வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 21 பிப்ரவரி, 2009

இணையத்தில் தமிழ்

முச்சங்கம் வைத்ததும் மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.மின் வெளியில் வலைமொழியில் சங்கம் வைத்து தமி்ழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.யாதும் ஊராக யாவரும் கேளிராக உலகு பரவி வாழும் தமிழர்களை இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க வேண்டும்.தமிழர் தம்முள் இணைவதால் நம் தொன்மை,கலை,இலக்கியம்,பண்பாடு ஆகியன காக்கப்படுவதோடு உலகோர் நம் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ள அது அடிப்படையான ஒன்றாகவும் அமைகிறது.
இணையம் இன்று இனம், மொழி, மதம், நாடு எனப் பல்வேறு எல்லைகளையும் கடந்து மனிதர்களை இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்கி வருகிறது.இவ்வூடகத்தில் தமிழ் கடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்த்து அசைபோட்டு இன்றைய சூழலைச் சீர் தூக்கிப் பார்த்து நாளைய தேவையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.
இணையத்தமிழ் நேற்று
 இணையத்தில் எழுத்துரு(Font) மிகப்பெரிய சிக்கலாக
இருந்தது.ஒவ்வொரு இணையதளங்களும் ஒவ்வொரு எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்தன.அதனால் தமிழக அரசு (Tam,Tab)பொதுவான எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியது.
 தமிழ் மென்பொருள்கள குறைவான அளவிலேயே கண்டறியப்பட்டன.
 தமிழ் இணையதளம் தொடங்குவது,பராமரிப்பது எனும் இருநிலைகளிலும் தமிழர்கள் பின்தங்கியிருந்தனர்.அதற்கு கணிணி குறித்த ஆழ்ந்த அறிவும், பணவசதியும் அடிப்படையாக இருந்தன.
 இணையத்தில் தமிழ் நூல்கள்,தமிழ் ஒலி,ஒளிக் கோப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன.அவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன.
 தேவையான தரவுகளைத் தமிழ் வழியே தேட தமிழ்த் தேடு எந்திரங்கள் போதுமானதாக இல்லை.
 தமிழ்க்கல்வி போதிக்கும் இணையதளங்கள் குறைவாகவே இருந்தன.
 புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுள் புதிய தலைமுறையினர் தமிழ் மொழியை ஒலி வடிவில் மட்டுமே புரிந்து கொள்பவர்களாகவும் எழுத்து வடிவங்களைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகவும் இருந்தனர்.அவர்களின் தேவையை நிறைவு செய்ய இயலாததாக நேற்றைய இணையம் இருந்தது.

