Saturday, October 5, 2013

பசிப்பிணி போக்கிய வள்ளலார்

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்“ 
 “திருவருட்பாவை தந்தவர்
 “சமரச சன்மார்க்கம் கண்டவர்“
“ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை“ என்று ஜோதியில் இறைத்தன்மையை உணர்ந்தவர். 
“பசிப்பிணியை அகற்ற வேண்டும் என்று எண்ணியவர்“
அவர்தான் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
 • இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. இவரது பாடல்களை சைவ அடியார்களான நாயன்மார்களின் பாடல்களோடு ஒப்பிட்டு மகிழ்ந்தனர் தமிழ் உணர்வாளர்கள். தமிழ்மீதும் சைவசமயத்தின் மீதும் மிகுந்த பற்றுடைய ஆறுமுகநாவலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  வள்ளலார் பாடிய பாடல்கள் அருட்பா அல்ல அது மருட்பா என்றும் அவை நாயன்மார்களின் பாடல்களோடு ஒப்புநோக்கத்தக்கவை அல்ல என்றும் ஆறுமுக நாவலரும், அவரைத் சார்ந்ததோரும் தமிழ்நாட்டில் வழக்குத் தொடர்தனர். அக்காலத்தில் நடந்த மிகப்பெரிய கருத்துப் போராட்டமாக இது அமைந்தது.

 

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்.

1.     சின்மய தீபிகை
2.     ஒழிவிலொடுக்கம்
3.     தொண்டமண்டல சதகம்

 

இவர் இயற்றிய உரைநடை நூல்கள்

1.     மனுமுறை கண்ட வாசகம்
2.     ஜீவகாருண்ய ஒழுக்கம்


இராமலிங்க அடிகள் கொள்கைகள்

1.     கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆவார்.
2.     புலால் உணவு உண்ணக்கூடாது.
3.     எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4.     சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5.     இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6.     எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7.     பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8.     சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
9.     எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

நல்லதொரு சமூகசீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த வள்ளலாரின் பிறந்தநாளான இன்று அவரது கொள்கைகளை எண்ணிப்பார்ப்பது நம் கடமையாகும்.


10 comments:

 1. வாடிய உயிரைக் கண்டபொழுதிலும் வாடியவர் அவர். இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகளைக் குறிக்கொண்டே செல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் மெய்யழகன்.

   Delete
 2. தமிழுக்கு உயிர்கொடுத்த வள்ளல்...

  பதிவுக்கும் ஒரு பாராட்டு.. மற்றும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா

   Delete
 3. அனைவரும் பின்பற்ற வேண்டிய கொள்கைகளை தக்க நாளில் நினைவுப் படுத்திப் போன பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் சசிகலா.

   Delete
 4. வள்ளலாரைப் பற்றி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள் முனைவரே...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் குமார்

   Delete
 5. வள்ளலார் குறித்து அறியாத
  பல தகவல்கள் அறிந்தேன்
  சிறந்த சிறப்புப் பதிவு தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா

   Delete