வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

பார்மெட்டுக்குப் பின்னும் தரவுகளைப் பெற..



இன்றைய சூழலில் கணினியில் அழிந்த, அழித்த தரவுகளைப் பெற பல இலவச மென்பொருள்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதிலும் விண்டோசு இயங்குதளங்களில் தரவுகளை மீட்டெடுப்பது எளிதாகவுள்ளது. இம்மென்பொருள்களில் இமெஜ் ரிகாலர் என்னும் மென்பொருள் தனிச்சிறப்புடையதாகவுள்ளது.

விரும்பியோ, எதிர்பாராதவிதமாகவோ நாம் நம் கணினிகளைப் பார்மெட் செய்வோம். பின்னர் அந்தக் கணினியிலிருந்த தரவுகள் நமக்குத் தேவைப்படலாம் அப்போது என்ன செய்வது என்று நாம் சிந்திக்கும் வேளையில் இந்த மென்பொருள் துணைபுரிவதாகவுள்ளது. இந்த மென்பொருளை இந்த சுட்டியில் பெறலாம்.

3.75 எம்பி அளவுடைய இம்மென்பொருள் எளியமுறையில் பயன்படுத்தத்தக்கதாகவுள்ளது. இம்மென்பொருளைப் பதிவிறக்கியபின்பு கிடைக்கும் எக்சு வடிவக் கோப்பை இயக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் நம் கணினியில் பார்த்தால் அதற்கான கோப்பு வடிவம் (ஐகான்) இருக்கும் அதில் நாம் தேடவிரும்பும் இடத்தை (டிரைவை) சுட்டினால் தேடல் தொடங்கும்.எல்லா வகையான கோப்புகளும் கிடைக்கும் அதில் நமக்குத் தேவையான தரவுகளை மட்டும் மீண்டும் பெறலாம்.

6 கருத்துகள்:

  1. அன்பின் நண்பா ஒரு சிறிய விஷயத்தை எழுத மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன் அதாவது கணினியை பார்மட் செய்த பின்பு மீண்டும் தகவல்களை மீட்டெடுக்க முயற்சிக்கும் போது எந்த கிளஸ்டர்களில் மீண்டும் தகவல்கள் பதியப்படாமல் இருக்கிறதோ அந்த கிளஸ்டர்களில் உள்ள தகவல்களை மட்டுமே மீட்டெடுக்க முடியும்.

    உதாரணமாக நாம் ஒரு திரைப்படத்தை கணினியில் சேமித்து வைத்திருக்கிறோம் அந்த சினிமாவை நாம் பார்மட் செய்தபின் மீட்டெடுக்க நினைத்தால் எந்த கிளஸ்டரில் தகவல்கள் மீண்டும் பதியப்படாமல் இருக்கிறதோ அந்த கிளஸ்டர்களில் உள்ள தகவல்களை மட்டுமே மீட்டெடுக்க முடியும் அப்படி மீட்டெடுக்கும் போது கோப்பு துண்டு துண்டாக இருக்கும் ஆனால் இயக்கமுடியாத நிலையே இருக்கும்

    சரியான புரிதலுக்கு நன்றி

    வாழ்க வளமுடன்
    ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி நண்பா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உபயோகமான பதிவுக்கு நன்றி...அய்யா

    பதிலளிநீக்கு
  4. உபயோகமான தகவல்கள் நன்றி..

    பதிலளிநீக்கு