இணையத்தமிழ் இன்று

 தமிழ் தொடர்பான தரவுகளைத் தமிழ் வழியே தேடும் வசதியை கூகுள் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களும் வழங்குகின்றன.http://jaffnalibrary.com//" தமிழ் எழுத்துருச் சிக்கலுக்கு நாம் கண்ட வழிமுறைகளுள் பிடிஎப்,யுனிகோடு ஆகிய இரண்டும் தனிச்சிறப்புடையன.
பிடிஎப்
1.பிடிஎப் என்பது எழுத்துருச் சிக்கலின்றி எல்லா இயங்குதளங்களிலும் எழுத்துருக்கள் தெரிய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும்.அடாப் ரீடர் எனும் மென்பொருள் மட்டுமே இதன் தேவைகளுன் குறிப்பிடத்தக்கதாகும்.இன்று பிடிஎப் கன்வெர்ட்டர்கள் பல இணையதளங்களில் இலவசமாகக் கி்டைக்கின்றன.
2.யுனிகோடு (ஒருங்குறி)
ஒருங்குறி என்பது கணிணிகளுக்கு இடையிலான எழுத்துருக்களுக்கான பொதுவான குறியீட்டு முறை. மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இக்குறியீட்டு முறையை ஆதரிப்பதால் இன்று எழுத்துருக்களுக்கான சிக்கல் ஓரளவிற்கு முடிவுக்கு வந்துள்ளது.பெரும்பாலானோர் எவ்விதமான தடையுமின்றி இணையத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் பெரும் வாய்ப்பாக யுனிகோடு அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.இன்று வெவ்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த பல இணையதளங்களும் யுனிகோடு முறைக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
எழுத்துருமாற்றிகள்
பல்வேறு எழுத்துருக்களை யுனிகோடு முறைக்கும் யுனிகோடு முறையிலுள்ள எழுத்துருக்களை நமக்குத் தேவையான எழுத்துருக்களுக்கும் மாற்றித் தர பல இணையதளங்கள் உள்ளன.அவற்றுள் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. cc  தமிழ் மென்பொருள்கள் மிகுதியான அளவில் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் வந்துள்ளன.சான்றாக .http://girgit.chitthajagat.in//"
இவ்விணையதளம் பிறமொழி் இணையதளத்தையோ,வலைப்பதிவையோ நாம் படிக்க விரும்பும் மொழிக்கு மாற்றித்தருகிறது.
 இணையம் வாயிலாக பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களைப் பெறமுடிகிறது..http://tamilnool.com//" அதனால் ஒரு நூல் இணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடனேயே பரவலாக அனைவரும் அறி்ந்துகொள்ளமுடிகிறது.
இணைய வலைப்பதிவுகள்
 இணையதளங்களால் இன்று இலவசமாக வழங்கப்படும் வலைப்பதிவுகள் மிகப் பெரிய தகவல்த் தொடர்பு ஊடகங்களாக உருவெடுத்துள்ளன.
 எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ளவும்,கருத்துப்பரிமாற்றத்துக்கும் இவை பயனுள்ளவையாக உள்ளன.
 இணையத்தில் இன்று ஒரு செய்தி்யத் தேடினால் வலைப்பதிவுகளின் செய்திகளே மிகுந்து காணப்படுகின்றன.இது வலைப்பதிவுகளின் ஆதிக்கத்தைக் காட்டுவதாக உள்ளது.
 இணையம் தொடர்பான அடிப்படை அறிவு உள்ளவர்கள் கூட ஐந்து நிமிடங்களில் ஒரு வலைப்பதிவைத் தொடங்கிவிடமுடியும்.
வலைப்பதிவுத் திரட்டிகள் ..http://tamilveli.com//"
பல இணையதளங்களும் இவ்வலைப்பதிவுகளை உடனுக்குடன் திரட்டித் தருகின்றன.இதனால உலகளவில் வலைப்பதிவுகள் அனைவரின் பார்வைக்கும் வரும் வாய்ப்பு ஏற்படுகிறது.

வலைப்பதிவுகளின் இரு நிலை1.இலக்கியம்,அரசியல்,கருத்துப்பரிமாற்றம்,விவாதம்,
கருத்துக்கணிப்பு,வரலாறு,பண்பாடு,பொழுதுபோக்கு ஆகிய கூறுகளைக் கொண்டவை முதல் வகை வலைப்பதிவுகளாகும்,
2.புகைப்படம், ஒலி,ஒளி கோப்புகள் வழிக் கருத்துப்புலப்பாட்டு நெறியைக் கொண்டு விளங்குவன இரண்டாம் வகை வலைப்பதிவுகளாகும்.
பாட்காஸ்டிங்
Broadcasting,Telecasting போல இதுவும் ஒரு வகையான ஒலிபரப்புச் சேவையாகும். (podcasting)இணையத்தின் வாயிலாகக் கருத்துக்களை பதிவு செய்து வைத்தல் இதன் தலையான பணியாகும்.இன்று படிப்போர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் பாட்காஸ்டிங் சேவையால் நாம் விரும்பும் நேரத்தில் படித்துக் கொள்ள இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதற்குச் சான்றாக .http://vetripadigal.blogspot.com//"
தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியைப் பாட்காஸ்டிங்காகத் தரஇயலும்.அதனை நாம் விரும்பிய நேரத்தில் பதிவிறக்கிக் கேட்டுக்கொள்ளலாம்.இணையதளங்களும் வலைப்பதிவுகளும் இன்று இம்முறைக்கே மாறிவருகின்றன.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி
வலைப்பதிவுகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.இன்றைய சூழலில் முழுநேர வலைப்பதிவர்கள் பலரையும் காணமுடிகிறது. வலைப்பதிவுகளில் விளம்பரங்கள் வாயிலாகக் கி்டைக்கும் வருமானமே இதற்குக் காரணமாகும்.ஆட்சீன் உள்ளிட்ட பல அமைப்புகள் வலைப்பதிவு விளம்பரங்களை ஊக்குவித்து வருகின்றன.
இணையத்தில் தமிழ்பதிவுகள் http://www.chennailibrary.com//" http://noolaham.net//"பல இணையதளங்களும் தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் பதிவு செய்துள்ளன.இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.சான்றாக நூலகம் என்ற இணையதளம் 2000 நூல்களைக் கொண்டு விளங்குகிறது.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் நூல்கள் பலவற்றை நூலகம் என்னும் பகுதியில் உரையோடு பதிவு செய்து இற்றைப்படுத்தி வருகிறது.இணையம் வாயிலாகக் கல்வி வழங்குவதிலும் இத்தளம் சிறந்து விளங்குகிறது.


