ஞாயிறு, 20 அக்டோபர், 2013

வடலூரும் வார்தாவும்

மு.சௌமியா வணிகவியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு


அரசியல் இருட்டை
அகற்ற ஓர் காந்தி
சமுதாய இருட்டைச்
சாய்க்க ஓர் “சோதி“
எங்கள் சரித்திர வானின்
சகோதர ஒளிகள்!
ஒருவரோ
மருவூரில் பிறந்தும்
மருவுதலை விலக்கித்
துறவூரில் வசித்த
தோன்றல்!
மற்றவரோ-
போர்ப்பந்தா் தனில் பிறந்தும்
போர்வெய்யில் பொழுதுகளில்
நீர்ப்பந்தல் வேயும்
நிழல்மேகம் ஆனவர்!

உப்புவரியை எதிர்த்தார்
ஒருவர், பசித்தவரின்
உப்புவரிக்கண்ணீரை
ஒருவர் துடைத்துவைத்தார்
வள்ளலோ –
தேகதேசத்தைத்
தின்றுவந்த
பசியெனும் பழைய
பகையை எதிர்த்தே
அன்னக் கணைகளால்
அமர் புரிந்தவர்!

அண்ணலோ – தேசதேகத்தைத்
தீண்டிப் பரவிய
வெள்ளைக் குட்ட
வியாதியை விரட்ட
சத்தியாக்கிரக
சஞ்சீவி தந்தவர்

இருவரும் சமாதானத் தூதின்
சாட்சியாய் வெண்துகில்
உடற்கொடி மரத்தில்
உடுத்தித் திரிந்தவர்
இருவரும்
சமரசம் என்பதோர்
சத்திய மந்திரம்
உச்சரிப்பதற்கென
உருவான உதடுகள்
அ.சந்தியா வணிகவியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் (நேயர் விருப்பம்–வடலூரும் வார்தாவும் ) எழுதிய கவிதை பெரியார் பல்கலைக்கழக மாணர்வகளுக்குப் பாடமாக உள்ளது. எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்தக் கவிதையை உள்வாங்கி வரைந்துவந்த ஓவியங்கள் இவை. மாணவர்களின் புரிதலையும், அவர்களின் கலைத்திறனையும் வாழ்த்துவோம் நண்பர்களே)


9 கருத்துகள்:

 1. கவிக்கோவின் வரிகள்
  இதமாக பதமாக
  நெஞ்சுக்குள் நுழைகிறது...
  கவிக்கான வரைபடம்
  அதனை விளக்கி நிற்கிறது...
  அருமை அருமை..
  மாணவிக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. உப்புவரியை எதிர்த்தார்
  ஒருவர், பசித்தவரின்
  உப்புவரிக்கண்ணீரை
  ஒருவர் துடைத்துவைத்தார் = அருமை ஐயா. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு