Friday, November 30, 2012

மின்வெட்டை சமாளிக்க எளிய வழிகள்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் மின்வெட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அணுஉலை, அணுமின்நிலையம், காற்றாலை, சூரியமின்உற்பத்தி என அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.இன்னும் 6மாதங்களில் மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மக்கள் மனநிலையை எடுத்தியம்பும் படங்கள் சில.. கதை ஒன்று..
முல்லா ஒரு கழுதை வைத்திருந்தார். அதில் தான் அவர் செல்வார். அந்தக் கழுதை எப்போதும் அவர் பேச்சைக் கேட்பதே இல்லை. கிழக்கே போகச் சொன்னால் மேற்கே போகும். மேற்கே போகச்சொன்னால் வடக்கே போகும்.
     ஒருநாள் முல்லாவின் நண்பர், முல்லாவைப் பார்த்து, “என்ன முல்லா நேற்று நீங்கள் கழுதைமீது அமர்ந்து விரைவாகச் செல்லும்போது நான் நிற்கச்சொன்னேன். நீங்க நிற்காமலே போய்விட்டீர்களே? என்று கேட்டார்.
அதற்கு முல்லா, நானா நிற்கமாட்டேன் என்று சொன்னேன். தாங்கள் சொல்வதை என் கழுதையிடம் சொல்லுங்கள். அதுதான் நிற்கமாட்டேன் என்கிறது. நான் சொல்வதை அது என்றுமே கேட்டதில்லை.“
அதனால் அதற்கு ஏற்றவாறு நானும் என்னை மாற்றிக்கொண்டேன்.
கழுதை எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு என்ன வேலை உண்டோ அதைப் பார்க்கப் பழகிக்கொண்டேன் என்றார்.

(மின்சாரம் நாம் நினைக்கும்போதெல்லாம் வந்துவிடாது. 
அது வரும்போது நாம் மின்சாரம் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ளவேண்டும்)

இந்தக் கதையில் முல்லாவும் – கழுதையும்
நிகழ்காலத்தில் தமிழக மக்களும் – மின்சாரமும்.
 ஒப்புநோக்கி சிரித்து மகிழ்க. (இடுக்கண் வருங்கால் நகுக)

இந்நிலையில்,மின்வெட்டை சாமாளிக்க சில வழிமுறைகளைக் காண்போம்.
 •  எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் அதனால் மின்சாரம் என்ற ஒன்று இருப்பதையே (இருந்ததையே) மறந்துவிடுங்கள்.
 •  இணையம், தொலைக்காட்சி, கணினி எல்லாவற்றையும் மறந்து (நினைத்தாலும் பயன்படுத்தமுடியாது) குடும்பஉறவுகளிடமும், நண்பர்களிடமும் பேச மின்வெட்டு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 • ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், திருகை, விசிறி ஆகிய பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளலாம்.
 • மின்விசிறி இல்லாததால் வீட்டில் மரங்களை வளர்த்துக்கொள்ளலாம்.

      ·  பொழுதுபோக்குவதற்காக நல்ல நூல்களைப் படிக்கலாம்.
 • அதிகரித்து வந்த மின்பயன்பாட்டால் மனிதஉடல் உழைப்புகள் குறைந்து வந்தன. அதனால் நோய்களும் பல உருவாகிவந்தன. இப்போது நோயின்றி வாழ சிறந்த வழி இந்த மின்வெட்டு என எண்ணி்க்கொள்வோம்.
மின்வெட்டை சாமாளிக்க நான் கடைபிடிக்கும் வழிமுறைகளை இதில் தெரிவித்திருக்கிறேன்.

அன்பு நண்பர்களே நீங்களும் மின்வெட்டை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று சொன்னால் பெரிதும் மகிழ்வேன்.

40 comments:

 1. நகைச்சுவையாக இருந்தாலும் இறுதியில் சிந்திக்கவே வைத்தன. :))

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

   Delete
 2. மின் தடையை இப்போது இன்வெர்ட்டரால் சமாளிக்க முடிகிறது. ஆனாலும் பாட்டரி சார்ஜ் ஆக கூட மின்சாரம் இல்லாமல் போனால் முன்னோர் காலத்தில் இருப்பது போல பழகி கொள்ள வேண்டியதுதான். சமாளிக்க நல்ல வழிகளை சொல்லியிருக்கிங்க. நல்ல நூல்களை வாசிக்கலாம்.. ஆனா குறைஞ்ச ஒளியில் படிச்சா கண்ணாடி போட வேண்டி வந்திருமே.. காற்றோட்டமா வெளியில் உட்கார்ந்து கதை பேச வேண்டியதுதான். (நல்ல கதையா..)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு.

   Delete
 3. ஒருவேளை மின்தடையும் நல்லதுக்கோ !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஹேமா

   Delete
 4. ஹா... ஹா... நல்ல தொகுப்பு... சில தளங்களில் இதில் உள்ள சிலவற்றை பார்த்துள்ளேன்...

