வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

முதலில் தோன்றியது நீரா? நிலமா?


பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது.
நெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்துகொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டுகாலம் எறிந்தபின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற்றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலானது. எரிமழையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக்கொண்டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து பின் மழையாகப் பொழிந்து பருவ இயந்திரம் செயல்பட ஆரம்பித்தது. நெருப்பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தின் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ளது. நீர்வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவுயிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை படிநிலை வளர்ச்சி பெற்றன.

நிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண்மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறுத்துமாறு பல நுட்பமான செய்திகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. “முதுநீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந்தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி வியக்குமாறு உள்ளது.

நிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரையுடைய கடலின் அலைகள் தழுவும், பறவைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில்,
தலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார்த்து மகிழ்ந்தன!
அவனுடன் இனிது பேசியபோது செவிகள் அவன் குரலைக் கேட்டு மகிழ்ந்தன!
தலைவனைச் சேர்ந்தவழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறுபட்டும் காட்டும் உடலின் பண்புகளே எண்ணி வியப்புறத்தக்கன! என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவுவதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,

இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே?
குறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)

காட்சிக் கலப்பினால் கண்களும்,
கேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயினும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன.
காண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள்கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட்டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றனவே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.


பாடல் வழி அறியாலகும் செய்திகள்.

1. ‘முதுநீர்’ என்று கடலைக் குறிக்கப் பயன்படும் இச்சொல் நிலத்துக்கு மூத்தது நீர் என்னும் அறிவியல் உண்மையை உணர்த்துவதாகவும், பழந்தமிழரின் அறிவியலறிவைப் பறைசாற்றுவதாகவும் விளங்குகிறது.

2. தலைவனைச் சேர்ந்போது நலம் பெற்ற கண்ணும் செவியும் அமைதியாக இருக்க உடல் மட்டும் ஏன் கூடலிலும், பிரிதலிலும் வேறுபடுகிறது? என்ற தலைவியின் கேள்வி காதலால் படும் துன்பத்தை மேலும் அழகுறச் சொல்வதாக அமைகிறது.

26 கருத்துகள்:

 1. Nilathu mun Neer Thondri irukkirathu.

  Kaatru Neruppu Ithil Edhu Mudhalil Thondriyathu Edhavadhu Sollapattullatha

  AAgayam than Aarambam sarithane

  adhan pin Kaatru Neruppu Neer Nilam

  பதிலளிநீக்கு
 2. nice post, but sanga tamil songs should be in understandable form, otherwise they are useful only for exam marks.

  பதிலளிநீக்கு
 3. முன்னோர்களின் அறிவுத்திறன்
  வியக்க வைக்கிறது!!!

  பதிலளிநீக்கு
 4. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் முனைவர் அவர்களே! அண்டப்பேருவெளி குறித்த முன்தொகுப்பு சிறப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. நண்பா அறிவியலையும் தமிழையும் இனைத்து எளிமையாய் சொல்லியிருக்கிறீர்கள்

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  பதிலளிநீக்கு
 6. பாடலின் மூலம் விளக்கி இருக்கும் பொருளும் கருத்துக்களும் தகவல்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 7. என்ன ஒரு அருமையான பதிவு! ஒரு SCIENTIFIC FICTION ஓ அல்லது, தற்கால நடைமுறையில் ஏதோ ஒன்றைக் கூறி,அப்படியே வாசகனை
  உள்வாங்கி, ’திடும்’ என்று ஒரு அக/புற
  நானூறு பாடலை விளக்கி அசத்தி விட்டீர்கள்!! எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் இடுகையை ஆராய்ச்சி செய்து P.hd. வாங்கி விடுவேன்!
  அவ்வளவு அழுத்தமான விஷயங்களை ஒரு சின்ன CAPSULEல் அடக்கி விடுகிறீர்கள். இராமாயண இதிகாசத்தில் நிகழ்வுகளையும், இடங்களையும் வைத்தே காண்டங்கள் அமைய,ஒரே ஒரு காண்டம் ஒரு ஜீவனுக்கு..அதாவது சுருக்கமாய் பேசி விரிவாய் விளங்க வைக்கும் சொல்லின் செல்வன் சுந்தரனுக்கு அர்ப்பணிக்கப் பட்டது ஞாபகம் வருகிறது.உங்களைப் படித்தவுடன் என்னுள் கோபமாய் ஒரு கேள்வி எழுந்தது அது இதோ:

  மெல்லத் தமிழ் இனி சாகும் என்று யார் சொன்னது???

  பதிலளிநீக்கு
 8. மிகவும் வியப்பான தகவல் தந்து இருக்கீங்க . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 9. நல்ல கட்டுரை...

  முன்னோர்களின் அறிவுத்திறமை வியக்கச் செய்கிறது.

  உங்கள் தமிழ் அருமை.

  பதிலளிநீக்கு
 10. வாசிக்கையிலே மகிழ்ச்சியாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 11. அறிவியலையும் தமிழையும் இணைக்கும் அந்த புள்ளியில் சொக்கிப்போகிறேன்.,,செம்மொழி மாநாட்டில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 12. @KATHIR = RAY வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..
  காற்று இல்லாவிட்டால் நெருப்பு பரவாது..

  பதிலளிநீக்கு
 13. @ராம்ஜி_யாஹூ இலக்கியங்கள் வானிலிருந்து குதித்தவையல்ல நண்பரே.. வாழ்வியல் பதிவுகள்.. அவற்றை தேர்வுமதிப்பெண்கள் வரையறை செய்யமுடியாது என்பது எனது எண்ணம்.

  பதிலளிநீக்கு
 14. @ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி தங்கள் கருத்துரை எனது கடமையை மேலும் அறிவுறுத்துவதாக அமைகிறது நண்பரே ஏதே பழந்தமிழ் இலக்கியங்களை இணையத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியைத்தான் நான் செய்துவருகிறேன்..

  கருத்துரைக்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 15. @யாநிலாவின் தந்தை முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் பின்தொடர்தலுக்கும் நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 16. நான் கூட எதேச்சையாகத்தான் இந்த வலைப்பக்கத்திற்கு வந்தேன். மிக அருமையான தகவல்களை பறிமாறிக்கொண்டிருக்கிறார். கணிணி தொழில் நுட்பத்திற்கு புதியவர் என்றாலும், அவரது பதிவுகளின் கீழே இணைத்துள்ள தமிழ்99 இணைய விசைப்பலகையை எப்படி என்வலைப்பதிவில் இணைப்பது என்ற எனது ஐயத்தை உடனே தீர்த்து வைத்தவர். வரும் திங்களன்று (10.10.2010) திருமணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
  அன்புடன்,
  எம். ஞானசேகரன்.
  http://ragasiyasnegithiye.blogspot.com

  பதிலளிநீக்கு
 17. இன்று எனது வலைபக்கத்தில். நிச்சயம் உங்கள் கருத்தை எதிர்பார்கிறேன். http://muransuvai.blogspot.com/2011/12/blog-post_29.html

  பதிலளிநீக்கு