வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 24 ஜூன், 2014

பன்மொழிப் புலவர்

கா. அப்பாத்துரை (ஜூன் 241907 - மே 261989தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர்எனப் பெயர் பெற்றவர்.
அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.

எழுதிய நூல்கள்


தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா.

பன்மொழிப்புலவரின் பிறந்தநாளான இன்று அவரது பணிகளை எண்ணிப்பார்ப்பதில் பெருமிதம் கொள்வோம்.

11 கருத்துகள்:

 1. வணக்கம்

  தமிழ் அறிஞர் பற்றி தங்களின் பதிவின் வழி அறிந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அறியாதன அறிந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. கா. அப்பாத்துரை ஐயா அவர்களைப்பற்றி அறிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. பன்மொழிப் புலவர் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 5. "குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு" என்ற நூலைப் படித்தேன். அவரது பணி அளப்பரியது!

  பதிலளிநீக்கு