வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

நாங்க அப்படி இல்லைங்க..!



மீண்டும் நாங்க ஆட்சிக்கு வந்தால்….
செல்போன் இலவசமா தருவோம்!
டிவிடி பிளேயர் இலவசமா தருவோம்!
வாசிங்மிசின் இலவசமா தருவோம்!
குளிர்சாதனப்பெட்டி இலவசமா தருவோம்!
எல்சிடி டிவி இலவசமா தருவோம்!
ஆனா….
பெட்ரோல் விலை 150
டீசல் விலை 150
கேசின் விலை 800
உள்ளூர் பேருந்தின் குறைந்த பயணச்சீட்டின் விலை 10
காய்கறி விலை 70
மின்சாரம் துண்டித்தல் 12 மணிநேரம்
செம்மொழி மாநாட்டுக்கு 2000 கோடி
2 சி ஊழல் 5 இலட்சம் கோடி என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்…

இது எனக்கு வந்த குறுந்தகவல்.
இதில் எந்தக் கட்சி என்பதை நான் குறிப்பிடவில்லைங்க!
எந்த அரசியல்வாதி (வியாதி)(வியாபாரி) களையும் குறிப்பிடும் நோக்கமும் எனக்கில்லைங்க!
இன்று நடப்பது மன்னராட்சி என்றும் நான் குறிப்பிடவில்லைங்க!
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவே இந்நிலை மாறவில்லை என்பதைத் தான் நான் குறிப்பிட விரும்புறேங்க
.

புறக்காட்சி ஒன்று…

"களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின்6 பனுவற் பாணர் உய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே."

புறநானூறு -127


கடையெழு வள்ளல்களுள் குறிப்பிடத்தக்கவன் ஆய். இவனுடைய சிறப்பை ஏணிச்சேரி முடமோசியார் இவ்வாறு பாடுகிறார்.

திணை – பாடாண்
துறை – கடைநிலை
(தலைவன் வாயிற்கண் நின்று விடை கூறுதல். விடை விடுத்தலும், பெறுதலும் கடைநிலையாகும்.)

சுவைக்கு இனிதாகிய தாளிப்புடைய உணவை வேந்தர் பிறருக்கு வழங்காமல் தாமே உண்டு தம் வயிற்றை நிறைத்துக்கொள்வர். அத்தகைய சிறப்புடைய முரசுபொருந்திய செல்வம் நிறைந்த அரண்மனையுடன் ஒப்பிடத்தக்கதல்ல ஆய் வள்ளலின் அரண்மனை. ஏனென்றால்…..
களாப்பழத்தின் நிறத்தை ஒத்த கரிய கோட்டினை உடைய சிறிய யாழைக்கொண்டு இனிய பாடல் பாடும் பாணர் ஆய் வள்ளலைப் பாடி யானைகளைப் பரிசாகப் பெற்றுச் சென்றனர். அதனால் களிறுகள் இல்லாத அவனுடைய யானைகட்டும் தறியில் மயில்கள் தத்தம் இனத்துடன் தங்கியிருந்தன. மகளிரோ பிறிதோர் அணிகலனின்றி மங்கலநாணை மட்டும் அணிந்திருந்தனர். அதனால் அவன் அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்பர்.

பாடல் வழி...
• “பிறர்க்கு ஈவு இன்றித் தம்வயிறு அருத்தி” என்ற அடிகளின் வழி சுவைமிக்க உணவை பிறருக்குக் கொடுக்காமல் தாமே உண்டு தன் வயிறை மட்டும் நிறைக்கும் சங்ககால மன்னனை இன்றைய ஆட்சி செய்யும் மன்னனுடன் ஒப்புநோக்குங்கள் என்று நான் கூறவில்லை.
• ஏனைய அரசனின் அரண்மனையில் காணப்படும் செல்வநிலையும் ஆரவாரமும் ஆய் வள்ளலின் அரண்மனையில் காணப்படாவிட்டாலும் மக்களின் வயிற்றில் அடிக்காமல் அவர்கள் தேவையை நிறைவுசெய்யும் ஆய்வள்ளலின் அரண்மனை வெறுமையே சிறந்தது என்று அவனது கொடை நலத்தை ஏணிச்சேரி முடமோசியார் சொல்கிறார்.

• இப்பாடலில் புலவர் ஆய்வள்ளலை இகழ்வது போலப் புகழ்கிறார். செல்வர்களைப் புகழ்வதுபோல இகழ்கிறார்.

சங்ககாலத்திலும் தம் வயிற்றை மட்டுமே நிறைத்துக்கொள்ளும் அரசர்கள் இருந்தார்கள் என்பதைப் புலவர் சுட்டிச் செல்கிறார்.

இன்றும் தான் இருக்கிறார்கள் இவர்கள் தம் வயிற்றை மட்டுமல்ல..
தம் ஏழு தலைமுறையினரின் வயிற்றையும் வளர்க்கிறார்கள் என்று ஏணிச்சேரி முடமோசியார் சொல்லவில்லை நான் தான் சொல்கிறேன்.

 மேலும் இப்பாடலின் வழி..
தலைவன் வாயிற்கண் நின்று விடை கூறுதல் “கடைநிலை” என்னும் புறத்துறை என்பது விளக்கப்படுகிறது.
 பாடப்படும் ஆண்மகனின் புகழைப்பாடுவது பாடாண் திணை என்னும் புறத்திணை புலப்படுத்தப்படுகிறது.
 கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் வள்ளலின் கொடை நலம் சிறப்பித்துரைக்கப்படுகிறது.

25 கருத்துகள்:

  1. @மதுரை பாண்டி தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல உவமைங்க முனைவரே....

    புறநானூற்றிலே.... அகநானூற்றிலே என வாய் கிழிய முழங்கும் அரசியல் வாதிகள் இது போன்ற பகிதியை மட்டும் குறிப்பிடுவதில்லை.... நீங்களாவது நினைவுப்படுத்தினீர்கள்.

    பகிர்வு.... புதுமையா இருக்குங்க முனைவரே.... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு,குறுந்தகவலும்,பாடலும்,சித்திரமும் ரசிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய அவல நிலையையும் அன்றைய பாடலையும் இணைத்து தந்து இருக்கும் விதம், அருமை.

    பதிலளிநீக்கு
  6. @ஆயிஷாதங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆயிசா

    பதிலளிநீக்கு
  7. @மகாதேவன்-V.K தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகாதேவன்

    பதிலளிநீக்கு
  8. sms சிரிக்கவச்சாலும் உண்மையை சொல்வது போலவே இருக்கு குணா..இதற்கும் தமிழ் பாடல்களில் உதாரணம் அருமை..

    பதிலளிநீக்கு
  9. //இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவே இந்நிலை மாறவில்லை என்பதைத் தான் நான் குறிப்பிட விரும்புறேங்க.//

    உண்மையச் சொன்னீங்க போங்க...

    அருமையான பதிவுங்க...

    என்ன சொன்னாலும் நாங்க திருந்தமாட்டோமுங்க....

    பதிலளிநீக்கு
  10. முனைவர் அவர்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு.............மக்கள் இதை உணர்ந்தால் நன்று...........

    பதிலளிநீக்கு