  இருக்கிற நிலைமைக்கு சிரிக்க வைத்தமைக்கு நன்றி முனைவரே...
  tm3

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தனபாலன்

   Delete
 5. வணக்கம் முனைவரே...
  இன்றைய வேளையில் முக்கியமான பிரச்சனை
  இந்த மின்வெட்டு....
  இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும்...
  அதை சமாளிக்க நாம் கொஞ்சம்
  கொஞ்சமாக பழகிக் கொண்டிருக்கிறோம்...
  நீங்கள் கூறிய வழிமுறைகள்
  நம் உறவுகளின் பலத்தையும்
  சுற்றுப்புறத்தையும்
  நுண்ணறிவும் முன்னேற
  உதவுவதாய் இருக்கின்றது
  முயற்சிப்போம்... சமாளிக்க....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

   Delete
 6. நீங்கள் சொல்வது கடைபிடிக்கவேண்டிய விஷயம்தான்.மின்சார செயல்பாட்டினால் மனிதர்கள் இயற்கையை மறந்து விட்டார்கள்.மின்சார செயல்பாடு இல்லாமல் ஆட்டுக்கல், அம்மிக்கல்,உரல் இவைகளை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கும் ஆரோக்கியம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தொழிற்களம் குழு

   Delete
 7. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் குமுதம் வார இதழ் இலவச இணைப்பாக கொடுத்த ஒரு சிறு புத்தகத்தின் பெயர் “ நல்லாத்தான் சொன்னார் முல்லா நசுருதீன்”. நீங்களும் மின்வெட்டு குறித்து நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா

   Delete
 8. இருளும் இருள் சார்ந்த இடமும் ரசித்தேன்
  எள்ளலுடன் கூடிய சமகால சமூக பதிவு

  ReplyDelete
 9. மிதுன ராசிக்காரர்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அப்பாதுரை

   Delete
 10. "(மின்சாரம் நாம் நினைக்கும்போதெல்லாம் வந்துவிடாது.
  அது வரும்போது நாம் மின்சாரம் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ளவேண்டும்)"

  "இணையம், தொலைக்காட்சி, கணினி எல்லாவற்றையும் மறந்து (நினைத்தாலும் பயன்படுத்தமுடியாது) குடும்பஉறவுகளிடமும், நண்பர்களிடமும் பேச மின்வெட்டு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்."

  இவை இரண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டன.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஊரான்

   Delete
 11. சோகத்தையும் நகைச்சுவையாக சொல்லி இருக்குறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஸ்ரீலங்கா தமிழ் நியுஸ்

   Delete
 12. “அதிகரித்து வந்த மின்பயன்பாட்டால் மனிதஉடல் உழைப்புகள் குறைந்து வந்தன. அதனால் நோய்களும் பல உருவாகிவந்தன. இப்போது நோயின்றி வாழ சிறந்த வழி இந்த மின்வெட்டு என எண்ணி்க்கொள்வோம்.“

  இப்படி எண்ணிக் கொள்வதே நலம்.
  உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது முனைவர் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அருணா செல்வம்.

   Delete
 13. ஐந்தாவது நிலம் அருமை :))

  உங்கள் சிரமங்கள் புரிகின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மாதேவி.

   Delete
 14. கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றி மூத்த குடி எம் தமிழ் குடி! மின்சாரம் இல்லாவிட்டால வாழமாட்டோமா? ...இப்படி ஏதாவது சொல்லித் தேற்றிக் கொள்ளவேண்டியதுதான்! :-)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்

   Delete
 15. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி
  உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி அன்பரே கண்டு மகிழ்ந்தேன். தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி.

   Delete
 16. பதிவில் நக்கல் இருந்தாலும் மெல்லிய சோகமும் இழையோடுகிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி புலவரே

   Delete
 17. முல்லா கதை சரியான பொருத்தம்.

  உண்மையை சொல்லப்போனால் இப்போதெல்லாம் நான் நிறைய புத்தகங்கள் படிக்கிறேன் நீங்கள் கூறி உள்ளதைப்போல.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி பாலா.தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

   Delete
 18. பொழுதுபோக்குவதற்காக நல்ல நூல்களைப் படிக்கலாம்.
  அதிகரித்து வந்த மின்பயன்பாட்டால் மனிதஉடல் உழைப்புகள் குறைந்து வந்தன. அதனால் நோய்களும் பல உருவாகிவந்தன. இப்போது நோயின்றி வாழ சிறந்த வழி இந்த மின்வெட்டு என எண்ணி்க்கொள்வோம்.

  நல்ல கருத்து.

  மின்சாரம் வரவில்லை என்று புலம்புவதை விட்டு இப்படி ஆக்கபூர்வமாய் யோசிப்பது அதை நடைமுறை படுத்துவது நல்லது தான்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கோமதி அரசு.

   Delete
 19. மிக அருமையானப் பதிவு நண்பரே!
  தம 11

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி செம்மலை ஆகாஷ்

   Delete
 20. ஆற்றல் எங்கும் சிதறிக் கிடக்கின்றன, அவற்றை கொள்முதல் செய்யத்தான் வழியில்லை. சுயமாக மின்னாற்றலை பெற்றுக் கொள்ள மக்கள் கூட்டுறவுகள் முயல வேண்டும், அரசை நம்பி பயனில்லை.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் நண்பா.முயல்வோம்.

   Delete