான் மரமும் நானும்
    என்று சொல்லிக்கொள்கிறேன்..

    கனிந்த மொழிகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

      நீக்கு
  3. சிறப்பான பகிர்வு சார்...

    வாழ்த்துக்கள்... மிக்க நன்றி... (TM 4)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. சிறப்பானதொரு கவிதை! மரம் வளர்ப்போம்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  5. பச்சையம் காப்போம்.அருமையான கவிதை !

    பதிலளிநீக்கு
  6. ஆழமான கருத்து! அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html?showComment=1389055275351#c7234559865850481387

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு