வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 24 அக்டோபர், 2011

எதிர்காலத் தொழில்நுட்பம்!!




அறிவியல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்து வருகிறது..
நிலவைப் பார்க்கும் சிறு குழந்தையாய் நானும்..
இன்றைய உலகிற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறேன்..
அறிவியல் மாற்றங்கள் சிலவற்றைக் காணும்போது..
“மனிதனுக்காக அறிவியலா?
அறிவியலுக்காக மனிதனா?“
என்று கூட சிலநேரங்களில் தோன்றும்.
இன்றைய அறிவியல் உலகைக் கண்டு எனக்குத் தோன்றிய கற்பனை“ யான தொழில்நுட்பம் பற்றிய இடுகை இது..
             


                இணையத்தில் உலவும்போது “புதிய தொழில்நுட்பம் “ என்றொரு அறிவிப்பு காணக் கிடைத்தது. சரி என்னதான் நுட்பம் என்று பார்க்கலாம் என்று அந்த இணைப்பில் சென்றேன்..

என்றொரு இணையதளம் அறிவித்தது. நானும் அதில் பயனர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள்நுழைந்தேன்..

நான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திலிருப்பவருடன் பேசக் காத்திருப்பதுபோலவே, எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குப் பேச பலரும் காத்திருந்தார்கள்...

காத்திருப்போர் பட்டியலில் “கபிலன்“ என்ற பெயர் எனக்குப் பிடித்தது. அவருடன் உரையாட முடிவுசெய்து தொடர்புகொண்டேன்.. சில மணித்துளிகளில் அவர் முகம் என் கணினித் திரையில் தெரிந்தது..

இனி எங்கள் உரையாடல்..

நான் : வணக்கம் கபிலன்!
கபிலன் : வணக்கம் முனைவரே!


நான் : கபிலன் இதெல்லாம் உண்மையா!! இதையெல்லாம் இன்னும் என்னால் நம்பமுடியவில்லை?
கபிலன் : ஏன் நண்பரே..!!


நான் : அறிவியல் காலத்தை வென்றுவிட்டதா..?
கபிலன் : இல்லை நண்பரே.. காலம் தான் அறிவியலை வென்றுவிட்டது!  காலத்தின் கோட்பாடுகளை மனிதனால் இன்னும் மாற்றமுடியவில்லை. கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கிறான். அவ்வளவுதான்..


நான் : எது எப்படியோ.. எதிர்காலத்துக்கு வந்துவிட்டேன்.. உங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்திருக்கிறேன்..
கபிலன் : நானும் தான் நண்பரே..


நான் : மகிழ்ச்சி..
கபிலன் : நீங்களே முதலில் கேளுங்கள்  நண்பரே..
நான் : தங்கள் பெயர் பற்றி முதலிலேயே கேட்க வேண்டும் என நினைத்தேன்.. “கபிலன்“ என்ற பெயர் தங்களுக்கு எந்தச் சூழலில் வைத்தார்கள்.
கபிலன் : என் தந்தை ஒரு கணினி வன்பொருள் துறைசார்ந்தவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவர். அதனால் சங்கப்புலவரான கபிலரின் நினைவாக இப்படியொரு பெயர் வைத்துவிட்டார்.


நான் : அப்படியா.. மகிழ்ச்சி!! கபிலன்.. நான் தங்கள் காலத்துக் கல்வி நிலை குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
கபிலன் : எங்கள் காலத்தில் வீட்டிலிருந்துகொண்டோ, பணியாற்றிக்கொண்டோ இணையவழியே கல்வி பயில்வதுதான் வழக்கமாக உள்ளது..


நான் : அட அப்படின்னா எல்லோரிடமும் கணினி இருக்கிறதா..?
கபிலன் : என்ன அப்படிக் கேட்டிட்டீங்க.. மேகக் கணினி நுட்பத்“தால் கணினி இன்றைய சூழலில் எல்லா தரப்பினருக்கும் சென்று சேர்ந்துவிட்டது.

நான் : வியப்பா இருக்கே.. சரி! இவ்வளவு அழகாத் தமிழ் பேசறீங்களே.. எப்படி..?
கபிலன் : மொழி மாற்றி மென்பொருள்கள் பல பெருவழக்கில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதனால் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எழுதப் படிக்க, புரிந்துகொள்ள, பேச முடிகிறது. அதனால் அவரவர் தம் தாய்மொழி மீது பற்றுடையவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
நான் : கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது...


கபிலன் : தமிழரின் நாட்டுப்புற மரபுகள் குறித்த தேடல் எனக்கு என்றுமே உண்டு. இணையத்தில் தேடியபோது நிறைய செய்திகள் கிடைக்கின்றன. உங்கள் பார்வையில் உங்களுக்குப் பிடித்த இரு இணைய பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்யுங்களேன்..
நான் : 1.தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் “பண்பாட்டுக் காட்சிகம்“ என்னும் பிரிவு.
      2.அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களின் 
“வசந்த மண்டபம்“  என்னும் வலைப்பக்கம்.
கபிலன் : பார்க்கிறேன் முனைவரே.. இன்றைய சூழலில் விளையாட்டுகள்  கூட வீட்டுக்குள்ளே கணினிக்குள்ளே விளையாடுவது மட்டுமே விளையாட்டு என்றாகிவிட்டது. உடல் உழைப்பு என்பது சிறிதும் இல்லாமல்  போய்விட்டது. தமிழரின் தொன்மையான விளையாட்டுக்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலவாக உள்ளேன்..
கபிலன் : மகிழ்ச்சி முனைவரே இதையும் பார்க்கிறேன்..
தனித்தமிழ்! தனித்தமிழ்! என்று இலக்கிய வரலாறுகளில் ஒரு காலம் குறிப்பிடப்பட்டுள்ளதே.. அப்படின்னா என்ன? தனித்தமிழ் என்றால் மொழியைத் தனிமைப்படுத்துவதா? தனிமைப்படுத்திக்கொள்வதா? எனக்கு இந்தக் கோட்பாடே புரியவில்லை..?
நான் : பிறமொழிக் கலப்பால் தாய்மொழி சீர்கெட்டுவிடும் என்று மொழியைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சி இது கபிலன்.


கபிலன் : அட! வியப்பாக உள்ளதே.. பிற மொழி கலந்தால் அம்மொழி செத்துவிடுமா..? அப்படியென்றால் வடமொழி கலந்தபோதே தமிழ் மொழி செத்திருக்கவேண்டுமே..


நான் : இப்படித் தனித்தமிழ்க் கோட்பாடுகள் அன்று தோன்றியதால் தான் இன்று எதிர்காலத்தில் கூட உங்களால் தமிழ் பேச முடிகிறது.. இல்லையா..?


கபிலன் : அது அப்படியல்ல முனைவரே...
“அறிவுக்கு மொழி  தடையல்ல!
 இன்று உலகமே பேசும் ஒரே மொழி இணையமொழி!“
உங்கள் காலத்தில் இயல், இசை, நாடகம் என்று அதோடு நின்றுவிடாமல்..
இணையத்தமிழ் என்று இலக்கிய, இலக்கணச் செல்வங்களைப் பதிவு செய்தீர்களல்லவா.. அந்த அரிய செயல் தான் இன்று தமிழ்மொழியைக் காத்து நிற்கிறது..


நான் : அட!! அப்படியா.. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது..
கபிலன் : உங்களோடு உரையாடியதில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை..
நான் : எனக்கும் தான் கபிலன்..


கபிலன் : பணி அழைக்கிறது... மீண்டும் உரையாடுவோம்...
நான் : நன்றி கபிலன் தங்களோடு உரையாடியதில் பல உண்மைகளை உணர்ந்து கொண்டேன் மகிழ்ச்சி.. மீண்டும் உரையாடுவோம்..

51 கருத்துகள்:

  1. வியப்பாக இருக்கிறது . நண்பா

    பதிலளிநீக்கு
  2. அன்புநிறை முனைவரே,
    புதிய தொழில்நுட்பம் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.
    அறிவியலின் வளர்ச்சி வானுயர்ந்து வளரும் இவ்வேளையில்
    எண்ணி எண்ணி வியக்க கோடானுகோடி செய்திகள் இருக்கின்றன
    என்று பறைசாற்றுகிறது.
    நண்பர் கபிலனுடன் தங்களின் உரையாடல் படித்தேன். வாழ்வில் தான்
    எத்தனை தேடல்கள் என்பதை உள்ளூர உணர வைத்தது.

    என்னே பாக்கியம் செய்தேன் முனைவரே!!!!
    எனக்கும் என் படைப்புகளுக்கும் சாகித்ய விருது கிடைத்தது போல
    மிகவும் பெருமை கொண்டேன். இன்னும் என் எழுத்துக்களை
    பட்டை தீட்ட வேண்டும் என என்னுள் ஒளி பாய்ந்தது.
    என் மீதும் என் படைப்புகள் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு
    என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    அன்பன்
    மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  3. கற்பனை நிஜமானாலும் ஆகலாம் ஐயா.நல்ல பதிவு.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. முனைவரின் அறிவியல் கதை அருமையாக இருக்கிறதே... தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் முனைவரே வசந்த மண்டபம் மகேந்திரனை குறிப்பிட்டதற்கு கோடானு கோடி நன்றிகள்.. அவரின் சேவை எதிர்கால சமூகத்திற்கு தேவை என்பதை பலமாய் கூறுவேன் பதிவுலகில் எனக்கு பிடித்த பதிவர்களில் அவருக்கு ஒரு முக்கிய இடமுண்டு.. இத்தனைக்கும் நான் அவரோடு எந்த தனிப்பட்ட உறவுகளையும் பேணியதில்லை மகேந்திரனுக்கு எனது வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளேன்..  அவரை போன்றோர்களால்தான் இன்னும் கிராமியக்கலை வடிவங்கள் உயிரோடு இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. அருமையான தகவல் விவாதம் நண்பரே

    த.ம 7

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. தாங்கள் கபிலனோடு கூடிய உரையாடல் அருமை... நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. கால வேறுபாட்டில் கதைக்கும்(!) கதை அருமை. நல்ல கற்பனை.

    வசந்த மண்டபம் நல்ல அறிமுகம். குழு இணைந்து விட்டேன். நன்றி.

    தமிழர்களின் விளையாட்டில் இயற்கைக்குத்தான் அதிக இடம். பயனுள்ள தகவல்.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு தகவல் .....
    என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  10. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

    பதிலளிநீக்கு
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. @மகேந்திரன் தாங்கள் என் அன்பை முழுமையாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள் மகேந்திரன்..

    தடம் மாறாது தங்கள் எழுத்துக்கள் மண்ணின்மரபுகளைத் தாங்கிச் செல்ல மனம் நிறைய வாழ்த்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  14. @RAMVI ஆமா இராம்வி..

    தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. @காட்டான் இது நம் மரபுகளாலும் பண்பாட்டுக் கூறுகளாலும் ஏற்பட்ட தொடர்பு நண்பரே..

    தங்கள் அன்புக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. @M.R நன்றி நண்பா..

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. @ரசிகன் தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசித்தலுக்கும்... கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா..

    தங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்து மகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  19. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

    பதிலளிநீக்கு
  21. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  22. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. அருமை.......அருமை

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  25. @shanmugavel வருகைக்கு நன்றி நண்பா..

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  27. எதிர் காலத்துக்கு கூட்டிக்கிட்டு போறீங்க...

    பதிலளிநீக்கு
  28. கற்பனையானது என்றாலும் உண்மையாகிவிடும் நாள் வரும் என்றே நினைக்கின்றேன் முனைவர் அவர்களே

    நீங்கள் என் வலைதளத்தினை
    ///தங்கள் தள வடிவமைப்பும்
    இனம் இனத்தோடு சேரும் என்ற வலைஇலக்கு மொழியும் அழகாகவுள்ளன நண்பா..///
    என்று பாராட்டியது என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது நன்றி முனைவர் அய்யா அவர்களுக்கு

    பதிலளிநீக்கு
  29. வித்தியாசமாக அருமையாக சொல்லவேண்டியதை
    மிக அழகாகச் சொல்லிப் போகும் திறன் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 14

    பதிலளிநீக்கு