தமிழ் ஒலிக்கோப்புகள்
http://pkp.in/mydrive/index.php?dir=//" http://ravidreams.net/library//"
பல இணையதளங்கள் ஒலி, ஒளிக்கோப்புகளை பதிவு செய்துள்ளன. இவற்றில் திருக்குறள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் குரல்வடிவம், வைரமுத்து, திருவாசகம், குழந்தைக் கதைகள் மற்றும் பாடல்கள், போன்ற பலவற்றையும் காணமுடிகிறது.CIIL எனப்படும் செம்மொழி ஆய்வு நிறுவனம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை ஓதல் முறையில் ஒலி வடிவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

இணையத்தமிழ் நாளை
 இணையத்தில் தமிழ் எழுதுவதும் படிபதும் குறையும்.மாறாக ஒலி, ஒளிக் கோப்புகள் வழி இணையம் இன்னொரு ஒலி, ஒளி ஊடகமாக மாற்றமடையும்.
 இணையதளங்களைவிட வலைப்பதிவுகள் மிகுதியான வழக்கில் வரும்.
 இணையத்தில் தமிழ் எழுதுவதிலோ, படிப்பதிலோ சிக்கல் ஏதுமிருக்காது.
 உலகமொழிகள் யாவும் சில குறியீடுகளுக்குள் அடங்கிப்போகும்.அதனால் தமிழ் மொழியின் எழுத்துருச்சிக்கலும் முடிவுக்குவரும்.

 (E.books)மின்னூல் வடிவில் தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்கும். இணையத்தில் அதிகமான மின்னூலகங்கள் தோன்றும் இலவசமாகப் பதிவிறக்கிப் பயன் படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

 (Sony E book Reader) மின்னூல்களைப் படிக்க கையடக்கமான கருவிகள் பயன்பாட்டில் வரும்.

 .http://thinnai.info// செல்லிடப் பேசிகளிலேயே மின்னூல்களைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள பல இணையதளங்கள் துணைசெய்யும்.

 எம்பி3 வடிவிலான தமிழ் கோப்புகளை பல இணையதளங்கள் வழங்கும்.சான்றாக http://itsdiff// இவ்விணையதளம் வானொலியில் இடம்பெற்ற பல ஒலிக் கோப்புகளை வழங்குகிறது.


முடிவுரை இணையத்தில் நேற்றும்,இன்றும் பெற்ற அனுபவங்களையும், வளர்ச்சியையும் கொண்டு நாம் நாளை செய்ய வேண்டியன.................
 தமிழ் மென்பொருள்கள் மேலும் கண்டறியப்பட வேண்டும்.அரசு அதனை ஊக்குவிக்க வேண்டும்.
 பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் இணையம் தொடர்பான தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதிநல்கை செய்தல் வேண்டும்
 உலகு பரவி வாழும் தமிழர்கள் தம்முள் தொடர்பு கொள்ள மொழிச்சிக்கல் எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ உள்ளதா என ஆய்வு செய்து நீக்க வேண்டும்
 தமிழ் மொழியின் சிறப்புகளை உலகத்தால் அறிந்து கொள்ளவும் உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வங்களை தமிழ் மொழியில் உணர்ந்து கொள்ளவும் வகை செய்யவேண்டும்.
 தமிழ் ஆய்வு செய்வோருக்குத் தேவையான தரவுகள் யாவும் இணையத்தில் கிடைக்கும் வகை செய்தல் வேண்டும்.
 இன்றைய சூழலில் இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவோ இணையம் குறித்த மிகுதியான அறிவோ தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.இதனைப் பயன்படுத்தி நம் கருத்துக்களை நம் தாய்மொழியான தமிழில் வெளியிடுவது நம் தலையான கடமையாகும்.இதுவே நாம் நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சேர்த்து வைக்கும் செல்வமாகும்.

4 கருத்துகள்: