ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இதை இப்படித்தான் அழைக்கவேண்டும்.


ஒலி மரபு
ஆடு – கத்தும்
எருது – எக்காளமிடும்
குருவி - கீச்சிடும்
குதிரை – கனைக்கும்
குரங்கு – அலம்பும்
நரி – ஊளையிடும்
நாய் - குரைக்கும்
பசு - கதறும்
பல்லி - சொல்லும்
புலி – உருமும்
பூனை – சீறும்
யானை – பிளிறும்
எலி – கீச்சிடும்
ஆந்தை – அலறும்
கழுதை -கத்தும்
காகம் – கரையும்
கிளி – பேசும்
கூகை – குழறும்
கோழி – கொக்கரிக்கும்
சேவல் – கூவும்
தவளை - கத்தும்
புறா – குனுகும்
மயில் – அகவும்
வண்டு - முரலும்
வானம்பாடி - பாடும்
வினை மரபு
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
ஓவியம் புனைந்தான்
கூடை முடைந்தாள்
சுவர் எழுப்பினான்
செய்யுள் இயற்றினான்
சோறு உண்டான்
தண்ணீர் குடித்தான்
பால் பருகினாள்
பூப்பறித்தாள்
மரம் வெட்டினான்
மாத்திரை விழுங்கினான்
முறுக்கு தின்றான்

தொகுப்பு – இரா.சத்தியப்பிரியா
முதலாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

திருச்செங்கோடு.

22 கருத்துகள்:

 1. அறியாத சில அறிந்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உண்மையில் இங்கு நிறைய பேர் மரபுகளை மறந்துதான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்...

  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு

 3. தொகுப்பு – இரா.சத்தியப்பிரியா
  முதலாமாண்டு வணிகவியல்
  கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

  இச் சிறுமிக்கு எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  பதிலளிநீக்கு
 4. ஒலிமரபும் வினை மரபும் அறிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. மாணவர்களின் எண்ணங்களையும் படைப்புகளையும் இங்கே பகிர்ந்திடும் தங்கள் பண்பு கண்டு வியக்கிறேன். நல்ல தகவல்கள் அனைவருக்கும் பயன்படும். பகிர்வுக்கு நன்றி சகோதரரே...

  பதிலளிநீக்கு
 6. முகநூலில் பகிர்ந்த இந்த இடுகைக்கான மறுமொழிகள்..


  Abdul Khader அழகாக பகிர்ந்தார் - முனைவர் இரா. குணசீலன்

  Nanda Nachimuthu அற்புதம் !!!


  Kathiroli Masilamani yes. "pasu kandru eendrathu, koozhi kunju poriththathu,naai kutti pottathu, manaivi pillai petraall....."ippadiththaan sollavendum. "manaivi kutti pottall, naai pillai petrathu ...."endru maatrrich cholla mudiyaathu. Tamizh vaazhga.

  Annan Pasupathy பகிர்கிறேன். நன்றி.


  சங்கர ராம பாரதி மாணவரை உயர்த்தும் பேராசிரியர் .... வணக்கங்கள் ...மாணவர்க்கு வாழ்த்துக்கள்

  Lukku Logesh Ayya na unga big fan
  22 hours ago · Unlike · 1

  Geetha Mathivanan மிகவும் உபயோகமான பகிர்வு. நன்றி முனைவரே. பூப்பறித்தாள் - இதை பூக்கொய்தாள் என்றும் சொல்லலாம் அல்லவா? ஐயம் தெளிவிக்க வேண்டுகிறேன்.

  முனைவர் இரா. குணசீலன் பூக்கொய்தாள் என்றும் சொல்லலாம் கீதாமதிவாணன்.


  இடுகாட்டான் இதயமுள்ளவன் கொய்தல் - பறித்தல் இரண்டும் ஒரே பொருள் தருமா ஐயா முனைவர் இரா. குணசீலன் மயக்கமாக இருக்கிறது மன்னிக்க வேண்டும் தப்பு என்றால்

  முனைவர் இரா. குணசீலன் பூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல் என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும், ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.

  ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப் பூப்பறித்தல் என்று கூறுவர்.

  தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.

  மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல் என்று கூறுவது தமிழர் மரபு நண்பரே. தங்கள் நுட்மான ஐயம் குறித்து அகம் மகிழ்தேன்.

  பதிலளிநீக்கு